Jun 12, 2010

தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மூலமாக இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

பிராட்பேண்ட் வயர்லெஸ் ஏக்ஸஸ்" எனப்படும் கம்பியில்லா அதிவேக இணையத் தொடர்புக்கான உரிமங்களை ஏலத்தின் விட்டதன் மூலம் இந்திய அரசுக்கு சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே 3ஜி, அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விட்டதில், சமீபத்தில் அரசுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

அதிகவேக இணையத் தொடர்பு வசதி மூலம் இணையத் தொடர்பு மிக விரைவாகக் கிடைப்பதுடன், இணையம் மூலம் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளையும் பெற முடியும். மேலும், ஒலி மற்றும் அதிவிரைவு தகவல் வசதிக்கும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த சேவைக்கான உரிமத்தை இந்திய நிறுவனங்களுடன், வெளிநாட்டு நிறுவனங்களும் பெற்றுள்ளன.

ஏலதாரர்களிடமிருந்து இந்த மாத இறுதியில் அந்தத் தொகை அரசாங்கத்துக்கு வந்து சேரும். அதையடுத்து இந்த இரண்டு சேவைகளின் மூலம், அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமான் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, 3ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை விட பலமடங்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

No comments: