Nov 11, 2011

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!

NOV 13: ஸ்பெக்ட்ரம் வழக்கில்,  திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி. இந்நிலையில்,  கனிமொழி விரைவில் விடுதலை அடைய வேண்டி எம்.பி., வசந்தி ஸ்டான்லி சிறப்பு பூஜை செய்தார். வசந்தி ஸ்டான்லி மேற்கொண்ட சிறப்பு பூஜை, அவரது தனிப்பட்ட விருப்பம்.  இதற்கு கட்சி ஒருபோதும் பொறுப்பேற்காது’’ என்று  கூறினார்.

சிந்திக்கவும்: 
திராவிட கழக கொள்கையில் இருந்து திமுக தடம் பிறண்டு விட்டது என்பதற்கு இதுவெல்லாம் ஒரு நல்ல உதாரணம். ஊழல் வழக்கில் சிக்கி ஒருவர் சிறையில் இருக்கிறார். அவர் ஊழல் செய்யவில்லை என்பதை நிருபித்து வெளியே கொண்டுவரும் திறமை நமது சட்டம் படித்த வல்லுனர்களுக்கே உண்டு. எப்படி
எம்.பி., வசந்தி ஸ்டான்லி செய்யும் பூஜை மூலம் அவர் வெளியே வரமுடியும்  என்பதே நமது கேள்வி.
 
பாளையம் கோட்டை சிறையினிலே பாம்புகள், பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தவர் யார்? அந்த தலைவரின் புகழை பார் என்று தேர்தல் நேரத்தில் நமது தானை தலைவர், தமிழர் தலைவர் கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்கள்தான் நினைவுக்கு வருகிறது. வரும் தேர்தல்களில்  இந்த பாடல்களை மாற்றி ஈழதமிழர்கள் கொல்லப்படும்போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும் நீலி கண்ணீர் வடித்தவர் யார் அந்த தலைவரின் புகழை பார் என்று மாற்றி பாடல்கள் எழுதவேண்டும்.

பாளையங்கோட்டை சிறையினில் பாபுகள், பல்லிகள் எல்லாம் இருக்கா என்று நீங்கள் கேட்க்க கூடாது.  பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த திமுக இப்போது தடம்மாறி போயிவிட்டது. இதை திமுக தலைவர் மஞ்சள்துண்டுகாரர், தமிழர் தலைவர் ( விரோதி) சுயநலக்காரர் கருணாநிதி "இதற்க்கு கட்சி பொறுப்பேற்காது என்று சொல்வது" மடமையிலும் மடமை. இதே நேரம் போட்டு வைத்த திமுக காரர்களையும், தீமிதித்த திமுக காரர்களையும் கேலி செய்த கருணாநிதி இப்போது மட்டும் எனன மவுனம் காட்கிறார்.

தன் மகள் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகவேண்டும் என்றால் தனது பகுத்தறிவு கொள்கை தவறு என்று சொல்லிவிடுவார் என்றே எண்ண தோன்றுகிறது. தனது ஆட்சியை காப்பாற்ற ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை காவு கொடுத்தவர் ஆட்சே புண்ணியவான். தானும் தனது கும்பமும் வாழ எதையும் செய்வார். இவருக்கு ஆட்சி, அதிகாரம், பணம் வேண்டும் யார் எப்படி போனால் என்ன? இன்னும் திமுகவையும், பார்ப்பன சோவின் துக்ளக் ஆட்ச்சியை நடத்தும் ஜெயாவையும் மக்கள் நம்புவதை விட்டொழிக்க வேண்டும். இளைய தலைமுறை முன்வரவேண்டும் தனிதமிழ் நாடு அமைக்கப்பட வேண்டும். இதுவே தமிழர்கள் நலமாய் வாழ ஒரே வழி.

நட்புடன்: மலர்விழி.

13 comments:

புகல் said...

தமிழரின் உரிமைகள், உணர்வுகளை என்றுமே இந்தியா மதித்ததில்லை
அதைபற்றி அவர்கள் துளிகூட வருத்தபடபோவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,
எதோ தமிழக முதலமைச்சர்கள் நினைத்தால் தில்லியை ஆட்டிவைக்க முடியும்
என்று சொல்வது எல்லாம் மடத்தனம் கேலிக்கூரியது
சில பதவிகளையோ அல்லது கூடுதலாக சில நிதிகளையோ வேண்டுமானால் பெறகூடும்
மற்றபடி இந்திய அரசாங்கம் எடுக்கும்
எந்தவித முடிவையும் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது
( எ-டு நெய்வேலி மின்சாரம், தண்ணிர் உரிமை,
தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காட மொழியாக்குவது,
இந்திய தேர்வுகளில் தமிழில் நடத்த பேச்சுவார்த்தை, தமிழக மீனவர்கள் படுகொலைகள்,
இலங்கை மீது பொருளாதர தடை, இலங்கைக்கு எதிராக ஐநாவில் குரல் எழுப்புதல்..)
அதையும் மீறி இவர்கள் தடுக்க நினைத்தால் அதன் விளைவுகளை இவர்கள் சந்திக்க வேண்டும்
வருமான வரி மோசடி அந்த மோசடி இந்த மோசடி என்று
எந்த கதையை சொன்னாலும் மக்கள் எற்றுகொள்வார்கள்,
இப்படியாக தில்லியை பகைத்துகொண்டு எத்தனை நாட்கள் இருக்க முடியும்?
அதனால்தான் என்னவோ பெரியார் அவர்கள் அரசியலில் நேரடியாக பங்கேற்கவில்லை

ஆக பால் எவ்வளவு தூய்மையானதாக இருந்தாலும் அதை
ஊற்றி வைக்கும் ஏனமும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமையை இந்தியா என்னும் கூட்டாச்சியில் வைத்தால் அது கெட்டுதான் போகும்,
இல்ல இந்தியாவில் இருந்துகொண்டு தமிழையும், தமிழரின் வாழ்வையும்,
உரிமையையும் பாதுகாத்து வளர்த்துவிடலாம் என்று மனப்பால் குடித்தால் மிக கடினம்
ஒவ்வொறு முறையும் நாம் இவர்களை எதிர்த்து போராட்டம் செய்து களைத்து ஒய்ந்துவிடுவோம்
பின்பு எவ்வாறு தமிழை வளர்ப்பது, தமிழ் மக்களை பாதுகாப்பது
தமிழகத்தில் சாதாரண தாணியங்கி பணப்பொறியில்(எ.டி.எம்)
கூட ஆங்கிலம், இந்தி மட்டுமே உள்ளது இப்படி பல ஆயிரம் எ.டு சொல்லலாம்.

அதனால் நம்முடைய போராட்டம் தனி தமிழ்நாட்டை
நோக்கி இருத்தல் வேண்டும் அது ஒன்றே நம் இனத்தின் பாதுகாப்புக்கும்
நம் மொழியின் வளர்ச்சிக்கும் நன்மை பயிக்கும்

புகல் said...

பல இடங்களில் திரும்ப திரும்ப தவறுதலாக ஒரு பரப்புரை செய்யபடுகிறது
அது கலைஞர்தான் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தது போலவும்,
எதோ இவரு கையொப்பம்யிட்டுதான் அனைத்து உதவியும் இந்தியா செய்ததுபோலவும்
இவ்வளவு ஏன் பார்ப்பனர்கள்கூட இலங்கை தமிழர்களை கலைஞர்தான் அழித்தார் என்று வருத்தபடுகிறது
இதில் வேடிக்கை என்னவென்றால்
கலைஞர் இலங்கை தமிழருக்கு ஆதரவாக ஒரு சிறு அறிக்கை வெளியீட்டாலே போதும் உடனே
பார்ப்பன ஏடுகள், நாளிதழ்கள், அவாக்கள் எல்லோரும் கலைஞர் விடுதலை புலிகளை ஆதரிக்கிரார்
நம் ராசிவ்காந்தியை(இவன் இலங்கை தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை பற்றி பார்ப்பனர்களுக்கு கவலைகிடையாது)
கொன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று ஒப்பாரி வைத்துவிடுவார்கள்
ராசிவ்காந்தி மற்றும் பிற மாநிலத்தவர்கள் நம் உறவுபோலவும், நம் இனம் போலவும்
இலங்கை தமிழர்கள் ஏதோ வேறு இனம் போலவும் திரித்து பரப்புரை செய்வதில்
மிக கெட்டிகாரர்கள் இந்த பார்ப்பனர்கள்.

பெருந்தலைவர் காமராசர் இருந்திருந்தால் கூட இந்தியாவை எதிர்த்து ஒன்றையும் செய்திருக்க முடியாது
வேண்டுமானால் பதவியை துறக்காலம்
நடுவண அரசின் ஆட்சி மாறினாலும் ஒன்றும் நடவாது
போராண்மை(காங்கிரசு) கட்சி , பா.ஜா.கா, குடியரசு தலைவர் ஆட்சியானாலும்
தமிழர்களுக்கு எதிரான் போக்கு அப்படியே இருக்கும்
தொட்டதுக்கு எல்லாம் போராண்மை கட்சியை குறை சொல்லும் பா.ஜா.கா
என்றாவது தமிழர்களுக்கு எதிராக செயல்படும் போராண்மை கட்சியை கண்டித்தது உண்டா?
இப்படி நம்மை பற்றி உணர்வுகள் துளிகூட இல்லாத தில்லி அரசாங்கத்திடம்
நம் தமிழக வரி பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு பின்பு
அதில் ஒரு பங்கை வாங்கி கொள்ளவும்,
நம்மளை பாதுகாக்க கெஞ்சுவதும்!! இப்படி ஒரு இழிநிலை வாழ்க்கை

தமிழரின் சொந்த விசயத்தில் இந்தியா என்றுமே தான்தோன்றிதனமாகவே இருக்கிறது
என்றாவது தமிழரின் விருப்பங்களுக்கு அவர்கள் செவி சாய்த்தது உண்டா?
இன்றுவரை இல்லவே இல்லை, இருக்க போவதும் இல்லை
1. அவர்களின் மொழி ஆதிக்கத்தை நம்மேல் திணித்தார்கள், திணித்துகொண்டுயிருக்கிறார்கள், திணிப்பார்கள்
2. தமிழின் வாழ்வாதாரம்மான கச்சதீவை இவர்களாகவே ஒரு முடிவு செய்து இலங்கைக்கு வாரி வழங்கினார்கள்.
3. நெய்வேலி தாயரிக்கபடும் மின்சாரம் இந்தியாவின் பொதுவுடைமை பகிர்ந்துளிக்கபடும்
ஆனால் தண்ணிர் பொதுவுடைமை அல்ல.
4. இந்திய நாடாளுமன்றத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே,
5. இந்திய தேர்வுகள் அனைத்தும் இந்தி, ஆங்கிலம்
தமிழில் நடத்த பல ஆண்டாக எண்ணற்ற போராட்டம், பேச்சு வார்த்தைகள்
தமிழில் தேர்வுகளை கொண்டு வருவதற்குள் இந்தி, ஆங்கிலம் வேருன்றி விடுகின்றன
6. இந்தி மக்களின் வசதிக்காக
தமிழகத்தில் இருக்கும் அனைத்து இரயில் நிலையங்களிலும் இந்தி கட்டாயமக்க பட்டுள்ளது
எழுத்து அறிவிப்புகள்( Chart, name/sign boards, Warning msg etc) ,
வாய்வழி அறிவிப்புகள்(announcement), இரெயில்வே சீட்டுகள்(Tickets), விண்ணப்ப படிவம்(Forms)
இதுவே தமிழர்கள் அதிகம் வசிக்கும் அண்டை/பிற மாநிலத்தில் இந்த
வசதிகளை செய்து தருவார்களா.
7. வடநாட்டவர்கள் உள்நாட்டிலோ அல்லது பிற நாட்டிலோ தாக்கபட்டால்அது தேசிய பிரச்சனை
ஆனால் தமிழன் கர்நாடகத்திலோ, இலங்கையிலோ, மலேசியாவிலோ தாக்கபட்டால் அது தமிழரின் பிரச்சனை

கன்னடர் ஒருவின் சிலையை தமிழ்நாட்டில் திறந்த பின்புதான்
உலக புலவர் திருவள்ளுவர் சிலையையே கர்நாடகாவில் திறக்க முடிந்தது
நாம் எப்படி இருக்கிறோம்
- இந்தியை தமிழர்கள் படிக்க அவர்கள் காட்டாயபடுத்தலாம் ஆனால் தமிழை அவர்கள் படிக்க நாம் கட்டாயபடுத்த கூடாது
- கச்சதீவை தமிழகம் எந்தவித கேள்வியின்றி இலங்கைக்கு கொடுக்க வேண்டும்
பதிலுக்கு தமிழன் வேறு ஒரு நிலத்தையோ கேட்கவோ
அல்லது எதிர்ப்பையோ காட்டவோ கூடாது
- தமிழர்கள் நெய்வேலியில் இருந்து கேரளம், கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் ஆனால் பதிலுக்கு
- தமிழர்கள் கன்னடர், மலையாளிகளிடம் இருந்து தண்ணிரை எதிர்பார்க்க கூடாது
அவர்களாய் கொடுப்பார்கள் வாங்கிகொள்ள வேண்டும்(எ-டு வெள்ளகாலத்தில்)

தமிழன் இப்படி தன் உரிமையை பிறரிடம் கொடுத்துவிட்டு எதோ மண்ணில் பிறந்துவிட்டோம் அப்படி வாழ்ந்து முடிப்போம் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

புகல் said...

இதோ மேலும் படிக்க
http://irumpuli.blogspot.com/2011/11/blog-post.html

Anonymous said...

வணக்கம் புகழ் தமிழர்கள் சீக்கிரம் பாடம் படிப்பார்கள் முதலில் இந்தியாவை விட்டு விலகுவார்கள். தமிழக ராணுவம் சிங்கள வந்தேறிகளை பழிதீர்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Anonymous said...

நன்றி மலர்விழி தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுத்து வாருறீங்க, வாழ்த்துக்கள்.

Anonymous said...

தமிழகம் இந்தியாவை விட்டு உடைந்து தனி நாடாக வேண்டும் அதுவே தமிழர்கள் இந்தியாவுக்கு கொடுக்கும் தண்டனை......... RAJA.

VANJOOR said...

நன்றி மலர்விழி,

WELL SAID.
RIGHT TO THE CORE.

வாழ்த்துக்கள்.

VANJOOR said...

புலிகளை ஒழிக்கவே இந்தியா விரும்பியது

சுதந்திர ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது. சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவும் ஒரு பிரதான காரணம், என நார்வே குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை அரசின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு, நார்வே அரசின் சார்பில் போரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக்கொண்ட, ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான அறிக்கை, ஆஸ்லோவில் வெளியிடப்பட்டது.

புலிகளை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று நார்வேயிடம் இந்தியா கூறியதாக, தோல்வியடைந்த இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2003-2004 ல் சமாதான முயற்சிகள் மெதுவாக அவிழத் தொடங்கிய போது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. அப்போது வாஜ்பாய் ஆட்சிக் காலம். புலிகளுக்கு மறைமுகமாக இந்திய ஆதரவு இருந்தது.

ஆனால் 2004ல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு, தமிழர்களின் விருப்பங்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டாலும், மகிந்த ராஜபக்சே அரசாங்கம் தமிழருக்கு எதிராக மேற்கொண்ட ராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட சந்திப்புகளில் நார்வேயை 'புலிகளின் நண்பர்' என்று இந்தியா
விமர்சித்ததாகவும், 'புலிகளை அப்படியே நிறுத்திவிட வேண்டும்' என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால்தான் இலங்கை படைகளுக்கு இந்தியா ரேடார்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. இலங்கைக்கு தாக்குதல் போர்த் தளவாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை டெல்லி கடைப்பிடித்தாலும் வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை இலங்கை கொள்முதல் செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, இலங்கைக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.

கடந்த 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது விடுதலைப் புலிகளால் தற்கொலை படை தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜிவ்காந்தியின் மனைவி சோனியா காந்தி, இந்தியாவின் சக்தி வாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008 இறுதியில் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு டெல்லி கோரிய போதிலும், ராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகக் குறைந்தளவே ஆர்வம் காட்டியது. போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியதா என்பது சந்தேகமாகவே இருந்தது.

சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007ல் நார்வே தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் டெல்லி அதனை நிராகரித்துவிட்டது. ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் அப்போதே தெளிவாகியது.

போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல் குறித்து இலங்கை கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யார் பதவிக்கு வந்தாலும் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை இலங்கைக்கு இருந்தது என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்புக் கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தகவல் புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரசின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பாஜக கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புலிகளை மீட்கும் என்றும் அவர் உறுதி கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார் என்று நார்வேயின் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SOURCE: http://tamil.oneindia.in/news/2011/11/12/india-wanted-ltte-put-its-place-norway-report-aid0176.html

அரசியல் ஆதாயம் கருதி தமிழர் விடுதலை இயக்கத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்று சொல்லுங்கள். அரசியல் வாதிகளை நம்பினால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

தமிழ் மாறன் said...

தமிழர்கள் நெய்வேலியில் இருந்து கேரளம், கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் ஆனால் பதிலுக்கு
தமிழர்கள் கன்னடர், மலையாளிகளிடம் இருந்து தண்ணிரை எதிர்பார்க்க கூடாது. இந்த லேட்சனத்தில் கூடங்குளம் அணுமின் நிலயம் வேறு. இதை கேரளாவில் நிறுவவேண்டியது தானே. இந்தியாவை விட்டு என்று நாம் பிரிந்து தனி தமிழ் நாடு காண்கிறோமோ அன்றே தமிழர்கள் நலம் பெறுவார்.

Unknown said...

Very good article thank u

தமிழ் மாறன் said...

எப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார்? தமிழ் நாடு தனி நாடு என்று.