
அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 32 பிரதேசங்கள் பிரச்சனைக்குரிய பகுதிகளாக உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதில் 4உ.பி யிலாகும்.பாதுகாப்பு ஏற்பாட்டினை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மதிப்பீடுச் செய்தார். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற ப.சிதம்பரம் செயல்பாடுகளை ஆய்வுச் செய்தார். பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு துணை ராணுவப் படையை கொண்டு செல்ல விமானப்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில்
உள்ளன.
தீர்ப்பைத் தொடர்ந்து வெளியிடப்படும் பல்வேறு மத அமைப்புகளின் அறிக்கையையும் கண்காணிக்க உள்துறை அமைச்சகம் மாநிலங்களிடம் உத்தரவிட்டுள்ளது.தீர்ப்பைக் குறித்த ஊகமான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
No comments:
Post a Comment