புதுடெல்லி,ஆக22:கர்நாடகாவில் மஹாலிங்கபுரியில் தேவதாசிகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் இரு மாணவர்களுக்கு உதவி புரிந்ததைத் தொடர்ந்து பாஸ்டரை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் தாக்கினர். இண்டர்நேசனல் காலேஜ் ஆஃப் கல்சுரல் ஸ்டடீஸின் இரண்டு மாணவர்களுக்கு பிலிம்ஷோ நடத்த உதவி புரிந்ததுதான் பாஸ்டர் அனூப் தாக்கப்பட்டதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
கடந்த 19 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிலிம்ஷோ நடந்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த 350 பேர்கள் அடங்கிய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்க கும்பல் டி.வி.டி ப்ளேயர், ப்ரொஜக்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அடித்து உடைத்துவிட்டு பாஸ்டரையும் தாக்கினர்.ஆனால் போலீஸ் பாஸ்டரை ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றது. மறுநாள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்த இரு பெண்களையும் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளது போலீஸ்.இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தலித் தலைவர்களும், ஆல் இந்தியா கிறிஸ்தவ கவுன்சில் பிரதிநிதிகளும் ஸ்டேசனுக்கு சென்றதைத் தொடர்ந்து போலீஸ் அவர்களை விடுவித்தது.
சிந்திக்க: இந்திய காவல் துறை மற்றும் உளவுத்துறை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஒரு துணை அமைப்பு போல் செயல்படுவதை பார்க்கமுடியும். இது எல்லாம் இனி இந்தியாவில் நீங்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பதை காட்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment