
இந்தியாவுக்கு வந்த உடன், "விசா' எடுக்கும் முறை மேலும் சில நாட்டு பயணிகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர், பின்லாந்து, நியூசிலாந்து, லக்சம்பர்க், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இந்தியாவுக்குள் நுழைந்த உடன் விசா பெறும் முறை நடைமுறையில் உள்ளது. சென்ற ஜனவரி மாதம் அமலுக்கு வந்த இந்த முறையை, இதுவரை ஐந்தாயிரத்து 644 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். தற்போது ஜன., 1 முதல் கம்போடியா, வியட்னாம், லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இந்த முறை நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைத்த இந்த முறைக்கு, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment