தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்பு உருக்காலைக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. ஒரிசா மாநில அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிட்ட பின்னும், அப்போராட்டம் பின்னடைவுக்கு உள்ளாகவில்லை. போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். இப்படிபட்ட நிலையில் இப்பிரச்சினையில் மைய அரசு திடீர் உத்தமர் வேடம் போடக் கிளம்பியிருக்கிறது.இப்படி மொத்த இந்தியாவையும் டாடாவுக்கும், பிர்லாவுக்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும், மாக கார்பரேட் முதலாளிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துவிடத் உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு பயங்கரவாதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறிவருகிறது.
போஸ்கோ நிறுவனம், ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்புச் சுரங்கம், இரும்பு உருக்காலை மற்றும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்வதற்கான துறைமுகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளின்படி சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்றுள்ளதா? அந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபொழுது இந்திய வனச் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? இத்திட்டத்தால் தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா? அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உள்ளனவா? – ஆகியவை குறித்து ஆராய மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் நான்கு பேர் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தது. மீனா குப்தா என்பவர் இக்கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோ திட்டத்திற்குத் தேவைப்பட்ட அனுமதிகளை வாரிவழங்கியபொழுது, மீனா குப்தா அத்துறையில் செயலராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படிபட்ட பின்னணி கொண்டவரை கமிட்டியின் உறுப்பினராக மட்டுமின்றி, தலைவராகவும் நியமித்ததில் இருந்தே மைய அரசின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.மீனா குப்தாவும் மைய அரசை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கவில்லை.இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க போஸ்கோவிற்கு கால அவகாசம் அளிப்பதன் மூலமும், சுற்றுப்புறச் சுழல் பாதிப்பு தொடர்பாக இன்னும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு போஸ்கோவிற்கு உத்திரவிடுவதன் மூலமும் இத்திட்டத்தைத் தொடர அனுமதிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபொழுதில் பழங்குடியின விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஊர்மிளா பிங்க்ளே, முன்னாள் இந்திய வன அளவை இயக்குநர் ஜெனரல் தேவேந்திர பாண்டே, சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞரும் மனித உரிமை ஆர்வலருமான வீ.சுரேஷ் ஆகிய மற்ற மூன்று உறுப்பினர்கள், “உண்மைகளை மூடிமறைத்தும் சட்ட விரோதமான முறையிலும் போஸ்கோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக’’த் தமது அறிக்கையில் நிரூபித்துள்ளதோடு, போஸ்கோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
நன்றி: வினவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment