Mar 21, 2017

மரம்வளர்ப்பு மற்று சீமைக்கருவேல மரம் ஒழிப்பு!


மரம் வளர்ப்போம்! மழைவளம் காப்போம்!

நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காட்டு வளம் இருந்தால் மட்டுமே சராசரி மழையளவுக்கு உத்தரவாதம் உண்டு. தற்போது மழையளவு குறைந்திருப்பதற்குக் காடுகள் குறைந்ததும் ஒரு காரணம். நாம் வாழும் பூமி வெப்பம் அடைவதை தடுக்க மரம் வளருங்கள் என்று விஞ்சானிகள் அலறுகிறார்கள்.

மரங்கள் இன்றி நாம் உயிர்வாழ இயலாது. மனிதன் சுவாசித்து வெளியேற்றும் நச்சு காற்று, வாகனங்கள், தொழில்சாலைகள் வெளியேற்றும் நச்சு காற்று  இவைகளை திரும்ப நாம் சுவாசிக்கும் ஆக்சிஸனாக மாற்றும் பெரும் பங்கை மரங்கலே செய்துவருகின்றன.
மரங்கள் அதிகம் இல்லாததால் சூரிய வெப்பம் பூமியை நேரடியாக தாக்கி பூமியில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்துகிறது. மேலும் மழை வளத்தையும் பாதிக்கிறது.

சீமை கருவேல மரம் (உடைமரம்) ஒழிப்பு !

தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு சீமை கருவேல மரங்கள் ஒரு முக்கிய காரணம். இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் நாற்பது அடி  ஆழத்தில், நாற்பது அடிஅகலத்தில் வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது. 

ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றால் தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும்  உறிஞ்சி விடுகிறது. மேலும் இம்மரம் மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது. 

இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை ( ஆக்சிசன்) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது. இப்படி மனிதர்களுக்கு, இயற்க்கைக்கு, நீர் ஆதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் சீமை கருவேல மரத்தைநதூரில் இருந்து முற்றிலும் ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம். 

*********************************************************************************
இதுபோல் மரம்வளர்ப்பு மற்று சீமைக்கருவேல மரம் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கையை பிரிண்ட் செய்து உங்களது ஊர்களில் விநியோகம் செய்யுங்கள். மக்களிடம் விழிப்புணர்வு வரட்டும்.  

2 comments:

Yarlpavanan said...

சிறப்பாக அலசி உள்ளீர்கள்


மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

Nam Kural said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up... We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்