Feb 3, 2013

அணு உலை எதிர்ப்பு! மாபெரும் மக்கள் போராட்டம் அறிவிப்பு!!

பிப் 04/2013: கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்தி வருகின்றனர்.

இதை மத்திய, மாநில மக்கள் விரோத அரசுகள் அடக்கு முறைகளை ஏவி ஒடுக்க நினைத்தது. ஆனால் மக்கள் போராட்டங்கள் மேலும் வலுபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு  ஆதரவாக  பல்வேறு தமிழர் இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் கொடுத்து வருகின்றன.

அணு உலையை  எதிர்க்கும் மக்கள் நல இயக்கங்கள்: தமிழர் தேசிய இயக்கம், மதிமுக, நம்தமிழர் கட்சி, SDPI, மனித நேய மக்கள் கட்சி, பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா, TMMK, விடுதலை சிறுத்தைகள், பாமக, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பு, வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு மீனவர்கள் சங்கம், மற்றும் சமூக சிந்தனையாளர்கள்.

அணு உலையை ஆதரிக்கும் மக்கள் விரோத இயக்கங்கள்: காங்கிரஸ், திமுக, அதிமுக, பாரதிய ஜனதா, போலி கம்யூனிஸ்ட்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத், இந்து மக்கள் கட்சி, நடிகர் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் சோ, தினமலர், தினமணி, இந்தியா டுடே போன்றவர்கள்.

ஆலோசனைக்கூட்டம்: இந்நிலையில் இன்று இடிந்தகரையில் அணுவுலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழ் தேச பொதுவுடைமை தலைவர் மணியரசன் மற்றும்  மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்கால போராட்டங்கள் குறித்து வியூகம் வகுக்கப்பட்டது.

எதிர்கால போராட்டங்கள்: அணு உலை பற்றி இன்னும் 15 நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அணு உலையையும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் துறைமுகத்தையும், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விவேகானந்தர் மண்டபத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள்’’ என்று மக்கள் தலைவர் உதயகுமார் தெரிவித்தார். 
* மலர் விழி * 

No comments: