Jan 22, 2011

விலைபோகும் பத்திரிக்கை தருமம்!! ஒரு பார்வை.

மக்களின் குறைபாடுகளை பயன்படுத்திக்கொண்டு ஊடகங்களும் சம்பாதிக்கப் பார்க்கிறதேயன்றி மக்களின் குறைகளை நீக்கி அவர்களுக்கு உதவுவதாய் இல்லை. மக்களின் முன்னேற்றத்தில் ஊடகங்களின் பங்கு இப்போதெல்லாம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கேட்டால் நாய் மனிதரைக் கடிப்பது செய்தியல்ல; மனிதர் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி என்பார்கள். நடிகைகளின் தொப்புள் முதல் சிட்டு குருவி லேகியம் வரை இவர்கள் பக்கத்தை நிரப்ப போடாத செய்திகள் சேவைகள் இல்லை. அடுத்து அரசியல்வாதிகளின் அடிவருடி காக்கைக் கூட்டங்களாய் இறைச்சித்துண்டுக்கும், கோர்ட்டர் பாட்டில், பேட்டாவுக்குமாய் ஆலாய்ப்பறக்கின்றன. எந்த பத்திரிக்கைகளுக்கு ஆவது அரசை இடித்துரைத்து கேட்க்கும் திராணியுள்ளதா என்றால் விளம்பரம் போய்விடுமே என்ற கவலை.

ஜனநாயகத்தின் 4 ஆவது தூண்கள் என்று சித்தரிக்கப்பபடும் ஊடகங்கள், எதார்த்தத்தில் டாடா அம்பானிகளின் பங்களா நாய்களாக இருந்துள்ளது என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம். இது ஜனநாயக அமைப்பை நம்பியவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் என்றவுடன் உங்கள் நினைவுக்கு எப்படியானதொரு சித்திரம் தோன்றுகிறது? ஒல்லியான உருவம் ஒன்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கான பைஜாமா, லேசாகக் குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னங்கள், கனமான கண்ணாடி, அதற்குள் சிவந்த கூர்மையான கண்கள். இவரது ஆளுமை பற்றிய பிம்பமாக, அதிகாரத்தையும் முறைகேடுகளையும் எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பது, மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் உயிரையே கூட துச்சமாக மதிப்பது, நேர்மை… இத்யாதி இத்யாதி. என்றால், நீங்கள் இன்னமும் என்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களின் தாக்கத்திலிருந்து விடுபடாதவர் என்று பொருளாகிறது. இப்பொழுது பத்திரிகையாளர்கள் என்றால் இறக்குமதி செய்யப்பட்ட காரில், பளீரென்ற மேக்கப்பில், டிசைனர் உடைகளோடும் நுனி நாக்கில் புரளும் ஆங்கிலத்தோடும் ஒரு சினிமா நடிகருகருக்கு ஒப்பான தோற்றம் தான் இன்றைய நவீன பத்திரிகையாளர்களின் தோற்றம்! .

தமிழகத் தேர்தல் சமயங்களில் போயஸ் கார்டனை விட்டு ஒரு மர்மப் புன்னகையோடு வெளியேறும் துக்ளக் சோவை தவறாமல் தமிழ் செய்தி ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். சுயேச்சையாய் செய்திகளை அளிக்கும் கடமை உள்ள ஒரு பத்திரிகையாளருக்கு அரசியல் அணி சேர்கைகளுக்காக தரகு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்னவென்ற கேள்வி இது வரை எழுந்ததில்லை. இலங்கை இந்தியா இடையே இந்து பத்திரிகையின் என்.ராம் செய்து வரும் தரகு வேலைகளும் இலங்கை இனவெறி பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இங்கே அவர் செய்து வரும் எத்து வேலைகளும் எவரும் அறியாத இரகசியங்கள் அல்ல.

கவர் வாங்கிக் கொண்டு “கவர்” ஸ்டோரிகள் எழுதுவது பத்திரிகைகளுக்கு ஒன்றும் புதிய விவகாரம் இல்லையென்றாலும், நேரடியாக ‘இன்னதற்கு இன்ன ரேட்’ என்று நிர்ணயித்துக் கொண்டு மக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூறு போட்டு விற்கும் போக்கு சமீப வருடங்களில் பரவலாகி வருகிறது. ஆளும் கட்சியின் விளபரங்களுக்காக அவர்கள் செய்யும் எல்லா திருட்டு வேலைகளுக்கும் உடந்தையாக இருப்பது, தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வோர் கட்சிகளை பிடித்து கொண்டு ஜெயிக்கும் என்று ஆருடம் சொல்வது, கருத்துகணிப்புகள் நடத்தி இவர்களே ஜெயிக்க வைப்பது என்று இவர்கள் பண்ணும் காமடி எல்லாம் அறிந்ததே.

தற்போது கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் (ஆதர்ஷ் ஊழல்) முறைகேடுகள் செய்து அம்பலமாகி ஊரே காறித்துப்பிக் கொண்டிருக்கும் மகாராஷ்ட்டிர (முன்னாள்) முதல்வர் அசோக் ராவ் சவாண் பற்றி அம்மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் “ஆற்றல் மிக்க இளம் தலைவர்” என்று தலைப்பிட்டு லோக்மத் எனும் மராட்டிய இதழ் லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டது. அது மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் சவாண் பற்றி பல்வேறு சிறப்பிதழ்களையும் வெளியிட்டது. இவை எதுவும் விளம்பரம் என்று குறிக்கப்படாமல், செய்தியைப் போலவே வெளியிடப்பட்டது பின்னர் அம்பலமாகி நாறியது.

அரிந்தம் சௌத்ரி “இதிலெல்லாம் என்னய்யா பிரச்சினையக் கண்டுட்டீங்க?” என்கிறார். “அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்படி பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுப்பதோ லையசன் (தரகு) வேலை பார்ப்பதோ ஒன்றும் புதிதில்லையே? இத்தனைக்கும் நம்மை விட அவர்களோ முன்னேறிய ஜனநாயக நாடு அல்லவா; நாம் மட்டும் ஏன் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் இனிமேல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுக்கவோ தரகு வேலை பார்க்கவோ வேண்டாம் – அதை வெளிப்படையாக நேரடியாகவே செய்து விடலாம்” என்று தனது சண்டே இண்டியன் பத்திரிகையில் எழுதியுள்ளார். அரிந்தமின் அந்தக் கட்டுரையை ஒரு வேளை சோ ராமசாமி படித்திருந்தால் “ஹெஹ் ஹெஹ் ஹே.. இவாள்ளாம் இப்பத்தான் எல்கேஜிக்கே வந்திருக்கா… நாமெல்லாம் பிஹெச்டியே முடிச்சுட்டோமே” என்று இந்து ராமைப் பார்த்து சொல்லியிருக்கக் கூடும்.

இந்த மானம் கெட்ட பத்திரிக்கைகள் தாம் வெளியிடும் செய்திகளை வியாபாரமாக கருதி மக்களிடம் திணிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை, பத்திரிக்கைக்கு தேவையான நீதி, நேர்மை, நியாயம் போன்ற எல்லா அம்சங்களுக்கும் இவர்களிடம் ஒரு விலை உண்டு. இவர்கள் பணத்திற்கு எல்லாத்தையும் விற்க துணிந்த வியாபாரிகள். 2005ஆம் ஆண்டு விடியோகான், கைனடிக் போன்ற நிறுவனங்கள் கணக்கற்ற பங்குகளை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை குழுமத்துக்கு லஞ்சமாக அளித்து தமது நிறுவனங்களைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா , டைம்ஸ் நௌ, பிசினஸ் டைம்ஸ் போன்ற எல்லா பத்திரிகைகளிலும் நல்லவிதமாக’ செய்தி வரும்படி பார்த்துக் கொண்டன. அதனால் போது மக்களே இது போன்ற பத்திரிக்கைகளை புறக்கணித்து பத்திரிக்கையில் வரும் சம்பவங்கள் எல்லாம் உண்மை என்று நினைக்கும் மன பாங்கை விட்டு முதலில் மாறுவோம்.

குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் எப்படி கொடூரமானவர்களாக மாற்றபடுகிறார்கள்!! ஒரு ஆய்வு கட்டுரை.


புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது. இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் செல்வியின் கட்டுரை (சிந்திக்கவும்): இந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தன? எப்படி குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் கொடூரர்களாக மாற்றபடுகிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் மூளை சலவை. இவர்கள் ஹிந்து மதத்தை வளர்கிறோம், ஹிந்துக்களுக்கு என்று ஒரு நாடு அதுதான் இந்தியா என்று கூறி அப்பாவி ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களுக்கு தீவிரவாத பயிர்ச்சி கொடுக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுமார் ஐம்பது ஆயிரம் முழுநேர உழியர்களை கொண்டது. முழு நேர உழியர்கள் என்றால் என்ன? இந்த முழு நேர உழியர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது. இவர்கள் வேறு எந்த வேலைக்கும் போக மாட்டார்கள். தங்கள் இயக்க வேலையை மட்டுமே செய்வார்கள். இன்னும் தெளிவாக செல்லனும் என்றால் தங்கள் உடல், பொருள், ஆவி, எல்லாம் தங்களது இயக்கத்தை பரப்புவதே என்ற அளவுக்கு தீவிரமாக செயல்படுவது. இப்படியாக இந்த முழுநேர உழியர்கள் இந்தியா முழுவது சுற்றி திரிந்து ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் விழவைகிறார்கள். பின்னர் அவர்களுக்கு சிந்தனை ரீதியான பயிற்சி, உளரீதியான பயிற்சி, ஆன்மீக பயிற்சி, ஆயூத பயிற்சி, உளவு பயிற்சி இப்படி கடுமையான பயிற்ச்சிகள் கொடுக்கபடுகிறது.

இவர்களுக்கு பயிற்சி கொடுபதற்க்கு என்றே இந்தியா முழுவது பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்துகிறது. ஒரு நாள், மூன்றுநாள் பயிற்சி கேந்திரங்கள் அந்த அந்த மாநிலங்களில் உள்ள பயிற்சி கேதிரங்களில் நடக்கிறது. இங்கு பயிற்சிகளை வெற்றிகிரமாக முடித்தவர்களுக்கு மத்திய பயிற்சி கேந்திரத்தில் பயிற்சி அளிக்கபடுகிறது. மத்திய பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஒரிசா, கேரளா போன்ற மாநிலங்களில் நடத்தபடுகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கபடுகிறது. இவர்களுக்கு ஆயூத பயிற்சி அளிப்பது இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்பது அதிர்ச்சியான உண்மை. இந்தியாவின் பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுபினர்கள் என்பது உண்மையோ உண்மை.

உலகில் இஸ்ரைளின் உளவுத்துறையான மொசாதுக்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உளவுத்துறை நாம் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வலிமையான உளவுத்துறையை தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்கள் பத்து முதல் இருபது பெயர் கொண்ட ஒரு குழு இதை இவர்கள் ஒரு அணி என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒருதலைவர் என்றமுறையில் இவர்களது அடிமட்ட செயல்பாடு ஆரம்பம் ஆகிறது. குறைந்த பட்சம் ஒரு வூரில் பத்து முதல் ஐம்பது அணிகள் வரை இவர்களுக்கு இருகின்றன. இவர்கள் தான் அந்த வூரில் என்ன நடக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றார்கள்.

இப்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்ச்சி கூடங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு, வெறுப்பு என்பவை போதிக்கப்படுகிறது. எனவே இவர்கள் அன்றாடம் வாழ்வில் நடக்கும் சிறிய விசயங்களையும் மத கண்கொண்டு பார்கிறார்கள். எப்படியெல்லாம் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்களோடு பிரச்சனைகளை உண்டாக்கி அதை கலவரங்களாக மாற்றுவது என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். கொடுக்கல் வாங்கல் முதல் வியாபார பிரச்சனைகள் வரை மனிதன் அன்றாடம் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை ஹிந்து முஸ்லிம் பிரச்சனை போல் சித்தரித்து இவர்கள் ஒரு ஆதரவு கரம் நீட்டுவது போல் அந்த விஷயங்களுக்குள் வந்து ஒரு பெரும் கலவரம் நடக்க காரண கர்தாவாகிரார்கள்.

கலவரம் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். ஏன் என்றால் இவர்களிடம் ராணுவ ரீதியில் தாயாரிக்க பட்ட ஒரு படை ஆயூதங்களுடன் ரெடியாக ஒரு தலைமையின் கீழ் முறைபடுத்தப்பட்ட சிறு குழுக்களாக இருந்து செயல்படுகிறது. இவர்கள் கலவரங்களை திட்டமிட்டு நடத்திவிட்டு ஒளிந்து கொள்வார்கள். பாதிக்க பட்ட சிறுபான்மை தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக முறைப்படி தெரியபடுத்த வீதிகளுக்கு வரும்போது இந்திய கையாலாகாத காவல்துறை இவர்களை பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்திலும், போடாவிலும், இன்னும் பல ஆள்தூக்கி சட்டங்களிலும் சிறையில் தள்ளி மொத்த கலவரங்களுக்கும் இவர்கள் தான் காரணம் போன்ற ஒரு மாயை தோற்றுவித்து விடுகிறார்கள். இவர்களுக்கு துணையாக இந்த பாசிச சிந்தனை உள்ள பத்திரிக்கைகளும் இந்த பிரச்சனிகளை தலைப்பு செய்திகளாக்கி பூதகரமாக்கி முஸ்லிம் விரோத சிந்தனையை வளர்கின்றன. மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டிய காலம் இது. இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத சிந்தனையில் மக்கள் விழுந்துவிடாமல் அந்த பாசிச ஹிட்லர் சித்தாந்தத்தை இந்த மண்ணை விட்டு விரட்டுவது ஒவ்வொரு இந்தியனது கடமை.

நன்றி : தமிழ் செல்வி.

புறாவின் மூலம் கஞ்சா கடத்தல்: நூதன கடத்தல்காரர்கள்.

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு புறாவின் மூலம் கஞ்சா போதைப் பொருளினை அனுப்பும் நடவடிக்கையினை கொலம்பிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்போது பிடிப்பட்ட புறாவின் உடலில் சுமார் 1.5 அவுன்ஸ் அளவிலான கஞ்சா பொதியொன்று கட்டப்பட்டிருந்துள்ளது. இப்பொதியின் நிறையை தாங்க முடியாத புறா இடை நடுவே நின்றுள்ளது. சிறைச்சாலைக்கு அருகில் புறா பறக்க முடியாமல் திணறிக் கொண்டு இருப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதனை பரிசோதித்த போதே இவ்விடயம் அம்பலமாகியுள்ளது. கொலம்பிய போதைப் பொருள் கும்பல்கள் கடத்தல்களுக்கு பல புதிய உத்திகளை கையாளுவதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Jan 21, 2011

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் முரளிதரன்.

கொழும்பு, ஜன.21- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் (38) கூறியுள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார். எனினும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் தற்போது கொச்சி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாராட்டு கலவரத்தை நடத்திய ஹிந்து ஐக்கியவேதி தலைவர் உள்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.

கோழிக்கோடு,ஜன.21: கேரளா மாநிலத்தில் உள்ள மாராட்டு என்ற வூரில் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் ஒரு கலவரம் நடத்தப்பட்டது அதுவே முதல் மாராட்டு கலவரம் என்று சொல்லபடுகிறது. முதல் மாராடு படுகொலைகள் சம்பவத்தில் குஞ்சுக்கோயா(வயது 32) என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி பிபிஷ்(வயது 37), இரண்டாவது குற்றவாளி ஹிந்து ஐக்கியவேதி மாநிலப் பொதுச்செயலாளர் சுரேஷ், மூன்றாவது குற்றவாளி விஜேஷ்(வயது 31) ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அபராதத் தொகையில் 50 ஆயிரத்தை கொலைச் செய்யப்பட்ட குஞ்சுக்கோயாவின் குடும்பத்தினருக்கு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரவு எட்டு மணியளவில் மாராடு கடற்கரைப் பகுதியில் இரு பிரிவினர்களுக்கிடையே நடைப்பெற்ற மோதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இச்சம்பவத்தில் முதலில் கொல்லப்பட்டது முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த குஞ்சுக்கோயா என்பவராவார்.

மாராடு ஜும்ஆ பள்ளி முன்பக்கத்தில் வைத்து ஆயுதங்களுடன் வந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஹிந்து ஐக்கியவேதியின் பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் சேர்ந்து குஞ்சுக்கோயாவை கொடூரமாக கொலைச் செய்தனர். இதனை நேரில் கண்ட சாட்சி அளித்த வாக்குமூலத்தை மிக முக்கிய ஆதாரமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கில் இதர குற்றவாளிகள் பிபிஷ்(வயது 37), விஜேஷ்(வயது 31) ஆகியோராவர். முதல் மாராடு சம்பவத்தில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு பதிலடியாக நடந்த இரண்டாவது மாராடு சம்பவத்தில் 9பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மகரஜோதி உண்மையானதா? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி???

கொச்சி,ஜன.21:சபரிமலையில் ஆண்டுதோறும் தென்படுவதாக கூறப்படும் மகரஜோதி மனிதர்களால் ஏற்பாடுச் செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ள கேரள மாநில உயர்நீதிமன்றம் இதுத் தொடர்பாக விளக்கமளிக்கும்படி தேவஸம்போர்டிடம் (ஹிந்து அறநிலையத்துறை) உத்தரவிட்டுள்ளது. சபரி மலை அருகே புல்லுமேடு வனப்பகுதியில் பக்தர்கள் சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.

இதுத்தொடர்பான வழக்கை தாமகவே முன்வந்து பதிவுச்செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கேரளமாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன், பி.எஸ்.கோபிநாத் ஆகியோர் அடங்கிய தேவஸம் பெஞ்ச் மகரஜோதி தொடர்பாக தமது சந்தேகத்தை எழுப்பியது. மகரவிளக்கிற்கும், மகரஜோதிக்குமிடையேயான வித்தியாசம் என்ன? என்பதை விளக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அது நம்பிக்கை தொடர்பானது என தேவஸம்போர்டு சார்பாக பதிலளிக்கப்பட்டது.

நம்பிக்கைத் தொடர்பானதாக இருந்தாலும், சில காரியங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டிவரும் என நீதிமன்றம் அறிவித்தது. புல்லுமேடு வனப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு யார் அனுமதியளித்தார்கள்? பெரியார் டைகர் ரிஸர்வில் பக்தர்கள் எவ்வாறு நுழைந்தனர்? கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது? ஆகிய காரியங்களில் அரசு விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விபத்துத் தொடர்பாக கேரள மாநில உள்துறை செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வருகிற வியாழக்கிழமை கூடும் எனவும், அரசு நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் தேவை எனவும் அட்வக்கேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.வருகிற வெள்ளிக்கிழமை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

ராமநாதபுரம்,ஜன.21: தமிழக அரசு சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டு அதற்கான முன்பதிவு 19/01/2011 முதல் 24/01/2011 வரை அனைத்து மாவட்ட ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் பட்டதாரிகள் பலர் பங்குபெற்றனர். இவ்வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்பதிவு நடைபெறும் இடங்களான இராமநாதபுரம், திருவாடனை, திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, நயினார்கோயில், போகலூர், கடலாடி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேலைவாய்ப்பு முகாமுக்கான நேர்முக தேர்வு வருகின்ற 28/01/2011 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியற் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

நன்றி: செய்திகள் பாலைவன தூது.

Jan 20, 2011

பால் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவு.

பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது.

எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும்.

ஆனால், ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்! பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கும் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதில் பிரதானமானது பசும்பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம்.

ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. பால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச்சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம் பார்ப்பனிய மீட்சிக்காகவே!

வட இந்தியாவில் குமாஸ்தக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த பார்ப்பனியர்கள் வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் நோக்கத்திற்காகவும் கட்டி அமைக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம்.

1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்? சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். எனவே அவர்களை வெள்ளையர்கள் குண்டாந் தடிகளுடன் இராணுவ பயிற்சி செய்வதற்கு அனுமதித்தார்கள். அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று.

“We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.” (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)”

இது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் “குருஜி” என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல்வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவயுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.

ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிரஸ்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால்தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது.

நன்றி: வினவு.

இந்திய கருப்பு பண முதலைகள் சிக்குவார்களா??

புதுடெல்லி,ஜன.20:வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வரி ஏய்ப்பு என்றுமட்டும் இதனை காணக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர்.

கறுப்புப் பணத்தை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு விபரங்களை சேகரித்து வருவதாகவும், கணக்கு விபரங்களை வெளியிடுவது நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் என தெரிவித்தார்.

லீக்டென்ஸ்டைன் நாட்டு வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 26 பேர் குறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனியுடன் இரட்டை வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் முத்திரை வைக்கப்பட்ட உறையில் இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தியர்களின் எல்லா வெளிநாட்டு வங்கிகளின் முதலீடு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டதற்கு ஒரு வங்கியின் விபரங்களை மட்டும் அளித்த மத்திய அரசின் நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

துக்ளக் பத்திரிகை இனி சமஸ்கிருதத்தில் நடத்தப்படுமா?? ஒரு கேள்வி???

துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி மீண்டும் தனது அழுத்தமான பார்ப்பனர் அடையாளத்தை காட்டிக் கொண்டுவிட்டார். "கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள் தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஆங்கில மொழி இப்படி மாநாடு நடத்தியதாலா வளர்ந்தது? என்று துக்ளக் ஆசிரியர் சோ அவருக்கே உரிய வயிற்றெரிச்சலோடு அவரது பத்திரிகையின் 42 வது ஆண்டு விழாவில் பேசியிருக்கிறார்.

அவர் நடத்திய அந்த ஆண்டு விழாவில் பேசியவர்கள் அனைவரும் ‘சோ’ தைரியசாலி
விலைக்கு வாங்க முடியாதவர், என்ற ரீதியில் அவரை வானளாவப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துக் கேட்டுக் கொண்டுதானிருந்தாரே தவிர - "அய்யோ வேண்டாம்; போதும் புகழ்ந்தது" என்று தடுத்து விடவில்லை அவர்!
இப்படிப்பட்ட புகழுரைகளை பாராட்டு களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் விழா எடுத்து அதிலே பேசுவோர் தனக்கு வழங்கும் பாராட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பவர்! அப்படிப் பாராட்டுமளவிற்கு இந்த மகானுபவர் என்ன சாதனை நிகழ்த்திக் காட்டி விட்டார்? திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்வது,புராண, இதிகாசங்களிலுள்ள
ஹிந்துத்துவா மூடத்தனங்களைப் பரப்புவது,ஊழல் எதிர்ப்பு என்ற பேரால் ஜெயலலிதாவுக்கு தங்க முலாம் பூசுவது போன்ற சமூக விரோத, மக்கள் விரோத, பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரான கழிசடைக் கருத்துக்களைப் பரப்புவது என்பதைத் தவிர வேறு என்ன சாதித்துவிட்டார்?

சாதி வெறியரான அவர் தனது சுயசாதியினரின் அபிமானத்துக்குரிய சமஸ்கிருதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமி சிலைகளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும், தமிழ் புரியாது என்பார். அதேசமயம் தேவாரம் பாடிய மூவரிலிருந்து 63 நாயன்மார்களின் வரலாற்றை வாரா வாரம் எழுதுவார்! அது எல்லாம் தமிழ்ப் பாடல்தானே? இதையெல்லாம் எழுதி எழுதி அல்லையன்ஸ் பிரசுரம் மூலம் காசு சம்பாதித்து வயிறு கழுவும் பக்தி வியாபாரி சோ. தமிழில் அர்ச்சனை செய்தால் அது சாமிக்குப் புரியாது. சாமிக்கு ‘வைபரேஷன்’ தான் முக்கியம். அந்த அதிர்வுகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று வக்கணை பேசுவார். காரணம் என்ன? அவரது சுயசாதியினருக்கே பொதுவான தமிழ் விரோதம் சமஸ்கிருத அபிமானம்தான்! உலகத் தமிழ் மாநாட்டினால் ஒன்றும் பயனில்லை என்கிறார்; அதனால் தமிழ் வளராது என்கிறார்.
‘சோ’வின் சொந்த ஜாதிக்காரராகிய சங்கராச்சாரியார் சமஸ்கிருத வளர்ச்சிக்காக சதஸ்கள் நடத்தினால் அதன் மூலம் சமஸ்கிருதம் வளரும் என்று மட்டும் நம்புகிறாரே எப்படி?

தமிழ்நாட்டு அரசியலை வெறும் அரட்டைக் கச்சேரியாக மாற்றுவதற்காகவே பத்திரிகை நடத்தும் சோ ஆண்டுதோறும் தன்னைப் புகழ மண்டபக் கூட்டங்கள் நடத்தும் சோ கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துவது தம்மைப் புகழ பாராட்டத்தான் என்கிறாரே அதை என்னவென்று வர்ணிப்பது? சங்கராச்சாரியார் உரைகளை எல்லாம், கட்டுரைகளை எல்லாம் ‘தெய்வத்தின் குரல்’ என்று புகழும் ‘சோ’க்கள் இப்படியெல்லாம் பேசுவது எந்தப் புத்தியினால்? பெரியார் தந்த புத்தியை உபயோகித்துப் பார்த்தால் அது எந்தப் புத்தி என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல பளிச்சென்று விளங்கும்!

தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும்.

இந்த துக்ளக் ஆசிரியர் ஒரு இரட்டை நாக்கு ஆசாமி, தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்துவது பார்பன ஹிந்துத்துவா மதவெறியை தூக்கிபிடிப்பது, செம்மொழியாம் நம் தாய்த்தமிழையும், தமிழர் தம் பண்பாட்டையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டுவதும் தான் இவரது வேலை. இந்த குள்ளநரி மொட்டைப் பாப்பான் தமிழை நீசபாசை என்று இழிசொல் பேசும் காஞ்சிக் கொலைகார காமகேடி சங்கராச்சாரியின் ஊதுகுழல். இவருக்கு தில்லு இருந்தால் செத்துப்போன ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்த வேண்டியது தானே இந்த தமிழின துரோகி! இவர் போன்ற துரோகிகளின் பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகவே வேகாது. தமிழர்கள் கவரிமாங்களை போன்றவர்கள், மானம் இழப்பின் உயிர் துறப்பர். இந்த பிரமான வந்தேறி பார்பனர்கள் போல் இல்லை காசுக்காக வேண்டி மானத்தை விற்பவர்கள் இல்லை. ஈழ தமிழர் போராட்டத்தை எதிர்க்கும் இந்த சோ, ஜெயலலிதா,சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுக்கு தமிழர்கள் நல்ல படம் புகட்டுவார்கள்.

நன்றி: சமூக உறவுகள் சாந்தி மற்றும் பாபு.

ஆர்.எஸ்.எஸ். இயக்க ஸ்தாபகர் சாவர்க்கர்: ஒரு வரலாற்று பார்வை.

1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு 1922ஆம் ஆண்டு அனுப்புகின்றனர். இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது, வெள்ளையர்களை எதிர்க்கும் எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்கக்கூடாது என்று ஆங்கிலேயர் உத்தரவிட்டதை அவர் ஏற்றுக் கொண்டதால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

1910களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் சாவர்க்கர் அதில் சேர்கிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார்.

நன்றி: செய்தி சுருக்கம் வினவு.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: பரபப்பு செய்தி.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், "பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது" என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்" என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர… உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது. சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா" அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.
ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்தார்.
அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன் "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சென்று கொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்" என்றார்.சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார் என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்" என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தப் பட்டுக்கொண்டார்கர். அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள். தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.

நன்றி: வெல்வோம் இணையத்தளம்.

Jan 19, 2011

பெரியார், அண்ணா சிந்தனை வழியில் தனி தமிழ் நாடு.

பெரியார் தனி தமிழ் நட்டு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தமிழர்கள் ஒரு நாளும் மத்தியை ஆளும் ஹிந்தி அரசோடு சேர்ந்திருக்க முடியாது என்பதை தெளிவாக அறிந்திருந்தார். அதனாலே அவருக்கு தமிழ் மாநில முதல்வர் பதவிக்கு வருவதில் தேர்தலில் நிற்பதில் உடன்பாடு இருக்கவில்லை. இதனாலேயே அண்ணா தி.க. வில் இருந்து தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் பெரியாரை வந்து முதல்வர் பதவியில் அமரும்படி கேட்டு கொண்டார். ஆனால் பெரியார் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தை தலைநகராக கொண்ட தமிழகத்தை சொன்னார். ஆனால் அண்ணா நான்கு நாடுகளின் கூட்டு அரசே, திராவிட நாடு என்று சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகத் தான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகத்தான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டையோ அல்லது பெரியார் வழியில் தனி தமிழ் நாடோ அமைக்க போராடுவோம். இந்தியா என்பது ஹிந்தி நாடு அதன் ஆட்சியாளர்கள் இப்பொது தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களயும் சேர்த்துதான் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யபோவது இல்லை. கள் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி என்பதனை மனதில் கொண்டு உலக தமிழர்களுக்கு என்று ஒரு ராஜ்ஜியம் அதுதான் தமிழ்நாடு அதோடு சேர்ந்த ஈழம். தமிழகத்தில் இருந்து ஈழ உறவுகளுக்கு பாலம் அமைப்போம்.

நன்றி: மினஞ்சல் செய்தி : தமிழன்

தீவிரவாதி இராச‌ப‌க்சே & ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர் இராம்: சுவையான உரையாடல்.


ச‌ர்வ‌தேசிய‌வாதியான” ஹிந்து ஆசிரியர் திரு.இராம் இந்தியாவில் ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ம‌ட்டும் திரித்து எழுதுவ‌தோடு நின்று விடுவ‌தில்லை. உதார‌ண‌த்திற்கு, அவரது ந‌ண்ப‌ரும், இல‌ங்கை அதிபருமான‌‌ ம‌கிந்தாவிற்காக, ஊட‌க‌ நேர்மை எல்லாம் ம‌ற‌ந்துவிட்டே இந்துவில் வ‌ரும் இல‌ங்கையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌. இல‌ங்கை அர‌சின் இன‌ப் பாகுபாடுக‌ள், போர்க் குற்ற‌ங்க‌ள், இன‌ப்ப‌டுகொலைக‌ள், அர‌சை விம‌ரிசிக்கும் ந‌ப‌ர்க‌ள் மர்மமான முறையில் கொல்ல‌ப்ப‌டுத‌ல், இராச‌ப‌க்சேவின் ச‌ர்வாதிகார‌ப் போக்கு இவை எல்லாம் இந்து என்ற‌ “செய்திக‌ளை ஆவ‌ணப்ப‌டுத்தும்” நாளித‌ழில் அற‌த்தின் வ‌ழியே ந‌ட‌ப்ப‌தாகவே ந‌மக்கு கூற‌ப்ப‌டும். இதை எல்லாம் கேட்டு பொய்யை மெய் போல உரைப்பதில் தன்னையே விஞ்சிவிட்டார்களே இவர்கள், என கோய‌ப‌ல்சே மூச்ச‌டைத்து இற‌ந்தாலும் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை .

நல்ல ஊடகத்தின் அடிப்படையான‌ ஊட‌க‌ நேர்மைக்காகவும், பொதும‌க்க‌ள் இந்த உரையாடலைப் பற்றி பல இடங்களில் விவாதிக்க ‌வேண்டும் என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌த்துட‌னும் எங்க‌ளிட‌ம் உள்ள‌ இராம், இராச‌ப‌க்சே புனைவு (Fiction) தொலைப்பேசி உரையாட‌லை உங்க‌ளுக்கு எழுத்து வ‌டிவில் வ‌ழ‌ங்குகின்றோம். உண்மையான‌(!) செய்தி என்று இன்று ஊட‌க‌ங்க‌ள் கூறும் செய்திகளை விட, இந்த‌ புனைவு உரையாடல் எவ்வளவு உண்மையானது என்பதை வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ளே முடிவு செய்துகொள்ளுங்க‌ள்.

(தொலைபேசி ம‌ணி ஒலிக்கின்ற‌து, இராச‌ப‌க்சே தனது நல்வாய்ப்பு தரும் எண் ஒன்ப‌து வ‌ரை எண்ணிவிட்டு தொலைபேசியை எடுக்கின்றார் !)

இராம்: ஆயுபவ‌ன்(சிங்க‌ள‌த்தில் வ‌ண‌க்க‌ம் என‌ கூறுகின்றார்) அதிப‌ர் அவ‌ர்க‌ளே.

இராச‌ப‌க்சே: வ‌ண‌க்க‌ம் திரு.இராம்

இராம்: நீங்க‌ள் எப்பொழுது என்னை அழைத்தாலும் நான் வ‌ருவேன்

இராச‌ப‌க்சே: நான் “வ‌ண‌க்க‌ம்” என்று தான் சொன்னேனே த‌விர, ‘Wannacome’ என உங்க‌ளை இங்கே வரச்சொல்ல‌வில்லையே. தவிர இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ விவ‌கார‌ங்க‌ளில் நீங்க‌ள் தானே எங்கள் தில்லியின் செல்ல‌ப்பிள்ளை?.

இராம்: எப்பொழுதிலிருந்து நீங்க‌ள் த‌மிழில் பேச‌ தொட‌ங்கினீர்க‌ள் அதிப‌ர் அவ‌ர்க‌ளே? இது உங்க‌ள‌ சிங்க‌ள‌ மொழிக்கு நீங்கள் செய்யும் துரோக‌மாகாதா?

இராச‌ப‌க்சே: நான் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அதிப‌ராக‌ இருந்த‌ கால‌ம் முடிந்து விட்ட‌து ந‌ண்ப‌ரே, இப்பொழுது நான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா இன‌க்குழுக்க‌ளுக்குமான‌ அதிப‌ர், த‌மிழ் இன‌க்குழுவையும் சேர்த்தே. அதாவது த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் சிறையில் இருந்தாலும் ச‌ரி, புல‌ம்பெய‌ர்ந்து வேறு நாடுக‌ளில் இருந்தாலும் ச‌ரி நான் தான் அவ‌ர்க‌ளின் அதிப‌ர்.

இராம்: உங்க‌ள் ச‌ர்வாதிகார‌த்தை அண்டி வாழும் சில‌ த‌மிழ‌ர்க‌ளை ம‌ட்டும் நீங்கள் வெளியில் விட்டு வைத்துள்ளீர்க‌ள். நீங்க‌ள் தான் நான் ச‌ந்தித்ததிலேயே மிக‌ப் பெரிய‌ பொறுக்கி (செல்ல‌மாக‌). அதிலும் நீங்க‌ள் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ரும் கூட .

இராச‌ப‌க்சே: பொறுக்கி என்ற‌ சொல்லை எவ்வ‌ள‌வு அன்பாக‌ கூறுகின்றீர்க‌ள் இராம் !. என‌க்காக‌ நீங்க‌ள் உங்க‌ள் அர‌சுட‌ன் ந‌ட‌த்தும் திற‌மையான‌ அர‌சுற‌விய‌ல் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க‌வே மாட்டேன். நீங்கள் எப்போதுமே ஊடகவியலாளர் என்பதற்கு ஒரு படி மேலானவர். எங்கள் அரசினுடைய விருப்பத்துக்குறிய தரகரல்வோ நீங்கள். வரும் ஆண்டுக்கான விபீச‌னா விருது ப‌ட்டிய‌லில் நான் உங்க‌ளின் பெய‌ரை சேர்த்திருக்கின்றேன் .

லங்கா இரத்னா விருது பெறும் 'இந்து' என். இராம்

இராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன்

இராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது. நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.

இராம்: உங்க‌ளுக்கு வ‌ரும் ப‌ண‌த்தின் அள‌வு சுருங்கிவ‌ருகின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே, இது உல‌க‌ப் பொருளாதார‌த்தின் தேக்க காலம். தவிர உங்க‌ள‌து க‌ழுத்தைச் சுற்றியிருக்கும் கயிறு இறுகுவது போலுள்ளது, உங்க‌ள‌து ஆட்சிகால‌த்தில் ந‌டைபெற்ற‌ போர்க்குற்ற‌ங்க‌ளை விசார‌ணை செய்ய‌ வேண்டும் என‌ பன்னாட்டு அமைப்புகள் கோரி வ‌ருகின்ற‌ன. க‌ட‌ந்த‌ ஆண்டு உங்க‌ள‌து இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பை ஒன்றும் இல்லாம‌ல் செய்த‌ போது, ஒரு வார‌த்தில் மட்டும் 20,000 அப்பாவி த‌மிழ்ப் பொதும‌க்க‌ளை கொன்றார்க‌ளே, அந்த‌ கோர‌ நிக‌ழ்ச்சி நினைவிருக்கிறதா?

இராசப‌க்சே: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான். நான் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். அண்மையில் “சேனல் 4″ எம‌து ப‌டையின‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளையும், அவ‌ர்க‌ளிட‌ம் ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருந்த‌ இசைப்பிரியா என்ற‌ பெண்ணையும் ப‌டுகொலை செய்யும் காணொளியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ளே. அதைப் ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்?

இராம்: கொடூர‌மான‌ ஒன்று, அதாவ‌து கொடூர‌மான‌ ஊட‌க‌விய‌ல் என‌க் கூற‌வ‌ருகின்றேன். உங்க‌ள‌து அர‌சை த‌வ‌றான‌ இட‌த்தில் வைத்துக் காட்டும் ஒரு காணொளியை அவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒளிப‌ர‌ப்ப‌லாம்? இது ஒரு முறைய‌ற்ற‌ ஊட‌க‌விய‌லை (Bad journalism) பி.பி.சி ஒரு போதும் இதை கடைப்பிடிக்க மாட்டார்க‌ள். சேனல் 4 ம‌ட்டும் இப்படி கீழ்த்தரமாக செல்வார்கள்.

இராச‌ப‌க்சே: நீங்க‌ள் பி.பி.சி யுடனும் ஏதாவ‌து ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ளீர்க‌ளா, என்ன? என்னைப் பொருத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் எல்லாம் ஒன்று தான். இந்த‌ வெள்ளைய‌ர்க‌ள் இன்னும் த‌ங்க‌ள‌து கால‌னீய‌ ஆட்சி ந‌ட‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொண்டு அவ‌ர்க‌ள் ஆப்கானிசுதானத்திலும், ஈராக்கிலும் செய்யும் இன‌ப்ப‌டுகொலைக‌ளை ம‌றைத்து, நாம் செய்த‌ இனப்ப‌டுகொலையை ம‌ட்டும் எல்லோருக்கும் சுட்டிக்காட்டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ளால் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌முடியுமென்றால் ந‌ம்மாலும் செய்ய‌ முடியும்.

இராம்: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி. இது மனிதநேய முகமூடியுடன் அலையும் உல‌க‌லாவிய‌ ஏகாதிப‌த்திய‌ம். மாநிற‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் எப்பொழுதும் தவறு செய்து கொண்டும், ம‌னித‌ உரிமை விதிக‌ளை எப்பொழுதும் மீறிக் கொண்டும் இருப்பவர்கள், ஆனால் வெள்ளை இன‌‌ ம‌க்க‌ள் மட்டும் அற‌த்தின் ப‌டி ந‌ட‌க்கும் சாத‌னையாள‌ர்க‌ளாம்… நான் கேட்கிறேன், இப்படி ஒரு மாநிற‌ ம‌க்க‌ள் குழு ம‌ற்றுமொரு மாநிற‌ ம‌க்க‌ள் குழுவை கொல்வ‌திலெல்லாம் அப்படி என்னதான் தவறு இருக்கிறதோ?

இராச‌ப‌க்சே: இராம் இங்கு பிர‌ச்ச‌னை என்ன‌வென்றால் சில‌ மாநிற‌, க‌ருப்பின‌ ம‌க்க‌ளும் வெள்ளையின‌த்த‌வ‌ரை போல‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ ச‌ர‌த் பொன்சேகாவை எடுத்துக் கொள்ளுங்க‌ள், அவ‌ன் என்னிட‌ம் இராணுவத்‌ த‌ள‌ப‌தியாக‌ இருந்தான், ஆனால் ப‌ணியிலிருந்து ஓய்வெடுத்த‌ பின்ன‌ர் அவ‌ன் என்னை அர‌சிய‌லில் எதிர்த்து போட்டியிடுகின்றான். மேலும் நானும், என‌து ச‌கோத‌ர‌ர்க‌ளும் செய்த‌ போர்க்குற்ற‌ங்க‌ளை உல‌குக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டப்போவ‌தாக‌வும் கூறுகின்றான். இவை எல்லாம் எத‌ற்காக‌? அமைதிக்கான‌ ஒரு நோப‌ல் ப‌ரிசிற்காக‌வும், ஓய்வுக்கால‌த்தை சுவீட‌னில் க‌ழிப்ப‌த‌ற்காகவும் தானே?

இராம்: நீங்க‌ள் அந்த ஆளை சிறையில் அடைத்தது நல்லது. இல்லை என்றால் அவ‌ர் ந‌ம‌க்கு மிக‌ப்பெரிய‌ தொந்த‌ர‌வாக‌ இருந்திருப்பார். எங்களுக்கும் அவ‌ரது சத்தத்தை மூடி மறைத்துகொண்டிருந்தது கூச்சமாக இருந்தது.

இராச‌ப‌க்சே: அதற்காக நான் ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ளை வ‌ளைக்க ‌வேண்டியிருந்தது, ஆனால் அது எல்லாம் இல‌ங்கையின் ந‌ல‌னிற்காக‌த்தானே. புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் என‌து நாட்டில் அர‌சிய‌லமைப்பு என்று எதுவும் இல்லை. அப்ப‌டியிருக்க‌ இப்போது ம‌ட்டும் எத‌ற்கு ஒரு அர‌சிய‌ல‌மைப்பு? என்ன‌ தான் இருப்பினும் நாங்க‌ள் ஒரு பௌத்த‌ நாடு தானே. எங்க‌ள‌து ம‌த‌க் கொள்கைக‌ளை பாதுகாப்ப‌து எம‌து முக்கிய‌ க‌ட‌மை தானே.

இராம்: ச‌ரியான‌ க‌ருத்து. புதிய‌ வ‌ர‌லாறு எழுதுவ‌த‌ற்கு முன்ன‌ர் ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை முற்றிலுமாக‌ துடைத்து எறிந்துவிடுங்க‌ள். அற‌த்தின் வ‌ழியாக‌ நாம் ந‌ட‌ப்ப‌து போல‌ காட்டிக்கொள்வ‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஏனென்றால் இந்த‌ (அற‌த்தின் வ‌ழி) த‌ள‌த்தில் எல்லோரும் ச‌ற்று குழ‌ம்பியே உள்ளார்க‌ள். மிக‌வும் ச‌த்த‌மான‌, உறுதியான‌ குர‌லே இறுதியில் எளிதாக‌ ம‌க்க‌ளைச் சென்ற‌டையும்.

இராச‌ப‌க்சே: குர‌ல் ம‌ட்டும் போதாது இராம், நம் மீது விம‌ர்சன‌ம் வைத்து ந‌ம்மைக் கீழே இற‌க்க‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ளை அமைதி ப‌டுத்த‌ ந‌ம‌க்கு துப்பாக்கியும் தேவை. ப‌டுகொலை என்ற‌ மிக‌ப்பெரிய‌ த‌ணிக்கை முறையை நான் ப‌ல‌ முறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ தேவை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு அட‌ம்பிடித்த‌ அந்த‌ முட்டாள் பயல் ‘ச‌ண்டே லீட‌ர்’ இல‌சாந்த‌ விக்ர‌முதுங்காவிற்கும் இதே த‌ணிக்கை முறையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தாயிற்று.

இராம்: இதை எல்லாம் நீங்க‌ள் தொலைபேசியில் கூற‌க்கூடாது. நாம் பேசுவ‌தை எல்லாம் யாரோ ஒருவ‌ர் ப‌திவு செய்தால் என்ன‌வாகும் என‌ நினைத்துப்பாருங்க‌ள்?

இராச‌ப‌க்சே: நான் இந்த‌ தொலைபேசி ப‌திவு ஒரு இர‌ண்டாம் த‌ர‌ த‌மிழ் ந‌டிக‌னை வைத்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் கூறி ம‌றுத்துவிடுவேன். இப்பொழுது கொழும்பில் எங்க‌ளிட‌ம் எந்த‌ ஒரு ஒலி/ஒளி ஆதாரத்தையும் சிதைத்து போலியென மாற்றக்கூடிய ஆற்றல் படைத்த நிபுணர்கள் உள்ளனர்

இராம்: ஹா,ஹா..! நீரா ராடியா என்ற‌ பெரு முதலாளிகளின் வ‌ர்த்த‌க‌ த‌ர‌கு பெண்ம‌ணியுடனான தங்கள் தொலைபேசி உரையாடல் வெளிவ‌ந்த போது இந்திய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளான‌ ப‌ர்கா த‌த்தும், வீர் சிங்க்வீயும் எப்ப‌டி அதை பொய் என்று ம‌‌றுத்தார்க‌ளே, அவ்வளவு நேர்மையாக உள்ள‌து உங்க‌ள‌து ம‌றுப்புரையும். நான் கூட ஒரு தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியின் போது அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் வெளுத்து வாங்கி விட்டேன். அது என‌க்கு ந‌ன்றாக‌ இருந்த‌து. தாக்குத‌தல்தான்‌ பாதுகாப்பி‌ற்கான‌ சிறந்த வ‌ழிமுறை !.

இராச‌ப‌க்சே: நான் கூட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி கேள்விப்ப‌ட்டேன். அதில் நீங்க‌ள் பிர‌பு சாவ்லாவை ம‌ட்டும் க‌ண்டுகொள்ளாம‌ல் விட்ட‌தையும் நான் க‌வ‌னித்தேன். ப‌ர்கா, வீர் சிங்வீயை விட‌ மிக‌ மோச‌மான‌ ஆள் பிரபு சாவ்லா என கேள்விப்படுகிறேன். நீங்க‌ள் செய்த‌து புத்திசாலித்த‌ன‌மான‌ வேலை. அப்புறம், இந்தியாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் யாராவ‌து வேலை இழ‌ந்தால் அவ‌ர்க‌ளை உட‌னே இல‌ங்கைக்கு அழைத்து ஊட‌க‌விய‌லை சொல்லித்த‌ரும் க‌ல்லூரிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ளாக‌ ப‌ணியம‌ர்த்த‌வேண்டும் என‌ என‌து ஊட‌க‌ ஆலோச‌க‌ர் என‌க்கு ஆலோச‌னை கூறினார். அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் திற‌மைக‌ளை வைத்துக்கொண்டு நாம் ந‌ம்மை காத்துக்கொள்ள‌வும் முடியும், நமக்கு ஆதரவாக அவர்களை வைத்து பிரச்சாரம் செய்யவும் முடியும். ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்க‌ள்.

இராம்: உங்க‌ள் காலடியிலேயே நான் கிடக்கும் போது மற்றவர்களெல்லாம் எத‌ற்கு அதிப‌ர் அவ‌ர்க‌ளே?

இராச‌ப‌க்சே: இத‌ற்கு எல்லாம் ம‌ன‌வ‌ருத்த‌ம் அடையாதீர்க‌ள் இராம். இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என‌க்கு நீங்க‌ள் மிக‌ விசுவாச‌மாக‌ இருந்து வ‌ந்துள்ளீர்க‌ள். இந்திய‌ ஊட‌க‌ங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள‌ ந‌ம்ப‌க‌த்த‌ன்மை, ம‌ரியாதையைக் கொண்டு நான் இதுவ‌ரை செய்த‌ ப‌டுகொலைக‌ளையும் ,குற்ற‌ங்க‌ளையும் வெளியே தெரியாம‌ல் மூடி ம‌றைத்து விட்டீர்க‌ள். ஆனால் உண்மை என்ன‌வெனில் உங்க‌ளுக்கு இப்பொழுது வ‌ய‌தாகிவிட்ட‌து. முன்பிருந்த‌தை போல‌ இப்பொழுதெல்லாம் உங்க‌ள‌து குர‌ல் அறை முழுக்க‌ க‌ணீரென‌ கேட்ப‌து இல்லை.

இராம்: அது உண்மை தான். ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நான் கூறிய‌ வார்த்தைக‌ளையே நான் என்னுள் விழுங்க வேண்டியிருந்ததால் அவை எல்லாம் என‌து குர‌ல் நாள‌ங்களை பாதித்துவிட்ட‌ன‌. எப்ப‌டி இருப்பினும் இந்தியாவில், அதாவ‌து புது தில்லியைப் பொருத்த‌வ‌ரை நான் தான் இருப்ப‌திலேயே தூய்மையான‌ க‌றைப‌டியாத‌ ஊட‌க‌விய‌லாள‌ன்.

இராச‌ப‌க்சே: உங்களுடைய சொந்த நலனையெல்லாம் எப்படித்தான் உங்களால் ஊடகவியல் நேர்மையாக மாற்றி பிடிபடாமல் தப்பிக்க முடிகிறதோ? என்ன‌தான் இருப்பினும் இந்து முனிவ‌ர்க‌ளின் கருத்துப்ப‌டி இது “க‌லியுக‌ம்” தானே

இராம்: இந்த‌ வேலையை எல்லாம் என‌து ஆரவாரமான ஆங்கில‌ம் செய்கின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே. நான் பேசும் போதும், எழுதும் போதும் ப‌ய‌ன்ப‌டுத்தும் சிக்க‌லான‌ வ‌ரிக‌ளை இந்த‌ முட்டாள்க‌ள் எல்லாம் வேத வாக்காக என்றே நினைக்கின்றார்க‌ள். நான் நினைக்கின்றேன் அங்கு உள்ள‌ பெரும்பாலானவ‌ர்க‌ள் என்னை முன்னாள் வைசிராயின் ம‌றுபிற‌வி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இராசபக்சே: நீங்க‌ள ”மவுண்டு ரோட் மகாவிசுணு” அவதாரம் என்ற‌ல்ல‌வா நான் நினைத்தேன். ஹா,ஹா,ஹா.

இராம்: ஐயோ கடவுளே நான் ஒரு மார்க்சிசுடு கட்சியின் (சி.பி.எம்) உறுப்பினன்! நீங்க‌ள் கூறுவ‌து ந‌கைச்சுவையாக‌ இல்லை அதிப‌ர் அவ‌ர்க‌ளே. அந்த ‌ வ‌ரியை நான் வெறுக்கின்றேன்.

இராச‌ப‌க்சே: க‌ட‌வுளின் அவ‌தார‌மாக‌ இருப்ப‌த‌ற்கு வெட்க‌ப்ப‌டாதீர்க‌ள். நானும் கூட‌ என்னை போர்க்க‌ட‌வுளான‌ துட்ட‌கெமுனுவின் ம‌றுபிற‌வியாக‌க் கூறிக்கொள்வ‌தில்லையா என்ன‌. மார்க்சிசுட்டுக‌ள் கூட‌ க‌ட‌வுள்க‌ளாக இருக்க‌‌லாமே; இதை நாம் ந‌வீன‌ கால‌ வ‌ர‌லாற்றில் இருந்து தெரிந்துகொள்ள‌வேண்டும். ஆனால் உங்கள் மார்க்சிச‌ம் எனக்கு தலைகால் புரியவில்லை, அந்த வானவில்லில் நீங்கள் எந்த நிறத்தில் இருக்கிறீர்கள்? மஞ்சளா, ஊதாவா? க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சிக‌ப்பு நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் கிடையாது என்றே நினைக்கிறேன்.

இராம்: நான் க‌ண்டிப்பாக‌ இந்த‌ உண்மையை ஒப்புக்கொள்ள‌ வேண்டும் அதிப‌ர் அவ‌ர்க‌ளே. என‌து ஆன்மாவிற்குள் என்னுடைய வ‌ர்த்த‌க‌ இலாப‌த்திற்கும் மார்க்சியத்தின் பாலுள்ள அறிவுபூர்வமான கவர்ச்சிக்கும் இடையே மிக‌ப்பெரிய‌ ச‌ண்டை போர் வ‌ருகின்ற‌து. ஒரு அற்ப முன்னாள் சோச‌லிச‌வாதியான‌ உங்க‌ளால் இதெல்லாம் புரிந்து கொள்ள‌முடியாது !.

இராச‌ப‌க்சே: என்னால் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ முடிகின்ற‌து இராம். உங்க‌ள‌து ஆன்மா இலாப‌த்திற்கும் மார்க்சியத்துக்கும் இடையில் முரண்படும் போது, உங்க‌ளிட‌ம் உள்ள‌ பிராமணன் அந்த இர‌ண்டு பக்கங்களிடமும் எவ்வ‌ள‌வு இலாப‌ம் பார்க்க‌முடியுமோ என்பதை கவனமாக கணித்து அதை பெறும் வேலையை செய்துகொண்டிருக்கின்ற‌து.

இராம்: நீங்க‌ள் ஒரு சாதிய‌வாதீ அதிப‌ர் அவ‌ர்க‌ளே. ஒரு ந‌ல்ல‌ பௌத்தரான‌ நீங்க‌ள் இதுபோல‌ல்லாம் பேச‌க்கூடாது. அது ஒரு ச‌ரியான‌ சோச‌லிச‌மோ, மார்க்சிய‌மோ அ‌ல்ல‌ !

இராச‌ப‌க்சே: இப்பொழுது நீங்க‌ள் கூற‌வ‌ருவ‌தை நான் ச‌ரியாக‌ புரிந்துகொண்டேன் இராம். இது போன்ற‌ குழப்பங்களிலிருந்து நீங்க‌ள் வெளியேவ‌ர‌ வேண்டும். நீ ஒரு சாண‌க்கிய‌னைப் போல‌ ந‌ட‌ந்தால், பேசினால். நீ ஒரு சாண‌க்கிய‌ன்! உங்கள் முதுமையை இப்போது நான் கணிக்கிறேன். உங்கள் ப‌த்திரிகைப் பேர‌ர‌சை இளைஞ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதற்கு மறுப்பது, உங்கள் நண்பர்களை பாதிக்கக்கூடிய செய்திகளை வெளியிடாமல் மூடி மறைப்பது அதே நேரம் ஊடக நேர்மைக்கு வகுப்பெடுக்கும் ஒரு ‘மடமாக’ உங்களை நிலை நிறுத்திக்கொள்வது.

இராம்: நீங்க‌ள் எத்த‌னை கால‌ம் உங்க‌ள் பௌத்த‌ நாட்டிற்கு அதிபராக‌ இருக்கின்றீர்க‌ளோ, அதுவ‌ரை நானும் என‌து ப‌த்திரிகைக்கு ஆசிரியராக‌ இருக்க‌ விரும்புகின்றேன். இந்த ஒரு சின்ன‌ இல‌ட்சிய‌த்தைத் தான் நான் கொண்டுள்ளேன். இது எல்லாம் உங்க‌ள‌து ஆசிர்வாத‌மும், வாழ்த்துக‌ளும் இருந்தால் தான் ந‌ட‌க்கும்.

நன்றி: வினவு.

ஹிந்து பத்திரிக்கையும் அதன் ஹிந்துத்துவா சிந்தனையும்.

ஹிந்து நாளேடு நடுநிலை நாளேடு என்றும்,ஆசிரியர் இராம் மூத்த ஊடகவியலாளர், என்று இந்து நாளேட்டின் புராணம்பாடும் நம் அறிவு ஜீவிகள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஹிந்து பத்திரிக்கையின் பத்திரிக்கை தருமம் என்றால் என்ன? அதன் நடுநிலை என்பது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் என்பதையும், பாசிச ஹிந்து பயங்கரவாத அமைப்புகளையும் அதன் வர்ணாசிரம கொள்கைகளுக்கும் ஆதரவாக இது செயல்பட தவறியது இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். த‌மிழ்நாட்டின் ஆன்மீக குருக்கள் முதல் வ‌ங்காளத்தில் உள்ள‌ த‌ன‌து விருப்ப‌மிகு மார்க்சிசுட்டுகள் வரை சிலரின் கிரிமினல் குற்றங்கள் முதல் படுகொலைகள் வரை திரு.இராமின் தலைமையில் இயங்கும் ஊடகம் வெளியிடுவதில்லை, மாறாக முழுவ‌துமாக‌ மூடி ம‌றைத்து, பொய்யான‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌ர‌ப்புவ‌திலேயே குறியாக‌ இருக்கின்ற‌து. எல்லா தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளையும் இசுலாமிய‌ ச‌மூக‌மே ந‌ட‌த்துகின்ற‌து என்று இந்திய‌ உள‌வுத்துறை கூறும் ப‌ச்சைப் பொய்க‌ளை க‌ண்ணை மூடிக்கொண்டு அப்ப‌டியே கிளிப்பிள்ளை போல‌ ஒப்புவித்து வ‌ருகின்ற‌து இந்து நாளேடு.

மேலும் ஹிந்து தீவிரவாதம் குறித்தோ, ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆன அத்வானி முதல் மோடிவரை நடாத்திய கலவரங்கள் குறித்தோ, இப்பொது குண்டுவிடிப்புகளில் சிக்கி இருக்கும் ஹிந்து தீவிரவாதிகள் பற்றியோ, அவர்களது பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு இருந்து செயல்பட்டது என்பது பற்றியோ ஹிந்து, தினமலர், தினமணி, போன்ற பத்திரிக்கைகள் இந்த செய்திகளை வெளியிடாமல் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து மவுனம் காத்து வருகின்றன. இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை திட்ட மிட்டு நடாத்திய நாசகார ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு பற்றி எழுதாத பேசாத எந்த ஒரு பத்திரிக்கையும், எந்த ஒரு அரசியல்வாதியும், இவர்கள் எல்லாம் ஹிந்துத்துவா தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று நம்மால் சொல்ல பகிரங்கமாக சொல்ல முடியும்.

நன்றி : வினவு.

குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர் எஸ் எஸ்: அப்பாவி விடுதலை.

ஹைதராபாத்,ஜன:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு போலீசாரால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கலீமும் ஒருவர்.

மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.
இதனைத் தொடர்ந்து இக்குண்டுவெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளி அஸிமானந்தா கடந்த வருடம் நவம்பர் மாதம் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அஸிமானந்தா ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

எதிர்பாராத விதமாக அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இதே வழக்கில் கைதுச் செய்யப்பட்ட அப்துல் கலீம், அஸிமானந்தாவுக்கு சேவைபுரிய நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்துல் கலீமின் நன்னடத்தை மற்றும் போலி வழக்கில் அவர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை அறிந்துக்கொண்ட அஸிமானந்தா மனம் மாறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்புகளில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) அப்துல் கலீமுக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகையை ஈடாக வைத்து அப்துல் கலீமுக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல்கலீம் மருத்துவக்கல்லூரி மாணவராவார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களாக அவர் தனது படிப்பை தொடர முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் கலீம் போலீசாரால் ஒரு ரகசியமான பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து விடுதலையான அப்துல்கலீம் மீண்டும் செல்ஃபோனை சிறையிலிருந்த ஷேக் அப்துல் காதர் என்பவருக்கு அளித்ததாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த அப்துல் கலீம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "நான் பல மாதங்களாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை என்னுடன் சிறையிலிருந்த ஒருவர் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார். உடனே அவர் என்னை சந்தித்து பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர்தான் அவரைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். அஸிமானந்தா வேறு பெரிய நபர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என நான் கருதுகிறேன். நான் அவரிடம், என்னை போலீசார் கைதுச் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியது மற்றும் இரண்டுமுறை நார்கோடிக் அனாலிசிஸ்(உண்மைக் கண்டறியும் சோதனை) சோதனைக்கு உட்படுத்தியது ஆகியவற்றைத் தெரிவித்தேன். மேலும் நான் அவருக்கு தண்ணீர் பிடித்துக் கொடுப்பது உள்பட சில சேவைகளை புரிந்தேன். மேலும் அவர் சொல்வதை அமைதியாக கேட்டேன். இவையெல்லாம் அவருடைய மனதை தொட்டது. இதனால் அவருக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

Jan 18, 2011

தெற்கு சூடன் சுய வாக்கெடுப்பு போல கஷ்மீர் விசயத்தில் நடக்குமா?


