May 30, 2012

திரை கதை வசனம் எழுதும் இந்திய உளவுத்துறை!?


புதுடெல்லி: தீவிரவாத குற்றம் சுமத்தி சவூதி அரேபியாவில் வைத்து இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளைஞரான பொறியாளர் ஃபஸீஹ் முஹம்மதிற்கு சிவில் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
ஃபஸீஹை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர். இக்கோரியை வலியுறுத்தி உள்துறை அமைச்சர், தேசிய சிறுபான்மை கமிஷன் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து அநியாயமாக நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யப்படுவது தொடர்கதையாக மாறியுள்ளது. ஃபஸீஹின் கைது இத்தகைய சம்பவங்களின் ஒரு பகுதியாக காணமுடிகிறது. அண்மையில் மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி, இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு தொடர்பாக டெல்லி போலீஸ் கைது செய்தது. 

தொடரும் இத்தகைய சம்பவங்கள் முஸ்லிம் சமுதாயத்தை வேதனையில் ஆழ்த்துகிறது என்றும், இவ்விவகாரத்தில் அவசரமாக தலையிட வேண்டும் என்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஷப்னம் ஹாஷ்மி, பேராசிரியர் அனுராதா செனாய் (ஜெ.என்.யு), வழக்கறிஞர் காலின் கான்ஸால்வ்ஸ் (உச்சநீதிமன்றம்), பேராசிரியர் கமல்மித்ரா செனாய், பேராசிரியர் ஜெ.எஸ்.பந்தூக்வாலா (வதோதரா பல்கலைக்கழகம்), எ.கே.கித்வாய் (அசோசியேசன் ஆஃப் ப்ரொடக்‌ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸ்), அஜீத் ஸாஹி, காஷிஃபுல் ஹுதா, மஹ்தாப் ஆலம் (பத்திரிகையாளர்), கதீஜா ஆரிஃப் (திரைப்படத்துறை),  மனீஷா சேதி (ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன்), டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான்  ஆகியோர் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இல்லாத ஒன்றை உறுவாக்குவதும் இருப்பதை இல்லாமல் ஆக்குவதும் இந்திய காவல்துறை மற்றும் உளவுத்துறை கை வந்த கலை. (திரைப்படத்திற்கு திரை கதை வசனம் எழுதலாம் இந்திய உளவுத்துறை)

1 comment:

suvanappiriyan said...

ஆளும் வர்க்கத்தின் மற்றுமொரு நயவஞ்சகத்தனம்.