Sep 22, 2015

இறுதி யுத்தத்தில் நடந்த துரோகங்கள்!

டிசம்பர்- 2008ல் ஒரு கிழமை, காபூலில். நேட்டோ கரவன் ஒன்று புறப்பட்டு சென்ற போது திடீரென ஒரு குண்டு வெடித்தது. அது ஒரு தற்கொலை குண்டு தாக்குதல். 

கூடவே பரவலான துப்பாக்கி சூடுகள். விஷேட கொமாண்டோக்கள் கவர் எடுத்து சூடு வந்த திசையை அவதானித்து பயர் பண்ணிய போது பதில் இல்லை. திடீரென ஒரு அலறல் சத்தத்துடன் அவர்கள் மேல் ஒரு நபர் பாய்ந்தார் பின்புறம் இருந்து. சுதாரித்து கொண்ட கொமாண்டோஸ் அவரை மடக்கி பிடித்து விட்டனர். 

கைது செய்யப்பட்டவர் தலிபான் தற்கொலை தாக்குதல் போராளி என்பது தெரியவந்தது. டெட்டனேட்டர் சமயம் பார்த்து ஸ்பார்க் ஆகாததால் குண்டு வெடிக்கவில்லை. அவரது உடலில் கட்டி இருந்த பெல்ட் ரக வெடிகுண்டு நீக்கப்பட்டு விசாரணை அதிகாரி முன்னுள்ள மேசையில் வைக்கப்பட்டது. அதை பார்த்த அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

அந்த குண்டு ஆர்.டி.எக்ஸ் ரக பிளாஸ்டிக் மெட்டீரியலால் ஆனது.  இந்த விபரம் அறிந்ததும் அமெரிக்க ராணுவ மற்றும் CIA உளவுத்துறை அதிகாரிகள் அங்கே விரைந்து வந்தனர். தலிபான்கள் வெடிமருந்துகளை பயன்படுத்தி சாதாரண ரக குண்டுகளை மட்டுமே தயாரிக்க தெரிந்தவர்கள். ஆனால் இம்முறை பயன்படுத்தியதோ “பெல்ட் டைப்” ஆர்.டி.எக்ஸ் ரக பிளாஸ்டிக் வெடிகுண்டுகளை. இவை விலை உயர்ந்தவை அவர்கள் கரங்களிற்கு கிடைக்க வாய்ப்பு இல்லாதவை.

பின்னர் நடந்த விசாரணையில், இந்த ஸிலிம் பெல்ட் டெக்னோலொஜியை உலகிலே பயன்படுத்தும் ஒரே இயக்கத்தினர் விடுதலைபுலிகள் மட்டுமே என்று தெரியவந்தது. ரஜீவ் காந்தி படுகொலையில் இந்த பிளாஸ்டிக் ரக வெடிகுண்டே பயன்படுத்தப்பட்டது. இப்போது அதே ரக தாக்குதல் ஆப்கானிஸ்தான் வரை வந்து விட்டது. நாளை பக்தாத் வரை வந்தால் என்று அமெரிக்கா யோசிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டுகள் இதே போர்முலாவில் நிகழ ஆரம்பித்தன. தேடிப்பார்த்ததில் புலிகளது இன்டர்னேஷனல் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்தது.

தமிழீழம் விடுதலை புலிகள் இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் இலங்கை அரசு, அதன் இராணுவம், இந்திய அரசு, சீனா,மற்றும் காட்டி கொடுத்தபோராளி அமைப்புக்கள் வெவ்வேறு சுயலாபங்களுக்காக உறுதியாக இருந்தன. இதைதொடர்ந்து விடுதலை புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தின் கடைசி நாட்களில்  உங்களை காப்பாத்த இரண்டு அமெரிக்கன் அப்பாச்சி ஹெலிக்கப்டர்கள் முள்ளிவாய்க்காலிற்கு வரும், உங்கள் போராளிகளை மீட்டுச் செல்ல பிலிப்ஸ் -2 கப்பல் வரும்  என்று சொல்லியே அவர் கதையை முடித்து விட்டது அமெரிக்கா.  

No comments: