மார்ச் 26: ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சிந்திக்கவும்: இந்திய அரசால் பாதிக்கப்படாத ஒருதமிழனும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழர்கள் மீது பல்வேறு அரசியல், பொருளாதார, இன அடக்கு முறைகளை ஏவி வருகிறது மத்திய ஹிந்தி அரசு.
அதற்க்கெதிராக, வெள்ளையனை எதிர்த்து வரிகொடா இயக்கம் நடத்தியது போல் மீண்டும் வரிகொடா இயக்கமும், மத்திய அந்நிய அரசின் அடக்கு முறையில் இருந்து விடுதலை பெற மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தையும் நடத்த வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்.
"மன்மோகனின் வடக் ஹிந்திய அரசே உனக்கு எதற்க்கடா தமிழன் வரிகொடுக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இனவெறி பிடித்த சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் பொழுது நீயும், உன் ராணுவமும் எங்கடா போனீர்கள்"!
"எம்தொப்புள் கொடி உறவுகள் கொத்துகொத்தாய் கொல்லப்படுவதற்கு குண்டுகளையும், ராடார்களையும் கொடுத்துதவி இனப்படுகொலை செய்ய நீயும், உனது ராணுவமும் துணை நின்றீர்களே எதற்காடா தமிழன் உனக்கு வரி கொடுக்க வேண்டும்".
"தமிழர்களுக்கு தேவையான மின்சார வளங்கள் தமிழகத்தில் இருந்தும், அந்நிய மாநிலங்களுக்கும், கார்பரேட் கொள்ளையர்களுக்கும் மின்சாரம் கொடுக்க தமிழர் வளங்களை அழித்து, தமிழர் தலையில் கொல்லி வைக்கும் உனக்கு எதற்காடா தமிழன் வரிதர வேண்டும்".
"வடக்கிந்திய மன்மோகன் சிங்கே! தமிழக வயல்களில் நாத்து நட்டிநாயா? தமிழ் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? இல்லை நீ எங்களுக்கு மாமனா மச்சானா? தமிழ் பெண்களின் கற்பை சூறையாட அமைதிப்படை நடத்தினாய், தமிழர் விடுதலை வீரர்களை கொன்று குவிக்க ராஜபக்சேவின் கூட்டாளி ஆனாய் உனக்கு எதற்க்கடா தமிழன் வரிகொடுக்க வேண்டும்".
3 comments:
ஜெ. ஜெ காயம் அடைந்த நடிகைக்கு வருத்தம் தெரிவிகிரர்கள்.... நடிகன் ரஜினி நீதிமன்றத்தால் குற்றம் சாட்ட பட்ட மராட்டி நடிகனுக்கு அதரவுக்கு..... ஆனால் தீக்குளித்த ஒரு மாணவன் மாணவிக்கு ஒரு இறங்கல் குட தெரிவிகல.... என்ன சொல்லுவது சொலுங்கள்.....
சரியா சொன்னீங்கள் ரூபன் ..... உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே.
இந்தியாவில் ஒரு கலவரத்தை உருவாக்க இலங்கையிலிருந்து வந்திருக்கீங்களா...
Post a Comment