Aug 24: டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் 
கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள காந்தி ஈத்கா திடலில் பெருநாள் 
தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம். 
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை பெருநாள் தினத்தில் மழை பெய்து மைதானத்தில் 
தண்ணீர் தேங்கி நின்றதால் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் 
உருவானது.
இதை அறிந்த 
சீக்கியர்கள் தங்கள் குருத்வாராவில் வந்து தொழுகை நடத்துமாறு முஸ்லிம்களை 
அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்ற முஸ்லிம்கள் ஜோஷிமத்தில் உள்ள 
குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்தினர். அதன் பிறகு முஸ்லிம்களும், 
சீக்கியர்களும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி நட்பை வெளிப்படுத்தினர். ஈத் 
பெருநாள் கொண்டாட்டத்தில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.
ஒருபுறம்  இந்த கிராமத்து மக்கள் இந்திய மதசார்பின்மைக்கு உறுதுணையாகவும்,  மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாகவும் விளங்கியுள்ளார்கள். 
ஆனால் மறுபுறம் பாசிச வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை 
அமைப்புகள்  இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்று தவறான பிரச்சாரம் 
செய்து மக்களை ஏமாற்றி அதன் மூலம் மதக்கலவரங்களை உருவாக்கி நாட்டை 
சுடுகாடாக மாற்றி வருகின்றார்கள். 

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
2 comments:
nalla pakirvu!
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
Post a Comment