கோலாலம்பூர், ஆக.23: வெளிநாடுகளில் இருந்து தங்களது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பணிபுரிய முனையும் தொழிலாளர்களை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையை (விரல்ரேகைப் பதிவு) அறிமுகம் செய்ய மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது.
இதை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது: மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நாட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு வெளிநாட்டவரின் விரல் ரேகை உள்ளிட்ட அவர்களின் அனைத்து தகவல்களையும் திரட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இதற்கான பணி முழுவீச்சில் தொடங்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment