Oct 7, 2010

ராமருக்கு கோவில் கட்டும் வரை என் மனம் அமைதி அடையாது - அத்வானி.

ஜெய்ப்பூர்,அக்.7:ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது மனதின் ஆசை. ராமர் கோவில் கட்டப்படும் வரை எனது மனம் அமைதி அடையாது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி அத்வானி. ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது மனதில் உள்ள ஆசை. எனவே ராமர் கோவில் கட்டும்வரை எனது மனது அமைதி அடையாது. ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அக்டோபர் மாதம் 25-ந்தேதி நான் சோமநாதபுரத்தில் இருந்து ரத யாத்திரை (என்கிற ரத்த யாத்திரை) தொடங்கினேன். ஆனால் அந்த (ரத்த) யாத்திரை முடிவு பெறவில்லை(?). நான் இங்கு அக்டோபர் 25ம் தேதிதான் வருவதாக இருந்தது. ஆனால் எனது அயோத்தி (ரத்த யாத்திரை) முடிவடையாததால், நான் அக்டோபர் 25ம் தேதி வேறு எங்கும் செல்வதில்லை. சோமநாதபுரம் கோவிலுக்கு மட்டுமே செல்வது வழக்கம்." என்றார்
ஹிந்து பயங்கரவாதி அத்வானி.

No comments: