மார்ச் 28/2013: தமிழ் இன மக்களை இனப்படுகொலைச் செய்த குற்றத் திற்காக இலங்கை அரசின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற மாணவர் அமைப்பின் தேசிய செயற் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் நீர்த்துப்போன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.ந அவையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை. இலங்கை அரசின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றத்திற்காக விசாரணை நடத்தவேண்டும்
எனவே ஐ.நா அவையே ஒரு தீர்மானம் எடுத்து இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான சர்வதேச குழுவை நியமிக்கவேண்டும். இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் முழு ஆதரவை அளிக்கும் என்று தேசிய செயற்குழு தெரிவித்தது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது தம்பி உட்பட ஒன்பது தமிழ் இளஞ்சர்கள் தேசிய செயற்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 comments:
nalla pakirvu!
nantri!
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே.
Post a Comment