Oct 24, 2011

தீபாவளி சிந்தனைகள்! தீபாவளி வாழ்த்துக்கள்!

விதிப்புயலால் வேரோடு சாய்க்கப்பட்டவாழைக் கன்றுகள் நாங்கள்! கனவினில்கூட கல்வியைக் காணமுடியவில்லை கந்தக மணத்தில் எங்கள்கனவுகள் களவாடப்படுகின்றன!

வான்நோக்கி கையுயர்த்தித் தொழுகின்றவாய்ப்பும் வரவில்லை! வெடித்துச் சிதறுகிறநெருப்புத்துளிகள் யாவும் எங்கள்  சிவகாசிச் சிறுவர்களின் வியர்வைத்துளிகளாய்....

பிஞ்சுவிரல்கள் யாவும் நஞ்சுகள் குடிகொள்ள விழிகளில் வழியும் ஈரத்தால் நஞ்சுகள் நமுத்தேபோகின்றன!  வாழ்வை இழந்து வசதிபொறுக்குகின்ற இளம்சருகுகளாய் சாய்கின்றோம்.. எரிந்துகிடக்கும் காகிதக்குப்பைகளில் கிழிந்துகிடக்கும் எங்கள்முகங்கள்!  எரிந்துகருகும் மத்தாப்புகளின் வெளிச்சத்தில் எரிந்து கொண்டிருக்கிறது எங்கள்வீட்டு அடுப்புகள்!

அவதாரம் எடுத்தால்தான் ஆண்டவன்கையில் சங்குச்சக்கரம்
ஆனால் சங்குச்சக்கரத்தைச் சுற்றுவதற்கே நாங்கள் அவதாரம் எடுத்திருக்கின்றோம்!
மற்றவர்கள் மத்தாப்பு எரித்து தீபாவளியை தீர்(ய்)க்கின்றனர்...!!
நாங்களோ மத்தாப்பை திரித்து எங்களைதீய்(ர்)க்கின்றோம்...!!
கந்தகத்தின்மூலம் கண்ணியமாய் காலனுக்குத் தூதனுப்பி
கவுரவமாய் கண்மூடுபவர்கள்..!!

ஆண்டுக்கு ஒருமுறை வீதிகளில் விசப்புகையும் வெளிச்சமும், சத்தமும்.. என்றால் ஆண்டாண்டும் எங்களின்விழிகளில் விசப்புகை, வாழ்விலோ இருள், இதயத்திலோ இரைச்சல்! இங்கு எங்களுக்கான விதி கண்மூடித்தவமிருக்கிறது! விழித்தால் விடியல்....!! கனிவுடன் பிரேமலதா........


ஒரு தோழியின் கவிதை, உங்களின் பார்வைக்கு..
வாசகர்களுக்கு  இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்


ரௌத்திரம் பழகு
...யாழினி...

3 comments:

Anonymous said...

தோழி யாழினிக்கு தீபாவளி வாழ்த்துக்கள். நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். நட்புடன் - ரேவதி.

Anonymous said...

திபாவளி வாழ்த்துக்களோடு நல்ல சிந்தனை உடைய ஒரு பதிவை பகிந்தமைக்கு நன்றி. ராஜா.

Anonymous said...

தீபாவளி சிந்தனைகள் நன்றாக இருந்தது. குழந்தை தொழிலாளிகள் விசயத்தில் எப்போது அரசு கவனம் செலுத்துமோ தெரியவில்லை. நட்புடன் - மாலதி.