கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகா ஆயங்குடி என்ற ஊரில் புற்றுநோயால் மக்கள் அதிகமாக பாதிகப்படுவதும் அதனால் இறப்பதும் வாடிக்கையாகிவிட்டது . இந்த நோயினால் இன்றுவரை வயது வரம்பின்றி பாதிப்புக்குள்ளாகி மரணம் வரை சென்று பாதிப்படைந்த மக்கள் ஏராளம் எனலாம். நமது இளைய தலைமுறையினர் இன்றும் இந்த நோயின் விபரிதத்தை உணராமல் நமக்கு நெருக்காமானவ்ர்களின் பிள்ளைகள் இன்றும் மரைத்து சிகரட் அடிக்கின்றனர். இதற்க்கென தனி வசதியை கடையின் உரிமையாளர் செய்து கொடுத்துள்ளார். இது இப்படி இருக்க. சமீப காலமாக பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் காரணமாக இறப்பதும் அதிக அளவில் நடந்துள்ளது.
1. எதனால் பெண்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்?
2. இந்நோய் வருவதற்கு என்ன காரணம் ?
3. இந்நோயின் ஆரம்ப நிலையை எப்படி அறிந்து கொள்ளுவது ?
இந்நோய் பற்றி பெண்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நோய் பற்றி விவரம் அறிந்தவர்கள் அது சம்மந்தமாக ஆலோசனையும்,
புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றியும், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த விளக்கங்களையும் தருமாறு இந்திய மருத்துவ இலாக்காவை கேட்டு கொள்ளவதோடு.
பள்ளி மற்றும் பாடசாலையின் அருகில் 18வயதுக்கு உட்பட்ட மாணவ பருவத்தினருக்கு
பான் , சிகரட். குட்கா. போன்ற பொருள்களை விற்பனை செய்யும் கடைகரார்கள் மீது கடுமையான தண்டனை வழங்க முற்பட வேண்டும்.
செய்யுமா தமிழக, இந்திய அரசுகள்?
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment