26, செப்டம்பர் இரவு நேரத்திலும் விண்ணில் பறந்து சாதனை படைத்த சூரிய ஒளி சக்தியால் இயங்கும் விமானம்.
பெயர்ன் (ஸ்விட்சர்லாந்து ஸ்விட்சர்லாந்து தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் விமானம் இரவு நேரத்திலும் பறந்து சாதனை படைத்துள்ளது.
பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை அவ்வப்போது பறக்கவிட்டு சோதனை செய்து பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் சூரிய ஒளி சக்தியில் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை புதன்கிழமை துவங்கப்பட்டது. கேப்டன் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் விமானத்தை இயக்கினார். சுமார் 26 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் சூரிய ஒளி சக்தியால் பறந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
இதுகுறித்து சூரிய ஒளி சக்தியால் இயங்கும் விமானத்தைத் தயாரித்த குழுவின் தலைவர் பெர்டிரான்ட் பிகார்ட் கூறியதாவது: பைலட் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் வெற்றிகரமாக விமானத்தை இயக்கினார். 26 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக விமானத்தை அவர் தரை இறக்கினார். விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளதால் இரவிலும் விண்ணில் சூரிய ஒளி சக்தியால் பறந்த விமானம் என்ற சாதனை எங்களுக்குச் சொந்தமாகியுள்ளது.
இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தியால் விமானம் இவ்வளவு நேரம் பறந்தது உலகிலேயே இதுவே முதல்முறை. இதன்மூலம் எங்களது கனவுப் பயணம், வெற்றிகரமாக முடிந்துள்ளது. இரவு நேரம் முழுவதும் விமானம் பறந்துள்ளது என்றார் அவர்.
விமானத்தின் இறக்கைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோலார் பேனல்களில் 12 ஆயிரம் சோலார் செல்கள் உள்ளன. இதன்மூலம் சூரிய சக்தி சேமிக்கப்படுகிறது. சூரிய ஒளி சக்தியால் விமானத்திலுள்ள பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படுகின்றன.
இந்த பேட்டரி சக்தி மூலம் இரவு நேரம் முழுவதும் விமானம் இயங்குகிறது. நிச்சயமாக இந்த விமானம் சிறப்பான ஒன்றுதான். அருமையான சாதனையை பெர்டிரான்ட் பிகார்ட் செய்துள்ளார் என்று முன்னாள் விண்வெளி வீரர் நிகோலியர் தெரிவித்தார்.
3 comments:
அமெரிக்கா காரன் பாத்தா சும்மா விடுவானா?
எரிபொருளுக்கு மாற்றாக எதாவ்து கண்டுபிடிச்சாங்கன்னா சந்தோசம் தான்.
ரொம்ப சந்தோசம்......
வாழ்த்துக்கள்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment