Feb 6, 2013

சினிமா துறையா? சர்ச்சைகள் துறையா?

பிப் 06/2013: இயக்குனர் மணி ரத்தினம் இயக்கிய கடல் படம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த படம் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
சிந்திக்கவும்: ரோஜா முதல் மும்பை வரை முஸ்லிம்களை தாக்கி படம் எடுத்தார் மணி ரத்தினம். இப்பொழுது கிறிஸ்தவர்களை தாக்கி படம் எடுக்கிறார். ஒரு படத்தில் ஒரு சமூகத்தை கேவலமாகவோ அல்லது புண்படுத்தியோ வரும் காட்சிகள் அந்த இயக்குனர் அறியாமல் செய்து விட்ட  பிழையாக எண்ணி விட முடியாது.

இவர்கள், அறிந்தேதான் நச்சி கருத்துகளை பஞ் டயலாக் மாதிரி, குத்தி காட்டுவது போல், அல்லது அந்த படத்தை பார்க்கும் பொழுது அந்த காட்சிகள் எல்லோர் மனதிலும் பதியும்படி வடிவமைக்கிறார்கள். இதுவெல்லாம் அவர்கள் அறிந்தே, தெரிந்தே! சொருகும் வசனங்களும், காட்சிகளுமே ஆகும். 

சினிமா மக்களை மகிழ்விக்க எடுக்கபடுவது, நாங்கள் மக்கள் கலைஞசர்கள், மக்களை மகிழ்விப்பவர்கள் என்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சொல்வது உண்மையாக இருந்தால்? அது எல்லா தரப்பு மக்களையும் சந்தோசப்படுத்தும், மகிழ்விக்கும் ஒரு ஊடகமாக இருக்க வேண்டும். அதைவிட்டு  சர்ச்சைக்கூரிய ஊடகமாக இருக்க கூடாது.

இயக்குனர் பாரதி ராஜா, பல்வேறு கிராமத்து கதைகளை தந்தவர். அது போல் டைரக்டர் சங்கர், தங்கர் பச்சன், சேரன், பாலா, ரவிகுமார், பாலாஜி, sp முத்துராமன் இப்படி சிறந்த டைரக்டர்கள் ஒருபுறமும். கே.பாலச்சந்தர், மணி ரத்தினம், கமல ஹாசன் போன்ற கேவலமான தயாரிப்பாளர்கள் மறுபுறமும் என்று தமிழ் சினிமா காட்சி அளிக்கிறது.

கே.பாலச்சந்தர் குடும்ப உறவுகளை சிதைக்கும் படங்களை தயாரித்து  மேலை  நாட்டு  கலாச்சாரத்தை தமிழில்  இறக்குமதி செய்தவர். மணி ரத்தினம் உண்மைகளை மறைத்து சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து தாக்கும் படங்களை எடுத்து சர்ச்சைக்குள்ளானவர். கமல ஹாசன் லிவிங் டுகெதர் என்கிற கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்வதை, கவுதமி மூலம் தமிழ் சமூகத்திற்கு கற்று கொடுத்தவர்.
எந்த மதத்தையும் பற்றி படம் எடுக்கலாம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்கள் எல்லாம் இப்படியா சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எல்லா மதத்தினரும் விரும்பி பார்த்தார்கள். தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெயசங்கர் படமெல்லாம் யாரையும் தாக்கி எடுக்க பட வில்லையே. ஆனால் நம்ம புல் தடுக்கி கேப்டன் விஜகாந்த் மட்டும் தீவிரவாதிகளோடு சண்டை போட்டு எதிர் கட்சி தலைவர் ஆகி விட்டார். விஜயகாந்த் மாதிரி எல்லோரும் ஏதோ ஒரு லாபத்தை கருதியே இப்படி படம் எடுக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அட நம்ம ரஜினிகாந்த்! இவரால் யாருக்கும் பிரோஜனம் இல்லாவிட்டாலும் தொந்தரவு இல்லை. மதவாதியான உள்ளூர் சூப்பர் ஸ்டாருக்கு பிற மதத்தினரை மதிக்க தெரிந்திருக்கிறது. ஆனால் முற்போற்க்கு சிந்தனைவாதியான உலக நாயகனுக்கு பிற மதத்தினரை  நன்றாக  மிதிக்க தெரிந்திருக்கிறது. எந்த சமூகத்தை பற்றியும் படம் எடுக்கலாம் அதில் ஒரு நடுநிலைமை பேணினால் இது போன்ற சர்ச்சைகள் வராது. கலை என்பது மக்களுக்காக என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் பாராபட்சம் எதற்கு?
 *மலர் விழி*

4 comments:

Anonymous said...

Fine But who are you to comment his personal life?

Are you really a 100% perfect man in the life.

You can comment anything but you do not have rights to comment his personal life.

Unknown said...

இந்த வலைப்பூ ஒரு இஸ்லாமியரால் அல்லது இஸ்லாமிய அனுதாபம் கொண்டவரால் நடத்தப்படுவது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே.

PUTHIYATHENRAL said...

வணக்கம் அனானி, உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. கமல ஹாசனின் தனிபட்ட வாழ்க்கையை பற்றி சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சுத்தமா? என்று கேட்டு இருக்கீங்கள் சரிதான் வரவேற்கிறோம். உங்களுக்கு எப்படி எங்களை கேள்வி கேட்க்க உரிமை இருக்கிறதோ அது போல்தான் நாங்களும் கமலை பார்த்து கேட்கிறோம், தமிழகர்களுக்கு என்று ஒரு காலாச்சாரம், நாகரிகம் என்று இருக்கிறது.

கமல் லிவிங் டுகெதர் முறையில் கல்யாணம் செய்தது கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் அதை அவர் அமெரிக்காவிலோ அல்லது வேறு நாடுகளிலோ செய்தால் தவறில்லை. அதை தமிழ் நாட்டில் பகிரங்கமாக நடை முறைபடுத்துவதே இங்கே கேள்விக்குரியதாகிறது. நாம் செய்யக்கூடிய எந்த தவறும் நம்மோடு போகுமாக இருந்தால் அது அடுத்தவர்களை பாதிக்காமல் இருக்குமானால் அது அவரது சுதந்திரம்.

மதுக்கடைகளுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது இடத்தில் குடிக்க முடிகிறதா? குறைந்த பட்சம் வெளிப்படியாக வாங்கி கொண்டாவது போக முடிகிறதா என்றால் இல்லை. அதை கவர் போட்டு மறைத்தே கொடுக்கிறார்கள். இதுதான் கமல ஹாசன் விசயத்திலும். நாடறிந்த ஒருவரே இப்படி வாழும் பொழுது எல்லோரும் இதை செய்தால் என்ன? எதற்கு திருமணம். தேவை பட்டால் இவள் இல்லை என்றால் டா டா see you.

லிவிங் டுகெதர் பெண்களை போக பொருளாக பயன்படுத்த உதவுமே தவிர அது முன்னேற்றம் இல்லை. இது ஒருவகைய கலாச்சார சீரழிவு. நண்பர் புரிந்து கொண்டால் சரி.

PUTHIYATHENRAL said...

//இந்த வலைப்பூ ஒரு இஸ்லாமியரால் அல்லது இஸ்லாமிய அனுதாபம் கொண்டவரால் நடத்தப்படுவது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே.//



வணக்கம் முருகன் நலமா! உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.



சிந்திக்கவும் இணையதளத்திற்கு மத மாச்சாரியங்கள் எதுவும் கிடையாது. தினம் நமது நாட்டில் நடக்கும் விசயங்களில் அன்றைய நமது ஆசிரியர்களின் மனதை, பொதுவான சிந்தனை படைத்த மக்களின் மனதை பாதிக்க கூடிய, மதம் கடந்த செய்திகளை பற்றி பேசுவதே சிந்திக்கவும்.

ஒடுக்கபட்ட, பாதிக்கபட்ட மக்களின், உழைக்கும், ஏழை எளிய மக்களின் குரலாக சிந்திக்கவும் ஒலிக்கும். எங்களுக்கு ஜாதி, மத, இன பாகுபாடுகள் இல்லை. அநீதிகளுக்கு எதிராக நியாத்தின் குரலாக தொடர்ந்து ஒலிக்கு. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.