Mar 3, 2012

முதல்வரின் முகத்திரை கிழிந்தது!

சென்னை, மார்ச் 4: கூடங்குளம் அணு மின் நிலயத்தை தொடங்க தமிழக அரசு முழு  ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று  மத்திய அமைச்சர்  நாராயணசாமி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டும். 12 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராட்டக்காரர்களுக்கு உதவுகின்றன. இதில் 3  தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இவர்கள் மீது 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

2 வழக்குகளை சிபிஐ-யும், 2 வழக்குகளை தமிழக அரசும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கக் கோரி, தமிழக மக்களிடமிருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் வருகின்றன. போராட்டக் குழுவினர் தங்கள் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், இவர்கள் மீது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கூடங்குளத்திலிருந்து வலுக்கட்டாயமாக ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட  ஹெர்மன் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. சுற்றுலாத் தலமில்லாத கூடங்குளத்தில் அவர் 15 நாள்கள் தங்கியிருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் அவருடைய லேப்-டாப்பில் கூடங்குளம் அணு மின்நிலைய வரைபடம் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக அவரை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அழைத்து வரமுடியும் என்றார் நாராயணசாமி.

சிந்திக்கவும்:
கூடங்குளம் மக்களை ஏமாற்றிவரும் ஜெயாவின் வேடம் கலைந்தது. ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு எதிராக எதையும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அணு உலைக்கு தண்ணீர் கொண்டுவர பேச்சிப்பாறை அணை கட்டை தூர்வார ஆணை பிரபித்திருப்பது இப்பொழுது அது அமைச்சர் மூலம் உண்மையாகி விட்டது.

நாராயண சாமியின் பேச்சுதான் பெரிய காமடி. இதுநாள் வரை அந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வரும்போது அதை அனுமதித்த மத்திய அரசு கூடங்குளம் விசயத்தில் அந்த தொண்டு நிறுவனங்கள் உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுக்கும்போது இவர்களுக்கு கசக்கிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது மத்திய அரசின் அனுமதியோடு அந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வந்து அவர்கள் அதை மக்கள் நலனுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். இப்பொழுது தாங்கள் கட்டும் அணு உலைக்கு எதிராக உண்மை வெளிவர உதவி செய்வதால் அவர்கள் மீது நடவடிக்கை.

ஜெர்மனியை சார்ந்த சுற்றுலா பயணி
ஹெர்மன் கூடங்குளம் பகுதியில் பதினைந்து நாள் தங்கி இருந்தாராம். அதனால் இவர்களுக்கு சந்தேகமாம், அவர் கணனியில் கூடங்குளம் அணு மின்நிலய படம் இருந்ததாம். அப்போ ஏன்யா அவரை திருப்பி அனுப்பினீர்கள். அவரை அனுப்பிவிட்டு இப்ப சொல்கிறார் அவரை தேவைபட்டால் திருப்பி விசாரணைக்கு கொண்டு வருவார்களாம். ஏன் போபால் குற்றவாளி யூனியன் கார்பரேசன் அதிபரை மட்டும் நல்லவிதமா அனுப்பி வைத்தீர்களே ஏன்?  முதலில் வரை திரும்ப கொண்டுவாருங்கள் அதற்க்கு பிறகு நாங்கள் நம்புகிறோம். இதை மாதிரி ஒரு கேவலமான அரசையும் அமைச்சர்களையும் உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

8 comments:

Anonymous said...

நாராயண சாமி .....அந்த ஆள் பேசுறதைப் பார்த்தல் டென்ஷன் ஆகிறது .....அதுவும் நம்பளைப் போல் ஏமாந்த ஜனங்கள் ஆருமே இல்லை ..

Seeni said...

enna kodumai!

kekkuravan kenayana irunthaal-
erumai kooda ero plaan oottumAam!

Unknown said...

நம்மள விட ஏமாந்த சனம் இல்ல...........

PUTHIYATHENRAL said...

//அந்த ஆள் பேசுறதைப் பார்த்தல் டென்ஷன் ஆகிறது //

வணக்கம் கலை நலமா. நம்மள மாதிரி ஒவ்வொருத்தருக்கும் எரிச்சலா வந்தால் இன்னைக்கு தமிழ் நாட்டில் இருக்கும் கழிசடை அரசியல் வாதிகளும், ஊழல் பெரிச்சாளிகளும், மக்கள் விரோதிகளும் துடைத்து எறியப்பட்டு இருப்பார்கள். உங்கள் கருத்துக்கும் இயல்பான ஆத்திரத்துக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

கேட்கிறவன் கேணயனா இருந்தால் எருமை ஏரோபிளேன் ஓட்டுமாம் ஆகா.... சும்மா ஏரியா பழமொழிகளை சொல்லி விடைகிரீன்கள் சீனி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

நம்மள விட ஏமாந்த சனம் இல்ல...........

வணக்கம் எஸ்தர் நலமா.... நியாயமான வருத்தம்.... என்ன செய்ய நமது மக்கள் விழிக்க மாட்டேன் என்று அடம் பிடிகின்றனரே.

Unknown said...

அன்பரே!
சற்று பொறுங்கள்! சங்கரன்
கோவில் தேர்தல் முடியட்டும்!
அதன் பிறகுக் கைது படலம் தொடரும்.

புலவர் சா இராமாநுசம்

kiliyooraan said...

intha arasiayal vathigalyellaam india naattirku oru saapak kedu. ivanugalai thudaithu thoorap podavendum.antha kalam vegu thoorathil illai.