Oct 1, 2011

குடுமி பிடி சண்டையில் பி ஜே பி குடுமி அறுபட்ட மோடி !?

அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை சொல்லி பிஜேபி-க்குள் உட்கட்சி பூசல் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

வெள்ளிக் கிழமை டெல்லியில் நடந்த தேசிய நிர்வாக சமிதி கூட்டத்தை மோடியும், எடியூரப்பாவும் புறக்கணித்தனர். வெள்ளியன்று நடந்த தேசிய நிர்வாக சமிதி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவிக்க பிஜேபி-யில் உள்ள சில தலைவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர்.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியும், ஊழல் வழக்கில் சிக்கிய தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பாவும் அதில் கலந்து கொள்ளவில்லை. குஜராத்தில் முஸ்லீம்களை கொன்றொழித்தும், முஸ்லிம் பெண்களை கற்பழித்தும், குழந்தைகளை பெட்ரோல் குடிக்க வைத்து எரித்து கொலை செய்தும் நடந்த கொடூரமான கலவரங்களுக்கு தலைமை வகித்த மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் ஆசி மற்றும் ஆதரவோடு பிரதமர் போட்டிக்குள் நுழைந்தார்.

 அதற்க்கு முன்னோடியாக “ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுத கதையாக” அமைதிக்காகவும் மதநல்லிணக்கத்திற்காகவும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அத்வானியோ இவருக்கு “செக்” வைக்கும் விதமாக ஊழலுக்கு எதிரான தனது ரத யாத்திரையை அமைத்தார். இதனால் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.

 ஆர்.எஸ்.எஸ் யை அமைதிபடுத்தும் நோக்கில் “பிரதமர் போட்டிக்கு நான் இல்லை” என்று அத்வானி அறிவித்தாலும், மோடிக்கு எரிச்சலூட்டும் விதமாக பீகாரில் வைத்து ரத யாத்திரையை ஆரம்பித்து, அவரின் எதிரியான நிதீஷ் குமாரை வைத்து துவக்க விழா நடத்துவது என்று தீர்மானித்து தான் வேட்பாளர் களத்தில் உள்ளதை தெரிவித்துவிட்டார். இரண்டு மூத்த தலைவர்களின் குடுமி சண்டை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குள்ளும், பிஜேபி கட்சியினர் இடையேயும் பெரும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

5 comments:

SURYAJEEVA said...

மோடியை பிரதமர் வேட்பாளரை நிறுத்துவார்கள் என்று பிற மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்ததால் தான் அந்த கட்சிக்கு தேர்தலில் பலத்த அடி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.... இது அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தெரியும்..

monica said...

பி.ஜே.பி. யின் கட்சி தர்மப்படி பிரதமர் வேட்பாளர் தகுதி அத்வானி என்ற பார்ப்பனத் தீவிரவாதிக்கு மோடி என்ற சூத்திரத் தீவிரவாதியை விட அதிகமாக உள்ளது.

Unknown said...

எல்லாக் கட்சிகளும், பதவி ஒன்றைத் தான் முன்னிறுத்துகின்றன. மோடி ஒரு விதத்தில் மக்களைத் தன் பக்கம் இழுக்க நினைக்கிறார். அத்வானி மறு பக்கம். இப்படி அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டால்தான் அவர்களால் அடி பட்டவர்களின் வேதனையைக் கொஞ்சமாவது உணர முடியும்.

Anonymous said...

athvani matrum modi mattumalla perathama veatpaalar.bjp katchiyil thahuthiyanavarhal neraiya pear irukiraarhal ena BJP yin seaithi thodarpaalar ariviththu irukkiraarea.eni thaan paarka veandum kudumipedi sandaiyai.
*pungai maithan*

Anonymous said...

காங்கிரஸ் களவானிகளும், ஹிந்துத்துவா களவானிகளும் மக்களால் ஒதுக்கப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் நாட்டை கைபட்ட்ற வேண்டும் அப்போதுதான் நாடு உருப்படும்.