கோவை,அக்.12: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவக்கப்பட்ட நாளான விஜயதசமி நாளில் (வரும் 17ம் தேதி), கோவை நகரில் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு நடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறிய போலீசார், அனுமதி மறுத்துள்ளனர்.
தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்க, தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளதை, அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கோவை மாவட்ட தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளர் ஸ்ரீராமன் கூறுகையில், "சாலையில் 500 தொண்டர்களுடன் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டோம்; போலீசார் மறுத்துள்ளனர். சட்டப்படி அனுமதி பெற, சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளோம். கோவை நகரில் இதற்கு முன், தி.மு.க., - டி.ஒய்.எப்.ஐ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்பினரின் பேரணிகள் முக்கிய சாலைகளில் நடந்துள்ளன. இதனால், எங்களுக்கும் அனுமதி தர வேண்டுமென கோர்ட்டில் முறையிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்; பல்வேறு இடங்களுக்கும் சென்று, பயிற்சியில் ஈடுபடக்கூடாது என தொண்டர்களை மிரட்டி வருகின்றனர்; இதை கண்டிக்கிறோம்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment