Nov 4, 2011

மனிதம் எங்கே தொலைந்துபோனது??

எனது சகோதரன் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று கொண்டிருந்தோம். அதுவும் ஒரு பிரபலமான வழிபாட்டுத்தளம். ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அங்கு நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம்.

அங்கு, குழந்தைகளின் விருப்பமான "டோரா " கதாபாத்திரத்தின் முகமூடியணிந்த ஒருமனிதர் குழந்தைகளைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார். பிள்ளைகள் அவருடன் நின்று  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.  எங்களது பிள்ளைகளும் அவாறே விரும்ப.. அவரிடம் ரூ. 50 ஐக் கொடுத்துவிட்டு, எம் பிள்ளைகளையும் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பின்பு மலைமேலுள்ள வழிபாட்டுத்தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.  அந்தப் பாதையின் இருமருங்கிலும், மனநலம் பிறழ்ந்தோரும், உடற்குறைபாடுடையோரும் அமர்ந்து யாசகம் பெற்ற வண்ணமிருந்தனர். முன்பதிவு செய்திருந்தமையால் மிகக்குறைந்த   2 மணிநேரக் காத்திருப்புக்குப்பின் தரிசனம் கிடைத்ததை பெருமையாகப் பேசியபடி வந்துகொண்டிருந்தனர் அண்ணனும், அண்ணியும். 

மலையடிவாரத்தில் மீண்டும் அதே டோரா..!! ஆனால் இப்போது கூடவே ஒரு திருநங்கையும் இருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மனநோயாளிப் பெண்ணை ஆட்டோவில் ஏற்ற முயன்று கொண்டிருந்தனர். அண்ணன் குடும்பத்தினர் ஏதேதோ பொருட்கள் வாங்குவதில் மூழ்க, நான் மெதுவாக டோராவை நெருங்கினேன்.

இனி நடந்தவை..  அந்த திருநங்கையிடம், "என்னம்மா உங்க உறவுக்காரப்பெண்ணா, ரொம்ப பிரயத்தனப்படுறீங்களே ஏதும் உதவி வேணுமா?" என்று கேட்டபடி என் கைப்பையிலிருந்த ஒரு சோடி வளையலை எடுத்து அந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் நீட்டினேன், அதை வாங்கிப் பார்த்தபடி நின்ற அவளை மெதுவாக ஆட்டோவில் ஏற்றிச்செல்ல,   டோராவிடம் பேச்சுக் கொடுத்தேன். முகமூடியைக் களைந்துவிட்டு அந்த மனிதர் பேசத் தொடங்கினார். அவரும் ஒரு திருநங்கை. அவர் சொன்னது அவரது சொற்களிலேயே..

"ஏங்க உறவு உறவுன்னு வெறுப்பேத்துறிங்க, இந்த ஊர்முழுக்க பாருங்க இந்த மாதிரி பைத்தியங்க நிறைய இருக்காங்க (பைத்தியம் என்ற   சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை), இவங்க இப்படி ஆனதுக்கு நீங்க சொல்லுற உறவுங்கதான் காரணம். இவங்கள இங்க கொண்டுவந்து கழிச்சுவுட்டுப்போனதும் அதுங்கதான். இங்ககிடந்தது இதுங்கபடுற அவஸ்தை அந்தக்கடவுளுக்கே அடுக்காது..

எதை நம்பி இங்க கொண்டுவந்து விட்டுப்போறாங்க..? கடவுளையா..??,  மனசாட்சி தாங்க கடவுளு. நேத்து வரை மனைவியாவோ.. மகனாவோ.. அண்ணன், தம்பி..ஏதோ ஒரு உறவா இருந்தவங்க தானே இந்த மனுசங்களும்..  மனசு கோணிப்போனா அந்த உறவெல்லாம் மறைஞ்சு பைத்தியம்ங்கற பேரு வந்து சேந்துடுது..  மனசாட்சியில்லாத சில மனுசங்களும் இந்தமாதிரி ஏதோவொரு கோயிலு குளம்.. மசூதின்னு கொண்டுவந்து தள்ளிட்டு தலமுழுகிட்டுப்போயிடுதுக..,

ஆனா பொம்பளப்புள்ளையல கொண்டாந்து உடற ஆளுங்கள நிக்கவச்சு சுடனும்.., மனுசங்க எந்தளவுக்கு வக்கிரம் புடிச்சவங்கங்கிறது எங்களுக்குத்தான்  தெரியும் ( சொல்லும்போது அவரது கண்கள்கலங்கின. அதையும் மீறி ஏதோவொரு பயம் தெரிந்தது..).  கம்பத்துக்கு சீலயக்கட்டுனாக்கூட நாய்மாதிரி  பின்னாடியே அலைவானுங்க...
 
அதெல்லாம் பெரிசில்லீங்க..   ஏதோவொரு அதிர்ச்சியில பைத்தியமாத்திரியிற இந்தப் பொம்பளைங்களக் கூட விட்டுவைக்க மாட்டேன்கிறானுவோ..  அந்த வெறிபுடிச்ச நாய்ங்ககிட்டமாட்டி  நாராக் கிழிஞ்சுகெடக்குற பொண்ணுவோளப்பாத்தா  நெஞ்சேவெடிக்கிமுங்க,  தனக்கு என்னா நடந்திச்சு என்னா நடக்குதுன்னே தெரியாம ரோட்டோரத்துல புள்ளபெத்துக்கிடக்குற கொடுமை சொல்லிமாளாது..

வக்கத்தவன்கூட ஒருவேளை சோத்தப்போட்டு ஊட்டுல கட்டிப் போட்டுக்குறான். இந்த வசதிபடைச்சவங்க மானக்கேடுன்னு காருல கொண்டாந்து வீசிட்டுப்போயிடுறாங்க..  நீங்கள்லாம் பாத்துட்டு ரெண்டு துட்ட வீசிட்டுப்போயிடுவீங்க  மனுசங்களோட மிருககுணத்த அனுபவிக்கிற எங்களுக்கு அப்புடிபோவ மனசுவல்லீங்க, அதான் இங்கதிரியிற பொம்பளைங்கள  பக்கத்தாப்புல இருக்கற இல்லத்துல கொண்டுவிட்டுடுறோம்." 

அவர் சொல்லிமுடிக்க என் உயரம் கூனிக்குறுகி ஒரு குப்பையைப் போல உணர்ந்தேன்.  திருநங்கைகளை  அது இதென்று  அஃறிணையில்  கூப்பிடும் சில உயர்திணைகளை விட மனித உணர்வுகளுக்கு முக்கியத்து வமளிக்கும் இவர்கள் எத்துனையோ உயர்ந்தவர்கள்.  என் கையிலிருந்த சிலநூறு ரூபாய்களை மறுக்கமறுக்க சௌந்தரியின் கைகளில் திணித்தேன்.
( அந்த திருநங்கையின் பெயர் சௌந்தர்யா ) அதற்குள் யாரோ ஒருவன் " யாரு பேப்பர்காரங்களா என்று நெருங்க, வயசுப் பிள்ளைகளோடு நின்றிருந்த   சகோதரனின் முறைப்புக்கு பயந்து அந்த இடத்தைவிட்டு மனமில்லாமல் அகன்றேன்.

அதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைப்பார்த்தால் சௌந்தரியின் நினைவுவர அருகிருக்கும் இல்லத்தைவிசாரித்து தகவல் சொல்வதை கட்டாயமாக்கிக்கொண்டுள்ளேன்.
நம்முள்ளிருக்கும் மனிதம் எங்கே தொலைந்துபோனது??

எந்த விலங்கும் விருப்பமில்லாத இன்னோர் விலங்கைப் புணர்வதில்லை , எந்த விலங்கும் நோயுற்ற விலங்கைப் புணர்வதில்லை.. என்னதான் உணர்ச்சி உந்தினாலும் எந்த விலங்கும் மழலை விலங்கைப் புணர்வதில்லை.. ஏன் மனிதன் மட்டும் அதனினும் கீழாகப் போய்விட்டான்??

