DEC 07: இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் பிறந்த பெண்போராளி 13 வய்து Y.புனிதவதியின் வீர வரலாற்றை சொல்லும் காவியமே “உச்சிதனை முகர்ந்தால்.
சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்கள் மேல் நடத்திய கலவரங்களும், போர்களும் புனிதவதியை எப்படி மாற்றியது என்பதே “உச்சிதனை முகர்ந்தால்”.என்கிற படம்! இது படம் அல்ல தமிழர்களின் வரலாற்று ஆவணம்.
சிங்கள கயவர்களிடம் இருந்து தமிழர்களின் மானம் காக்க எம்குல பெண்கள் ஆயுதம் ஏந்தினர். எம்குல பெண்களின் வீரத்தை பறைசாற்றும் ஒரு படமாகவே இதை பார்க்க முடிகிறது. சங்ககாலம் முதல் இப்போது வரை தமிழ் பெண்கள் வீரம் நிறைந்தவர்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது.
இப்படத்தில் ஈழத்து உணர்ச்சி கவிஞ்சர் காசி ஆனந்தனின் பாடல் வரிகள்.
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே

இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!
இழிவாய் கிடக்க செருப்பா... நீ!
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...
துடித்து துடித்து உடல் சிதைகிறதே...
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே...
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்!
மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!
இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு
மாந்தர் உயிரோ நிலையற்றது...
மானம்தானடா நிகரற்றது...
போராடு நீ வீரோடு!
எரிமலை தனியுமா... தண்ணீரில்!
கடல் அலை கரையுமா... கண்ணீரில்!
முழங்கிடும் சங்கே முழங்காயோ
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது...
பட்டினியோ உணவானது...
போராடு நீ வீரோடு!
மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!
இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு
மாந்தர் உயிரோ நிலையற்றது...
மானம்தானடா நிகரற்றது...
போராடு நீ வீரோடு!
ரௌத்திரம் பழகு
...யாழினி...
5 comments:
தமிழ் பெண்களின் வீரத்தை பறைசாற்றும் படம் இது என்று நம்புகிறேன். புலியை முரசால் அடித்து விரட்டியவள் தான் நமது தமிழ் பெண்கள்.. வரலாறு முழுவதும் பெண்களின் வீரத்தை பறைசாற்றுகின்றனர் நமது ஈழத்து வீராங்கனைகள். நன்றி யாழினி ! நல்ல ஒரு பதிவை தந்தமைக்கு.
இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!
இழிவாய் கிடக்க செருப்பா... நீ!
காசி ஆனந்தன் அவர்களின் கவிதை வரிகள் வாளை போன்றது! தமிழ் பெண்களின் வீரம் சொல்லும் படமாய் இருக்கும் என்று நம்புகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
Thank u Yalini .... Always you writing good article thank u. By : Rajan
நல்லபதிவு வாழ்த்துக்கள் யாழினி!
நட்புடன் தோழி: மாலதி.
Supper article thank u Yalini.
By / Krishna
Post a Comment