கொழும்பு, ஜன.18- தெற்கு சூடான் விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அழைப்பு வந்துள்ளதாக அதன் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது.

சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்பார்கள். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள். நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் "நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தெற்கு சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தெற்கு சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு சூடான் போலவே தமிழ் ஈழமும் விரைவில் விடுதலை பெறுமென ஈழத்தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். தெற்கு சூடானில் வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அதிபர் ஒபாமா "நியுயார்க் டைம்ஸ்" பத்திரிகையில், "லட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவின் இச்செய்தியை வரவேற்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேபோல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தமிழ் ஈழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

சிந்திக்கவும்: தெற்கு சூடன் சுய வாக்கெடுப்பு போல ஒரு முடிவு எடுக்கும் தைரியம் நம் இந்திய அரசுக்கு காஷ்மீர் விசயத்தில் வருமா? இந்த விசயத்தில் மனசாட்சி உள்ள ஒவ்வொரு இந்தியனும் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. கஷ்மீர் விசயத்தில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர கஷ்மீர் அமைய ஒவ்வொரு மனசாட்சி உள்ள இந்தியனும் குரல் கொடுக்கவேண்டும். சுதந்திர கஷ்மீர் அமைய இந்திய அரசின் அத்துமீறல்கள் முறியடிக்க பட முழு இந்தியாவும் கஷ்மீர் மக்களுக்கு குரல் கொடுப்பது நாமும் நியாமான மக்கள் என்பதை வரலாற்றில் பதிப்போம்.

நிவாரண நிதி என்றதும் நம் நடிகர்கள் பற்றிதான் நினைவுக்குவருகிறது!!!

பீஜிங், ஜன.18- கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 15 லட்சம் டாலர்கள் நிவாரண உதவி வழங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. இத்தகவலை சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ, பீஜிங் நகரில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சீன அரசு சார்பில் 15 லட்சம் டாலர் தொகைக்கான நிவாரணப் பொருட்களும், சீன செஞ்சிலுவை சங்கம் ரொக்கமாக 30 ஆயிரம் டாலர்களும் வழங்கும் என்று அவர் கூறினார்.இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாம்கட்ட உதவியாக 10 லட்சம் டாலர்கள் தொகைக்கான நிவாரணப் பொருட்கள் நேற்று இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீவிபத்தில் மரணித்த சோகம் நடந்த பொது அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நமது நடிகர்கள் ஆளாளுக்கு பல இலட்சம் நிவாரண தொகைகளை அறிவித்தார்கள். அதில் பலர் அதை கடைசிவரை கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்பதுதான் பொது மக்களின் பணத்தில் தங்களை வளர்த்து கொண்ட இவர்களின் சேவை மனப்பான்மைதான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

மனித உரிமையா!!! கிலோ எவ்வளவு? கேட்க்கும் இந்தியா!!!


ஜம்மு,ஜன.18:திருட்டு குற்றத்தில் கைதுச் செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் வைத்து மரணமடைந்ததைத் தொடர்ந்து காவல்நிலைய பொறுப்புக்குரிய அதிகாரிகள் மீது மாஜிஸ்ட்ரே விசாரணைக்கு ஜம்மு கஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திருட்டு குற்றத்தில் கைதுச் செய்யப்பட்ட விஜய்குமார்(வயது 30) என்பவர் போலீஸ் காவலில் வைத்து மர்மமான முறையில் நேற்று முன்தினம் மரணித்தார்.

சிந்திக்கவும் :காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஈழ தமிழர்கள் விஷயம் முதல் காட்டுவேட்டை வரை இந்திய அரசும் அதன் கருவிகளும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. உலகில் மனித உரிமைகள் அதிகம் மீறப்படும் நாடுகளின் வரிசையில் சீக்கிரம் முதலிடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய காவல் துறை போல் ஒரு இதயம் அழுகிய காவல் துறையை உலகில் எங்கும் பார்க்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்பொது அவர்களுக்கு துணையாக நீதி துறையும், சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jan 17, 2011

விநாயகரை வைத்து பாலியல் நிகழ்ச்சி!!!


நியூயார்க், ஜன.17- அமெரிக்காவில் பிரபலமான என்பிசி தொலைக்காட்சியில் இந்து கடவுளான விநாயகருக்கு அவமரியாதை செய்யும் வகையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பாக அந்த தொலைக்காட்சி நிர்வாகமும், நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்காவில் செயல்படும் இந்து மதவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. உலக இந்துத்துவ சங்கத்தின் தலைவரான ராஜன் ஜெத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஜனவரி 8-ம் தேதி என்பிசி தொலைக்காட்சியில் 'சேட்டர்டே நைட் லைவ்' என்னும் பாலியல் தொடர்பான நிகழ்ச்சியில் விநாயகரின் உருவத்தை வைத்து செக்ஸ் குறித்த விளக்கம் அளித்தனர். எனவே, அந்த விடியோ காட்சியை உடனடியாக தனது இணையதளத்தில் இருந்து என்பிசி தொலைக்காட்சி அகற்ற வேண்டும். மேலும், என்பிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஜெப் ஜூக்கர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் லோர்னே மைக்கேல்ஸ், நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹாலிவுட் நடிகர்கள் ஜிம் கேர்ரி, கெனன் தாம்ஸன் ஆகியோர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறினார்.

கொள்ளைகாரர்களுக்கு ஒரு வங்கி அதுதான் சுவிஸ் பேங்க்.

லண்டன் : சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் பணியாளர் ஒருவர், சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் ஆசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யார் யார் எல்லாம் சட்ட விரோதமாக பணம் சேர்த்து வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் அளித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வரும் ஜூலியஸ் பார் என்ற வங்கியில் பணியாற்றியவர் ருடால்ப் எல்மர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், சுவிஸ் வங்கிகள் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறியிருந்தார். அதன்படி, நேற்று லண்டனில் "பிரன்ட் லைன்' கிளப்பில், அதன் உரிமையாளரும், விக்கிலீக்ஸ்' பிரதிநிதியும், ஜூலியன் அசாஞ்சின் நண்பருமான வாகன் ஸ்மித் முன்னிலையில், அந்த ரகசிய ஆவணங்களை ஒப்படைத்தார்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகிய 40 பேர் சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் வரி ஏய்ப்பு செய்வதற்காக 2,000 கணக்குகளில் போட்டு வைத்துள்ள பணம் பற்றிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக எல்மர் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வங்கி விதிகளை மீறியதற்காக எல்மர், நாளை, சுவிட்சர்லாந்தில் வழக்கில் ஆஜராக உள்ளார்.

Fast Foods!! ஜாக்கிரதை!!

ஜன.17:பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு தடை செய்தது. நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் இணைக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன. 2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது. அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அவசர உலகின் ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவது அமெரிக்காதான். கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர். அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா? இந்த நிலை நமது நாட்டுக்கும் வரவேண்டுமா?

நன்றி :MSAH

இந்திய ராணுவமும் & முஸ்லிம்களும்: ஒரு சமூக பார்வை.

கடந்த ஆண்டு(2010) நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த முஸ்லிம்களின் விபரம்:
புதுடெல்லி,ஜன.17:இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதமாவர். ஆனால், இந்தியாவின் ராணுவத்தில் அவர்களின் எண்ணிக்கையோ வெறும் 3 சதவீதம்தான். கடந்த 2010 ஆம் ஆண்டு 187 ஜவான்கள் தங்கள் உயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 6.41 சதவீதம்பேர் முஸ்லிம்களாவர். அவ்வாறெனில் தங்களது சதவீதத்திற்கு அதிகமாகவே உயிர் தியாகம் புரிந்துள்ளனர் முஸ்லிம் ராணுவத்தினர். 12 முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 10 பேர்கள் தரைப் படையில் பணியாற்றியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் கழிந்த பொழுதும் ராணுவத்தில் தேர்வுச் செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வரலாற்றாய்வாளர் டாக்டர் உமர் காலிதி அவர்கள் மிகுந்த ஆய்வுச் செய்து, ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்ட Khaki and Ethnic Violence(காக்கியும், இன வன்முறையும்) என்ற நூலில் இதுக்குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை எடுத்துரைத்தது இந்நூல். இது பாராளுமன்றத்தில் சூடான விவாதத்திற்கும் காரணமானது. 5 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்களின் பிற்போக்குத் தன்மையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சச்சார் கமிஷன் அறிக்கை ராணுவத்திடம் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு என கேள்வி எழுப்பிய பொழுது, மத ரீதியாக எந்த எண்ணிக்கையும் தரமாட்டோம் என ராணுவம் பதிலளித்தது.

ராணுவத்தில் ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான அறிக்கையும் இல்லை. 3 சதவீதம் என்பது பொதுவான ஊகமாகும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை 29 ஆயிரம் இருக்கலாம். ஆனால், இந்த எண்ணிக்கை ஜம்மு கஷ்மீர் காலட்படையில் இடம்பெற்றிருக்கும் 50 சதவீத முஸ்லிம்களை குறைத்தால் இன்னும் மிகக் குறைந்த சதவீதமாகும். இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ராணுவத்தில் அதிக அளவில் சிறுபான்மை மக்களை சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
source:twocircles.net

"எல்லோரையும் எரித்துக் கொல்லுங்கள்" வெறிப்பிடித்த கூட்டம் கத்தியது.


புதுடெல்லி,ஜன.17:ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரசாரகரும், பயங்கரவாதியுமான சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்தான் என்ற உண்மை வெளியானபோது நாம் கவனிக்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ். இயக்க பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தை. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கிய உறுபினர் சுனில் ஜோஷியை கொலைச் செய்யப்பட்டதற்கு பிறகு மத்திய பிரதேச மாநிலம் தேவாஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுதர்கேதாவில் உள்ள முஸ்லிம் வீடுகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து இரண்டு பேரை தீவைத்துக் கொளுத்திக் கொலைச் செய்துள்ளனர்.

ஷெராஜ் பீவியின் கணவர் 65 வயதான ரஷீதும், 27 வயதான மகன் ஜலீலும் கொலைச் செய்யப்பட்டவர்களாவர். இதர மகன்களான ராஷிஷிற்கும், அஷ்பாக்கிற்கும் குண்டடிப்பட்ட போதும் அவர்கள் மரணிக்கவில்லை. இவரது மகள் உடல் பாதி வெந்துபோன நிலையில் உயிர் தப்பியுள்ளார். ஜோஷியை கொலைச் செய்ததற்கு பிறகு அதனை காரணங்காட்டி முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்கி உள்ளனர். 2007 டிசம்பர் 29ஆம் தேதி ஜோஷி கொலைச் செய்யப்பட்ட அடுத்த நாளில் சுதர்கேதாவில் தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட ஹிந்து வெறியர்கள் கோபத்துடன் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை தூக்கிக்கொண்டு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். "எல்லோரையும் எரித்துக் கொல்லுங்கள்" என வெறிப்பிடித்த கூட்டம் கத்தியதாக ஷெராஜ்பீ நினைவுக் கூறுகிறார்.

"எனது வீட்டை சுற்றிவளைத்த ஹிந்துத்துவ வெறியர்களிடம், ஏன் எங்களை நீங்கள் தாக்குகின்றீர்கள்? என நான் கேட்டேன். பதில் கூறாத அவர்கள் எவரும் வீட்டிலிருந்து வெளியேறி விடாதவாறு வீட்டின் வெளியே கதவுகளை மூடினர்." ஹிந்துத்துவ வெறியர்களின் கூட்டத்தை வழிநடத்தியவாறு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வருவதை ரஷீத் வீட்டிற்கு வெளியேயிருந்து பார்த்துள்ளார்.

ஹிந்துத்துவ வெறியர்களில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜலீலை வெளியே இழுத்துச்சென்று தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதனை தடுப்பதற்கு சென்ற அஷ்பாக்கையும், ராஷிஷையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் ரஷீதின் இளைய சகோதரி ஐந்து வயது அஸ்மாவிற்கு உடலில் காயமேற்பட்டது. 90 சதவீதம் உடல் கருகிய ஜலீல் பதினொன்று தினங்களாக எம்.ஒய் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கடும் வேதனையை அனுபவித்து மரணித்துள்ளார்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்டு மறுதினம் ஹிந்துத்துவ அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன. முழு அடைப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த அக்கிரமத்தை நிகழ்த்தியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். ஜோஷியைக் கொலைச் செய்தது 'சிமி' அமைப்புதான் என போலீஸ் அறிவித்துள்ளது. இது ஹிந்துத்துவ வெறியர்களுக்கு மேலும் வெறியைத் தூண்டியுள்ளது. தாக்குதல்களுக்கெதிராக முஸ்லிம்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு பதிவுச் செய்தபோதும் போலீசாரும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் இணைந்து வழக்கை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

பான்வர்சிங், மஹிபால் சிங், ஓம்பிரகாஷ், ஜஸ்வந்த்சிங், ராஜ்பால் சிங் ஆகியோர்தான் தாக்குதலை நடத்தி முஸ்லிம்களைக் கொலைச் செய்த குற்றவாளிகள். வழக்கை வாபஸ் பெறாமல் உறுதியாக இருந்ததால் குற்றவாளிகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி தேவாஸ் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. வழக்கு தற்பொழுது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. குற்றவாளிகளின் அச்சுறுத்தலால ஷெராஜ்பீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதிமன்றத்திற்கு செல்லக்கூட முடியவில்லை.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Jan 16, 2011

10,000 ஆணிகள் கொண்ட படுக்கையில் பரதம் ஆடி சாதனை.

திருச்சி : 'பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக்கையில் நடனமாடும் வகையில், என் கால் பாதங்களை பழக்கப்படுத்த கடும் பயிற்சி எடுத்துக் கொண்டேன் என இளம் பெண் பூர்ணி கூறினார். மலேசியா நாட்டின் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர், இருதயம் செபஸ்தியார். திருச்சி மாவட்டம் சமயபுரம், நரிமேட்டைச் சேர்ந்த இவரது அப்பா அந்தோணி, 1946ம் சமையல் வேலைக்காக மலேசியா சென்றார்; அங்கேயே குடியுரிமை பெற்றார். செபஸ்தியாரின் கலைக் கூடம்' என்ற பெயரில், 20 ஆண்டாக தமிழ் கிராமிய கலை நிகழ்ச்சிகளை, மலேசியாவில் செபஸ்தியார் நடத்தி வருகிறார். முள் படுக்கையில், 40 அடி உயரத்தில் கரகாட்டம், என்று சாதனை படைத்த செபஸ்தியாருக்கு, "ஆசியாவின் வியப்புகுரிய சாதனை' பட்டியலில் இடம்பெற்றுள்ளார். செபஸ்தியாரின் கலைக்குழுவில் இடம்பெற்றுள்ள 450 கலைஞர்களில், அவரது வளர்ப்பு மகளான பூர்ணியும் (19) ஒருவர்.

ஐயோ!! அலும்பு தாங்கள!! கண்ண கெட்டுதே!!!


ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் A Husband for an Hour Limited. இப்பெயரால் பெண்கள் பலரும் குழம்பிப் போய் உள்ளார்கள். எனவே இப்பெயர் குறித்தும், நிறுவனத்தின் சேவை குறித்தும் உரிய விளக்கம் கோரி வருகின்றார்கள். ஆனால் அந்த நிறுவனம் சொல்கிறது வாடிக்கையாளர்கள் குழம்பத் தேவை இல்லை. இது ஒரு விபச்சார சேவை அல்ல வியாபார சேவை என்று அந்த நிறுவனம் கூறுகிறது. வாடகைக் கணவன்மார்கள் வீட்டுப் பணிகள் முதல் பெண்களுக்கு சின்னச் சின்ன பணிகள் வரை செய்து கொடுப்பார்கள். இது போன்ற பணிகளுக்கு ஆண்களை ஒழுங்கு செய்து கொடுக்கின்றமையே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஒரு கணவனை இவ்வாறு ஒரு பெண் வாடகைக்கு பெற ஏற்படுகின்ற செலவு 17 டாலர் மாத்திரமே. உலகம் போற போக்க பாருங்கள். வாடகை தாய் முதல் வாடகை கணவன் வரை வந்தாச்சி. ஐயோ கண்ணை கேட்டுதே.

'யுத்தம் மரணம் கச்சாமி' 'ரத்தம் மரணம் கச்சாமி!!!

சாமியார்கள் பிரேமானந்தா, நித்யானந்தா கூடவே சங்கரமடத்து ஜெயேந்திரனும் காமக்களியாட்டம் போட்டு உள்ளே போனபொழுது காவிகளிலும் பாவிகள் இருக்கின்றனரா? என மக்கள் வியந்து போயினர்.'சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்' என்ற பெயரிட்டே ஒருவர் நாட்டு மக்களின் பணத்தையெல்லாம் வாரிசுருட்டியதும் தற்போது சிறையில் அவர் ஓய்வெடுப்பதும் நமக்கு தெரிந்த சேதிதான்.

சன் தொலைக்காட்சி நித்யானாந்தாவின் லீலைகளை தொடர்ந்து ஒளிபரப்பிய பொழுது 'கர்மம் கர்மம்' என காரி உமிழ்ந்தவர்களும் உண்டு. 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற சுலோகத்தை கேட்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் 'யுத்தம் மரணம் கச்சாமிதான்' சாமியார்களின் வேலையோ என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரக்யாசிங் தாக்கூரும், அஸிமானந்தாவும் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான பொழுது எழுந்த சந்தேகம் இது! இவ்வளவு காலமும் இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்களின் பழி பாவங்களையெல்லாம் சுமந்தது முஸ்லிம் சமுதாயமாகும். முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளேயும் பாசிசத்தின் வாடையை முகர்ந்துபோன சில புல்லுருவிகளும், அறிஞர்களின் போர்வையில் நாவண்மையை வெளிப்படுத்தும் சகலகலா வல்லுநர்களும் தமது சொந்த சமூக மக்களையே தீவிரவாதிகள் எனக்கூறி தங்களுக்கு ஏற்பட்ட அரிப்பை தீர்த்துக்கொண்டனர்.

ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறைக்குள்ளே வாடும்பொழுது முஸ்லிம் சமுதாயம் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற அதிகார-ஊடக வர்க்கத்தின் சாட்டையடிகளை நெஞ்சில் சுமக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ரிக்க்ஷாவை இழுத்தும், மூடைகளை சுமந்தும் வாழ்க்கையை ஓட்டியவர்கள் கல்வியறிவை பெற்றவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் படித்த இளைஞர்களும் தீவிரவாதிகளாக்கப்பட்டனர். வகுப்புவாத வெறியிலும், மேல்தட்டு மேதாவித்தனத்திலும் ஊறிப்போன போலீசும், உளவுத்துறையும், ஊடகங்களும் ஒரே ரீதியிலான பொய்க் கதைகளை பரப்பிவந்தனர்.

கடந்த காலங்களில் மேல்ஜாதி வர்க்கத்தினருக்கும், மேல்தட்டு தரகு முதலாளிகளுக்கும் அடிமை சேவகம் புரிந்தவர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பொழுது இவர்களுக்கெல்லாம் சமூகத்தில் அந்தஸ்தையும், கண்ணியத்தையும் அளித்தால் நமது நிலை என்னவாகும்? என யோசித்த தீவிரவாத சிந்தனை கொண்ட ஹெட்கோவரும், கோல்வால்கரும் போன்ற மேல்ஜாதி திமிர்பிடித்த மேதாவிகள் ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கி கலவரங்கள், இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகள் வாயிலாக முஸ்லிம் சமூகத்தை பூண்டோடு அழிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கினர்.

கொடூரமாக கொல்லப்படும் முஸ்லிம்கள் மீது எவருக்கும் பரிதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களையே பலிகடாவாக்கி தீவிரவாத முத்திரைக்குத்தி சிறைக் கொட்டகைகளில் அடைத்தனர். அதிகார வர்க்கத்திலும், ஊடகத்திலும், இன்னும் பிற துறைகளிலும் ஊடுருவிய பாசிச வெறி இதற்கு பெரிதும் துணைபுரிந்தது. முந்தைய காலங்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பாவத்தை முஸ்லிம்கள் மீது சுமத்தினர். பலதார மணம், தலாக் போன்றவையெல்லாம் பெருங்குற்றங்கள் எனக்கூறி சமூக விரோதிகளாக முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டனர்.

இந்தியாவின் அதிகார மையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரே ஆறுதலாக மாறியது வளைகுடா நாடுகளே. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும், பெற்றோரின் கடன் சுமையை அடைப்பதற்காகவும், சகோதரிகளின் திருமணங்களை நடத்துவதற்காகவும் வளைகுடா நாடுகளின் பாலைவன மண்ணில் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து அனுப்பிய காசுகளால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிலரின் வாழ்க்கை மேம்படத் துவங்கியது. இதனைக் கண்ணுற்ற பாசிச சக்திகள் சும்மா இருப்பார்களா? உடனே ஹவாலா, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்ற கட்டுக் கதைகளை கிளப்பி விட்டார்கள்.

தாடி வைப்பதும், ஹிஜாப் அணிவதும் கூட தீவிரவாதமாக சித்தரித்தது இந்தியாவின் உச்சநீதிமன்றம். ஆதாரமில்லாவிட்டாலும் பொதுமனசாட்சி எனக்கூறி முஸ்லிம் அதுவும் கஷ்மீரி முஸ்லிம் என்பதற்காக பாராளுமன்றத் தாக்குதலில் சிக்கவைக்கப்பட்ட அப்ஸல் குருவுக்கு தூக்குத் தண்டனையை உறுதிச்செய்தது அதே உச்சநீதிமன்றத்தின் ஹிந்துத்துவ மனசாட்சிதான். நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவ்விடங்களில் குர்ஆன் வசனங்கள், அரபு அல்லது உருது மொழியிலான கவிதைகள் என எழுதப்பட்ட காகிதங்களை விட்டெறிந்துவிட்டு பழியை லாவகாமாக முஸ்லிம்கள் மீதே சுமத்திவந்தனர்.

சொந்த சமுதாய முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் மஸ்ஜிதுகளிலும் குண்டுவைக்கும் மா பாதகர்கள் என்ற பெரும்பழியும் முஸ்லிம்கள் சுமக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொண்டு அஜ்மீரில் குண்டுவைத்தவர்கள் தர்காவை விரும்பாதவர்கள் எனக் கட்டுக்கதையை பரப்பிவிட்டனர். அரவை இயந்திரத்தின் வயர்களும், பேட்டரிகளும் சி.டிக்களும் பெரும் ஆயுதங்கள் என அறிமுகப்படுத்தப்பட்டன.

மொபைல் ஃபோனில் அரபு மொழியைப் பார்த்துவிட்டு அல்காயிதா தீவிரவாதிகள் என தொழில்நுட்பம் தெரியாமல் கதையளந்தனர். வீட்டிலிருந்த பெண்களையும் தீவிரவாதிகள் என சித்தரித்தனர். பர்தாவுக்குள் குண்டுவைத்துக் கொண்டு தற்கொலைப் படையாக திரிவதாக பொய்க் கதைகளை பரப்பினர். இதையெல்லாம் இந்தியாவில் பெரும்பாலோர் நம்பவும் செய்தனர்.'அரசன் அன்றே கொல்வான் கடவுள் நின்றுக் கொல்வார்' என்ற பழமொழிக்கேற்ப உண்மை ஒரு நாள் வெளிப்பட்டது. ஹேமந்த் கர்காரே என்ற நடுநிலையான அதிகாரியின் மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.

கர்காரேயால் தங்களது திட்டங்கள் தவிடுபொடியாகிவிடும் எனக் கருதிய பாசிச கும்பல் அவருக்கு மிரட்டல் விடுத்தது. கடைசியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் கர்காரே. அவரது கொலைக்கு யார் காரணம் என்பது நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானதாகும். இடையில் தொய்வடைந்த விசாரணை ராஜஸ்தான் ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ, சி.பி.ஐ ஆகிய புலனாய்வு ஏஜன்சிகளால் சூடு பிடித்தது. ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட காவி உடை தரித்த பிரக்யாசிங் என்ற சுவாமினியுடன் அஸிமானந்தா என்ற ஒரு சுவாமிஜியும் தற்பொழுது மாட்டிக்கொண்டார்.

சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு தகுதியுடைய இவர்களுக்கு சிறைச்சாலைகளில் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டன. கொலை வழக்கில் உள்ளே சென்ற காமக்கோடிக்கு காலைக் கடன்களை நிறைவேற்ற வாழை இலையை தேடி காவல்துறை அலைந்ததை பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். சுவாமிகள் என்ற பெயரில் மக்களை அண்டிப் பிழைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு சிறை வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் கசக்க ஆரம்பித்தன. இதனால், அதிகாரிகளுடன் தங்களுக்கு வசதி வாய்ப்புகளைக்கோரி மோதலில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவுக்கு சேவகம் புரிவதற்கு சிறை அதிகாரிகளால் அப்துல் கலீம் என்ற முஸ்லிம் சிறைவாசி நியமிக்கப்பட்டார். சுவாமிஜிக்கு பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தல், காவி ஆடைகளை துவைத்துக் கொடுத்தல் என அவருக்கு தேவையான வேலைகளை செய்துக்கொடுக்க அப்துல் கலீமுக்கு எவ்வித தயக்கமும் ஏற்படவில்லை. சாதாரணமாக கைதிகள் அனைவரும் வரிசையில் நின்று உணவைப் பெற்று செல்லும்போது அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்காக வரிசையில் நின்று உணவைப் பெற்றுக் கொடுத்தார். தான் ஏற்றுக்கொண்ட மார்க்கம் எந்த மதத்தைச் சார்ந்த மனிதர்களுக்கும் சேவை புரிவதை தடுக்கவில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்ட அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்கு தொடர்ந்து சேவை புரிந்துவந்தார்.

இந்திய சமூகம் குண்டுவெடிப்புகளின் உண்மை நிலையை அறிவதற்குரிய வாய்ப்பாக அஸிமானந்தாவையும், அப்துல் கலீமையும் இறைவன் உரையாட வைத்தான். தான் நடத்திய குண்டு வெடிப்புகளில் ஒன்றான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் குற்றத்தை சுமந்துக் கொண்டு சிறைக் கொட்டகையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் அப்துல் கலீம் என்பதை அஸிமானந்தா புரிந்துக்கொண்டார். இந்தியாவில் பாசிச சக்திகளை உரமூட்டி வளர்ப்பதில் மன மகிழ்ச்சியடையும் இந்தியக் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கு துதிபாடும் சமுதாய துரோகிகளுக்கும் ஏற்படாத மனமாற்றத்தை இறைவன் அஸிமான்ந்தாவுக்கு அளித்தான் என்றே கூறலாம்.

இந்திய ஆட்சியாளர்களுக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, போலீசுக்கோ, ஊடகங்களுக்கோ இத்தகைய மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. குண்டு வெடிப்புகளை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு காரணம் அஸிமானந்தா என்பதை அறிந்த பிறகும் அப்துல் கலீம் அவரிடம் எவ்வித கோபமும் கொள்ளவில்லை. அவருக்கு தொடர்ந்து சேவை புரிந்தே வந்தார் (இதனை இதுவரை உலகம் காணாத மிகப்பெரிய மத நல்லிணக்கம் எனக்கூறி முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் புளங்காகிதம் அடையலாம்.

ஒன்றரை வருடங்களாக சிறையில் வாடும் அப்துல் கலீமுக்கு வயதான பெற்றோர்களும், இளம் வயது மனைவியும், சிறு குழந்தையும் உண்டு. அப்துல் கலீம் சிறையில் வாடும்பொழுது வெளியே அவருடைய குடும்பம் கவனிப்பாரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்துல் கலீமைப் போலவே மலேகான் குண்டுவெடிப்பில் கைதுச் செய்யப்பட்ட 32 அப்பாவி முஸ்லிம்களும் பல ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் தங்கள் வாழ்க்கையை கழித்துவரும் அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது.

இன்று அப்துல் கலீமைப் போல் 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பொய்யாக தங்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத வழக்குகளின் காரணமாக சிறைச்சாலைகளில் அநியாயமாக அடைக்கப்பட்டுள்ளனர். மொபைல் வியாபாரியான அப்துல் கலீம் 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஒன்றரை ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தபிறகும் மீண்டும் இதேக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சஞ்சல்குடா சிறையிலிருந்த பொழுதுதான் அச்சிறையில் அடைக்கப்பட்ட அஸிமானந்தாவுக்கு சேவை புரிய பணிக்கப்பட்டார் அப்துல் கலீம். 21 வயதான அப்துல் கலீமின் உயர்ந்த நற்குணம் அஸிமானந்தாவின் உள்ளத்தை உருகச் செய்தது என twocircles.net என்ற இணையதள பத்திரிகை கூறுகிறது.

தன்னுடன் வாழ்ந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஒழுக்க வாழ்வுடன் அப்துல் கலீமை ஒப்பீடுச்செய்த அஸிமானந்தாவுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. கடந்த 2010 டிசம்பர் 18-ஆம் தேதி அஸிமானந்தா புதுடெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் பொழுது அதனை தடுக்கத்தான் நீதிபதி முயன்றார். குற்றத்தை ஒப்புக்கொண்டால் மரணத்தண்டனை கிடைக்கும் என்பதையும் அஸிமானந்தாவுக்கு நினைவூட்ட நீதிபதி தயங்கவில்லை. இதில் இருந்து நீதி துறையில் எப்படி காவி பயங்கரவாதம் வூடுருவிட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச் செய்யப்பட்டபோதும் அஸிமானந்தா கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் தலைமறைவாக இருந்த பொழுது சி.பி.ஐ யால் கைது செய்யப்பட்டார். சுவாமி குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாரே என்ற கவலையில் ஆழ்ந்துள்ள நீதிமன்றங்களும், போலீசும், ஊடகங்களும் அப்துல் கலீம் போன்ற அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளைக் குறித்து தொடர்ந்து மெளன விரதத்தையே கடைபிடித்து வருகின்றன.

அப்துல் கலீமைப் போன்ற அப்பாவிகளும், களங்கமில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர்களும், நிரபராதிகளும்தான் இந்திய முஸ்லிம்களில் 95 சதவீதம் பேரும். அப்துல் கலீமைப் போன்ற மார்க்கப் பற்றுடைய, சேவை மனப்பான்மைக் கொண்ட, தேசத்தை மிக அதிகமாக நேசிக்கும், ஒருபோதும் தான் வாழும் தேசத்தை காட்டிக்கொடுக்க முயலாத இந்திய முஸ்லிம்களுக்கு பரிசாக இந்தியாவில் சிறைக் கொட்டகைகளை தயாராக்கி வைத்திருக்கிறோம் என்பதை இனிமேலாவது சிந்திப்பார்களா அரசும் அதிகாரவர்க்கங்களும்?

உண்மையான ஐ.எஸ்.ஐ ஏஜண்டுகளும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்று வரும் சுவாமிஜி, சுவாமியாரினிகளும் சுய விருப்பப்படி ஆட்டம் போடும்பொழுது அப்பாவி முஸ்லிம்களின் தலையில் ஐ.எஸ்.ஐ தொப்பியை அணிவிக்கின்றார்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும்.

மேற்குவங்காளத்தைச் சார்ந்த நபாகுமார் சர்க்கார் என்ற 59 வயது அஸிமானந்தாவின் 42 பக்கங்களைக் கொண்ட நீண்ட எவ்வித தூண்டுதலும் இல்லாமல் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவில் ஹிந்துக்களிலும், ஹிந்து புரோகிதர்களின் கூட்டத்திலும் பக்தியின் பெயரால் பயங்கரவாத செயல்களின் பாரம்பரியம் மறைந்திருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டிய பிறகும் இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதத்திற்கு எதிரான எதிர்ப்புகளின் சலனங்கள் கூட தென்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், தற்பொழுதும் போலீசும், ஊடகங்களும், என்.ஐ.ஏ போன்ற மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும் இருட்டில்தான் துளாவிக் கொண்டிருக்கின்றார்கள். கேரளாவில் நடந்த சில சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அம்மாநிலத்தில் நடந்த கோழிக்கோடு குண்டுவெடிப்பு, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு, களமசேரி பஸ் எரிப்பு, வாகமன் முகாம் போன்ற அரைத்த மாவையே திரும்பவும் அரைத்துக்கொண்டு சங்க்பரிவார பயங்கரவாதத்தை மூடிமறைக்க முயற்சிகள் நடக்கின்றன.

ஆனால், அம்மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயர் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதியைக் குறித்து ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. 115 நபர்களின் உயிரைப் பறித்த வெடிக்குண்டு சம்பவங்கள் வெளிவரும்பொழுது எவரும் மரணிக்காத, எவருக்கும் காயத்தை ஏற்படுத்தாத சம்பவங்களில் ஊகங்களை பரப்பி பொதுமக்களை பீதிவயப்படுத்தும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார்கள் அரசு-அதிகார-ஊடகத்துறை பாசிஸ்டுகள்.

ஒருவேளை, நாளை அஸிமானந்தா அப்ரூவராக மாறி விடுதலையாகலாம். இல்லையெனில், பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பைப்போல் நம்பிக்கையை காரணங்காட்டியோ அல்லது அப்ஸல் குருவைப்போல் ஹிந்து மனசாட்சியை பொது மனசாட்சியாக மாற்றியோ அஸிமானந்தாவை நீதிமன்றமே விடுவிக்கலாம். ஆனால், அப்பொழுதும் அப்துல் கலீம் உள்பட 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வாடுவதைத்தான் இந்தியாவின் நீதிபீடங்கள் விரும்புகின்றனவா?

நன்றி :விமர்சகன்.

4 வயது சிறுமியை கற்பழித்த மனித மிருகங்கள்!!!

துபாய்,ஜன.16:பள்ளிக்கூடம் செல்லும் பேருந்தில் வைத்து 4 வயது சிறுமியை வன்புணர்வுச் செய்த காம வெறிப்பிடித்த 3 இந்தியர்களை துபாய் போலீஸ் கைதுச் செய்துள்ளது.துபாய் நாத்-அல்-ஷீபாவில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் இந்தியாவைச் சார்ந்த சிறுமி கல்வி பயின்று வந்துள்ளார். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் உடைகளை அவரது தாயார் மாற்றியபொழுது இரத்தக்கறை இருப்பதைக் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்வாஸல் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் அவரது தாயார். பின்னர் என்னவோ ஏதோ என பயந்து இந்தியாவுக்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிறுமியை காண்பித்துள்ளனர். அப்பொழுது டாக்டர், சிறுமியை பரிசோதித்துவிட்டு, சிறுமி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு இந்தியாவிலிருந்து திரும்பிய சிறுமியின் தாயார் பர்துபாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பள்ளி சென்று வந்த பஸ்ஸின் ஓட்டுநர், க்ளீனர், அட்டெண்டர் ஆகியோர்தான் வெறிப்பிடித்து இத்தகைய அக்கிரமமான குற்றத்தை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைதுச் செய்து விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த காம வெறிபிடித்தவர்கள் மேலும் எவரையேனும் இத்தகைய பாதக செயலுக்கு ஆட்படுத்தியுள்ளனரா? என்பதுக் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த பாதகச் செயலை நடத்தியவர்கள் சமூகத்தின் வைரஸ்கள் என துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்பான் அல் தமீமி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட நிர்வாகிகள் இந்த தவறு நிகழ்ந்ததற்கு காரணமான பொறுப்பிலிருந்து தப்பிக்கவியலாது. ஒரு பெண் பணியாளரை பேருந்தில் நியமிக்காதது பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகும். இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தாஹி கல்பான் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கு காரணம் பள்ளிக்கூட நிர்வாகிகள்தான் என துபாய் போலீஸ் துணைத்தலைவர் மேஜர் ஜெனரல் கமீஸ் மதார் தெரிவித்துள்ளார். சிறுமிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல 3 ஆண் பணியாளர்களை நியமித்தது அறிவுக்கு பொருந்தாது என அவர் தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் நிகழும்பொழுது உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்குமாறு துபாய் போலீஸ் குற்றவியல் புலனாய்வு தலைவர் மேஜர் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி தெரிவித்துள்ளார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்