Feb 1, 2013

இந்தியாவில் சட்டம் ஒரு இருட்டறை!



ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சிந்திக்கவும்: இப்பொழுதுதாவது இவர்களுக்கு அறிவுக்கண் திறந்ததே. இந்த சட்டத்தையெல்லாம் கொண்டு வந்து என்ன செய்ய? லஞ்சம் இருக்கிற வரை சட்டம் எல்லாம் ஒழுங்கா செயல்படவா போகிறதா? 

இந்த சட்டமெல்லாம் ஏழைகள் குற்றம் குற்றம் பொழுது சரியா வேலை செய்யும், பணக்காரர்களுக்கு வேலை செய்யாது. இதுவே இந்தியாவில் நிதர்சனமான உண்மை நிலை. முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். நேர்மையான அரசு ஊழியர்கள் வேண்டும். அப்பொழுதுதான் இந்த சட்டங்கள் எல்லாம் செயல் பட தொடங்கும். பிரச்சனைகள் வரும்பொழுது சட்டங்களை இயற்றி கொண்டு போக வேண்டியதுதான். இதனால் எந்த பயனும் இருக்க போவதில்லை. 

1 comment:

Anonymous said...

hummm..... nallaathaan solreenga