
சீனாவின் பெருஞ்சுவர் பழுதடைந்துள்ள நிலையில் அதனை புனரமைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் கிறிஸ்துவிற்கு முன்னர் 770-476ஆம் ஆண்டுகளில் 8851 கிலோமீற்றர் நீளத்திற்கு குய் மன்னர் வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்டது.யுயெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாரம்பாரிய சின்னத்தை பார்வையிடுவதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சீனாவிற்கு வருகை தருவது யாரும் அறிந்ததே.பாதுகாப்பு அரணாக செயற்பட்ட இந்த சுவர் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சேதமாகியுள்ள இடங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே இந்த சுவரை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சீன ஷாண்டாங் மாகாணத்தின் 620 கிலோமீற்றர் தொலைவிற்கு ஜினான் நகரிலிருந்து குயிங்டோ வரையான பெருஞ்சுவர் பகுதி சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதற்கமையவே விரைவில் சீன பெருஞ்சுவர் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment