Sep 30, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை.

புது டெல்லி செப்டம்பர் 30:பாபர் மஸ்ஜித் நில உரிமை கோரும் வழக்கு தொடர்பான அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னோ பெஞ்ச் கிளை அளித்த தீர்ப்பின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை. நீதிமன்ற உத்தரவின் முக்கிய நோக்கம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பகுதியாக பிரித்து இரண்டு பகுதியை இந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பங்கிட்டுக்கொடுப்பது.மேலும் சிலை வைக்கப்பட்ட பகுதியான மஸ்ஜிதின் மையப்பகுதி இந்துக்களுக்கு கொடுக்கபடும் என்றும் தெரியவருகிறது .

இந்த தீர்ப்பு ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாததால் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.
இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பே யொழிய சாட்சியங்கள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. எந்த ஒரு மனுதாரரும் நிலத்தை தங்களுக்கிடையே பங்கிட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை.

மேலும் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டால் பல வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மத சின்னங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும்.
வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் கூறியது போல உயர்நீதி மன்ற தீர்ப்பு இறுதி தீர்வல்ல, எனவே உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். உ பி சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாபர் மஸ்ஜித் நிலத்தை மீட்க இந்திய முஸ்லிம்கள் சட்டரீதியாகவும் ஜன நாயக வழிமுறைகளில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வார்கள்.அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவும் பல்வேறு சமூகத்திற்கிடையேயான நல்லுறவுகளை மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

No comments: