
"அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஏற்பட்டிருக்கும் தடைகளை அகற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது இந்திய முஸ்லிம்களின் உரிமை" என இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்ததாகவும். அதனால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பிரச்னையை பேச்சுமூலம் சுமுகமாகத் தீர்ப்பதற்கு முகமது ஹாசிம் அன்சாரி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் வரவேற்பில்லை.
No comments:
Post a Comment