தினசரி செய்திகளில் வரும் பெண்மீதான வன்புணர்வு கொடுமைகளும், குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத (மிருக்கத்தனம் என்று சொல்லக்கூடாது)   மனிதவெறியும், ஒரு சமூகத்தை ஒடுக்க அதன் பெண்களின் மீது கட்டவிழ்க்கப்படும் பாலியல்வன்முறைகளும் எம் மனதைப் பதறவைக்கின்றன. இவற்றுக்கு என்னதான் தீர்வு??

இவ்வாறான இவாறான செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்கு  உடனடியாக, மிக அதிபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். கொடுஞ்செயல் நடந்தபின் தண்டிப்பது மட்டும் தான் தீர்வா?? அவை நடவாமல் தடுப்பதும் நமது கடமையே,  அடிப்படை  மனித்தத்துடன் நடந்துக்கொள்வோம்.  நம் பிள்ளைகளுக்கு வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். கண்டுங்காணாமல் கண்மூடிப்போகாமல் கொடுமைகளை எதிர்ப்போம். அநீதிக்கெதிராய் ரௌத்திரம் பழகுவோம் !! 


ரௌத்திரம் பழகு
...யாழினி...

15 comments:

Anonymous said...

மனதை தொடும் பதிவு! நல்ல செய்தி ஒன்றை சொல்லி சமூக விழிப்புணர்வு எண்ணத்தை தொடர்ந்து தூண்டி வரும் தோழி யாழினிக்கு வாழ்த்துக்கள். அன்புடன் - மாலதி.

Anonymous said...

FIRST I HAVE TO SAY THANKS FOR YALINI. SHE ALWAYS WRITE VERY GOOD ARTICLE. OUR TAMIL WOMENS ARE LIKE THIS. THANK YOU YALINI.

BY: MOHANASUNTHARAM.

Anonymous said...

யாழினி இடம் இருந்துதான் நாங்கள் ரவுத்திரம் பழக வேணும். நல்ல பதிவு தோழி.

தோழி: ரேவதி.

தமிழ் மாறன் said...

வணக்கம் யாழினி, நல்ல சமூக அக்கறை உள்ள ஒரு பதிவு. நெடுங்காலமாகிவிட்டதே யாழின்யின் ஈழம் குறித்த, தமிழர்கள் குறித்த பதிவுகளை பார்த்து நானும் மற்றைய தமிழ் சகோதர்களும் ஆர்வமாக உள்ளோம். தமிழகத்து எம்குல வீர பெண்கள் இப்படித்தான் சிங்கங்களை போல் கர்சிப்பர்கள் என்பதை உங்கள் எழுத்துக்கள் பறை சாற்றுகின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். உங்களை, மலர் விழி போன்றோர்களின் எழுத்துக்களை பார்த்தாலே புரிகிறது தமிழகத்து எம்குல பெண்கள் இப்படித்தான் வீர முழக்கம் இடுவார்கள் என்று. நன்றி யாழினி.

Anonymous said...

வாலாதிருந்துவிடும் வகையற்றவர்
நடுவில் வகையாய் அமைந்திட்ட திருநங்கை உமக்கு எத்துனை திரு இட்டாலும் தகும்.

முழுமையாய் பிறந்திட்டோம் நாங்கள் ஆனால் வளராஎம்மறிவும்,மனமும் உங்கள் கரண்டை கால் வரை கூட உயரவில்லை.

DALITH MAINTHAN

Anonymous said...

உங்கள் பதிவு கண்கலங்க வைத்து விட்டது. நான்கு கால் மனிதர்களைப் பார்க்கிலும் இரண்டு கால் மனித மிருகங்கள் வெறிபிடித்தவர்கள். இவர்களுக்கு உகந்த தண்டனை நம் ஊரில் உள்ள நாய்களுக்கு காயடிப்பது போல இவர்களையும் இனிமேலும் இப்படிப்பட்ட வக்கிரகபுத்தி வராது ஒடுக்க வேண்டும்.

suvanappiriyan said...

மனதை தொடும் பதிவு! நல்ல செய்தி ஒன்றை சொல்லி சமூக விழிப்புணர்வு எண்ணத்தை தொடர்ந்து தூண்டி வரும் தோழி யாழினிக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

இந்தியநாட்டில் செக்ஸ் மிகவும் கட்டுபாடுகளுடன் அழுத்தி அமுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அதை சுதந்திர படுத்தி இருந்தால் ....... தங்களது பால் உணர்வுக்கு தன்உணர்வி்ல்லாதவர்களை கெடுக்கும் எண்ணம் இல்லாதிருந்திருக்கும் . புது டிவி வாங்கினாலும் பழைய டிவி வை பத்திரமாக வைத்திருக்கும் மனிதர்கள் மனம் பிசகியவர்களை மட்டும் விட்டு விட்டு சொல்லுவது என்ன நியாயம் என்று தெரியவி்ல்லை.

tamilan said...

உன்னை ஆபாச பண்டமாக்கி வானி ஒழுக பார்க்கும் கிழட்டு மிருகங்கள் காம கிழத்தியாய் உன்னை
பார்த்த பார்வைகள் குருடாகட்டும் சலங்கைக்கு ஓய்வு கொடு
செருப்புக்கு வேலை கொடு

Click and read.

பரிதாபத்துக்குரிய என் சகோதரியே....


.

குறையொன்றுமில்லை. said...

மனதை தொடும் பதிவு! நல்ல செய்தி ஒன்றை சொல்லி சமூக விழிப்புணர்வு எண்ணத்தை தொடர்ந்து தூண்டி வரும் தோழி யாழினிக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

யாழினி என்கின்ற பெயரில் மறைந் திருப்பவரே தயவு செய்து வெளியே வருக!
பர்த்தா என்கின்ற பெண்களின் மீதான காட்டு மிராண்டி தனங்களுக்கெதிராக வெகுகொண்டு எழுவோம்.

VANJOOR said...

//Anonymous said...

யாழினி என்கின்ற பெயரில் மறைந் திருப்பவரே தயவு செய்து வெளியே வருக!
பர்த்தா என்கின்ற பெண்களின் மீதான காட்டு மிராண்டி தனங்களுக்கெதிராக வெகுகொண்டு எழுவோம்.//

சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?

1.>>> இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் <<<

2. >>> ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா <<<<


3. >>> இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்? <<<


4. >>> 25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா? <<<


5.>>> 24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா? <<<


6. >>>
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
<<<

7.>>> போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு சிந்தி . எது பெண்ணுரிமை?

.

MANO நாஞ்சில் மனோ said...

நெஞ்சை தொடும் பதிவு...!!!

PUTHIYATHENRAL said...

// Anonymous said... யாழினி என்கின்ற பெயரில் மறைந் திருப்பவரே தயவு செய்து வெளியே வருக! பர்த்தா என்கின்ற பெண்களின் மீதான காட்டு மிராண்டி தனங்களுக்கெதிராக வெகுகொண்டு எழுவோம்.//

வணக்கம் Anonymous .அவர்களே ஆசிரியர் என்கிற முறையில் உங்களின் இந்த தவறான எண்ணத்திற்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். ஒரு சமூக அக்கறை உள்ள நல்ல செய்தியை அவர் சொல்லி இருக்கிறார். உங்களுக்கு உங்கள் பெயரை கூட சொல்ல முடியவில்லை. யாழினி என்பது அவரது உண்மையான பெயரே. நீங்கள் நினைப்பது போல் அவர் ஒன்றும் ஒளிந்து கொண்டு எழுதும் அவசியம் இல்லை. அது மட்டும் அல்ல எங்களது இணையத்தில் எழுதும் தமிழ் சகோதர்களுக்கு உங்களை போன்றோரை கண்டு அச்சமும் இல்லை நடுக்கமும் இல்லை. நல்ல ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார். அதை பாராட்ட மனமில்லை என்றாலும் அதை பலிக்காமளாவது இருங்கள்.

Anonymous said...

மனதை தொடும் பதிவு வாழ்த்துக்கள் யாழின் நட்புடன் தோழி ரேவதி.