Sep 2, 2011

உண்ணாவிரதம் நடத்தும் போலிகளும், நிஜங்களும்!

SEP 04, இம்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா விமர்சித்துள்ளார்.

அவரை அணுகி அன்னா ஹசாரே போராட்டம் பற்றி கேட்டபோது, அவர் போராட்டம் செயற்கை தனமானது. அவர் மணிப்பூரில் உள்ள மக்களின் அவலநிலை குறித்து வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன். பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிந்திக்கவும்: ஹிந்துத்துவாவால் தூண்டிவிடப்பட்ட அன்னா ஹசாரே உடைய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது போல் பார்ப்பன நாளேடுகளால் சித்தரிக்கப்பட்டது. இவரின் போலி 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை பெரிய அளவில் வெளிச்சம் போட்டு காட்டிய பார்ப்பன ஊடகங்கள் மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவது பற்றி இதுவரை கண்டுகொண்டதே இல்லை. இப்படி ஒரு போராட்டம் நடப்பதாக கூட மக்களுக்கு தெரியாது.

2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில் இந்திய  ராணுவத்தை சேர்ந்த பயங்கரவாத படையணி ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார்.

ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவர் நடத்தும் பட்டினிப் போராட்டம் 11 ஆண்டுகளை கடந்து விட்டன. இந்த சட்டத்தை பயன்படுத்தி, இந்திய ராணுவம், சாதாரண மக்களை கைது செய்யலாம், பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம். இதுபோலவே, பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வது செய்வது, பின்னர் அவர்களை கொலை செய்வது போன்ற மனித உரிமைக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த பெருமைக்கூரிய இந்த ராணுவம்தான் அமைதிப்படையாக சென்று ஈழத்து தமிழ் பெண்களை கற்பழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர ஆள்தூக்கி சட்டத்தை நீக்க கோரி இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக இவர் தொடங்கிய உண்ணா விரதம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வரவில்லை. இவரை வீட்டுக்காவலில் வைத்து இவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கின் மூலம் திரவ உணவுகளை காவல்துறையினர் செலுத்தி வருகின்றனர். இவரின் நியாயமான ஒரு கோரிக்கையை நிறைவேற்ற எந்த மத்திய அரசும் தயாராக இல்லை. அதே நேரம் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு அடிபணிந்தது.

அதுபோல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான ஹிந்துமத சாமியார், ஹிந்துக்களின் புனித நதியான கங்கை நதியின் தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். ஆனால் இதை பற்றி எந்த பார்பன பத்திரிக்கைகளும் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு ஹிந்துச்சாமியார் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார் என்று எத்தனை ஹிந்து மக்களுக்கு தெரியும்.

அதுபோல் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா, ஹிந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிசத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிசத், பாரத மஸ்தூர் சங், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர சுவாமி, பாபா ராம் தேவ், ஹிந்து முன்னணி ராமகோபாலன், அத்வானி, வாஜ் பேய், முரளிமனோகர் ஜோசி, இப்படி ஹிந்துத்துவா சங்கபரிவார பயங்கரவாதிகளும், அவர்களின் பார்ப்பன அபிமாநிகளுமான துக்களக் சோ, தினமலர், தினமணி, இந்தியா டுடே,  இந்தியன் எக்ஸ்பிராஸ் போன்ற பத்திரிக்கைகள் கங்கை புனித நதிக்காக போராடிய ஹிந்து சாமியாரை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை, ஏன் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வில்லை.

24 comments:

Anonymous said...

எதில் போலிகள் என்ற ஒரு அளவே இல்லையா? உண்ணாவிரதம் இருப்பதிலுமா? இந்த பார்ப்பன பத்திரிக்கைகள் உண்மையான உண்ணாவிரத போராட்டத்தை மறைத்து விட்டது வருத்தம் அளிக்கும் செய்தியாகும். நன்றி///////// சாந்தி.

Anonymous said...

ஒரு ஹிந்து சாமியார் புனித கங்கைக்காக போராட்டம் நடத்தி உயிர் துறந்தாரா? ஆச்சரியமாக இருக்கிறது இந்த செய்தியை நான் இபோதுதான் கேள்விபடுகிறேன். ஆசிரியருக்கு நன்றி. ************** விஸ்வநாதன்.

Anonymous said...

இந்திய ராணுவ கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த இரோம் சர்மிளா, கங்கை நதியை தூய்மைபடுத்த உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சாமியார் நிகமானந்தா ஆகியோரின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். திட்டமிட்டு இவர்களின் உண்ணாவிரதங்களை மறைத்து விட்டன இந்த தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இவைகள் எல்லாம் ஒரு பத்திரிக்கையா? காரி துப்ப வேண்டும் போல் உள்ளது. உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருமையான பதிவு. வாழ்த்துக்கள். BY - விக்ரம்.

Anonymous said...

இந்திய இராணுவத்தின் அயோக்கியத்தனம் வேலியே பயிரை மேய்தாற்போல் நம் நாட்டையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள்
நாயை வீட கேவலமாக காம இச்சைக்காக கொடுரமாக அப்பாவி பெண்களை பால்லியல் பாலத்காரம் பண்ணி கொலை செய்து திசை திருப்பி தீவிரவாதி என்று பச்சைகுத்தி கேசை முடித்துவிடுகிறார்கள் இவர்களின் ஆண் குறியை நெருப்பில் பொஷ்கி சடலத்தை நடுரோட்டில் வீசவேண்டும்
நன்றி !!!அந்தோனி

Anonymous said...

இந்த ஊடகங்களின் லட்சணமே இதுதான். கேட்டால ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பெருமை பேசுவார்கள். பேனை பெருமாளாக்குவதிலும்,மானை மயிராக்குவதும் இந்த கேடு கெட்டவ்ர்களின் கெட்ட புத்தியாகவே தொடர்ந்து உள்ளது. மக்கள்தான் தெளிவாக கவனமாக இருக்க வேண்டும். நல்ல பதிவு.

Anonymous said...

Dinamani, dinamalar, indiya today, ivaigal RSS in family
Pathirikkaigal athanaal appadiththaan yeluthuvaargal. //////// anees

Anonymous said...

Very good article .. Thank u. By- ramu

Anonymous said...

Vanakkam uravugale::::::::::Nalla pathivu,,,,,,,,, Vaalththukkal &&&&&'k vijay

Ravathi said...

Thank u for the good article.

Ravathi said...

Vanakkam puthiyathenral. Yeppadi irukeengal. Nalla pathivu nanri vaaththukkal.

Anonymous said...

Paarpanam thaan Hinthuthuva yenpathai alaga sollirukeengal. Nanri,,,..,

Anonymous said...

இந்த மூன்று ஈழத்தமிழர்களின் குற்றங்களும் எந்த அளவுக்கு சாட்சி, ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கின்றன
என்று தெரியவில்லை. ஆனால் ஒரு தனி நபரின் முடிவின் காரணமாக ஒட்டு மொத்த சமுதாயமும் முற்றிலுமாக
அழிக்கப்பட்டிருக்கும்பொழுது, அந்த சமுதாயம் சார்ந்த கோபமும் அதன் பழி வாங்கும் உணர்ச்சியையும்
நாம் கொச்சைபடுத்தமுடியாது. ஏனெனில் தனி நபரின்(அவர் ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் சரியே) நலத்தை விட ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலன் முக்கியம். பிரியங்கா கதறியது, ராகுல் அழுதது, சோனியா விதவையானதை விட ஈழ பெண்கள் பலர் விதவையானது, குழந்தைகள் அநாதையானது, வாழ்வாதாரங்களை இழந்து முழு சமுதாயமும் நடுத்தெருவுக்கு வந்தது அசாதாரணமானது என்பதை விட இந்தியாவின்
அசுரத்தனத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தப்பட்ட பல சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு தாங்கள் விரும்பிய வக்கீல்களை
தங்கள் சார்பாக வாதாடக்கூட நியமிக்கப்படவில்லை. விசாரனையிளும்கூட பலவகையான
குழறுபடிகள்.

இப்படியே வல்லான் வகுத்ததுதான் வாழ்கை என்று நடத்தப்படும் இந்திய அரசியலுக்கு ஏற்பட்ட
கசப்பான அனுபவம்தான் பிரதமர் ராஜீவின் கொலை அல்லது பழி தீர்ப்பு.

தலித் மைந்தன்

Anonymous said...

இந்த மூன்று ஈழத்தமிழர்களின் குற்றங்களும் எந்த அளவுக்கு சாட்சி, ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கின்றன
என்று தெரியவில்லை. ஆனால் ஒரு தனி நபரின் முடிவின் காரணமாக ஒட்டு மொத்த சமுதாயமும் முற்றிலுமாக
அழிக்கப்பட்டிருக்கும்பொழுது, அந்த சமுதாயம் சார்ந்த கோபமும் அதன் பழி வாங்கும் உணர்ச்சியையும்
நாம் கொச்சைபடுத்தமுடியாது. ஏனெனில் தனி நபரின்(அவர் ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் சரியே) நலத்தை விட ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலன் முக்கியம். பிரியங்கா கதறியது, ராகுல் அழுதது, சோனியா விதவையானதை விட ஈழ பெண்கள் பலர் விதவையானது, குழந்தைகள் அநாதையானது, வாழ்வாதாரங்களை இழந்து முழு சமுதாயமும் நடுத்தெருவுக்கு வந்தது அசாதாரணமானது என்பதை விட இந்தியாவின்
அசுரத்தனத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தப்பட்ட பல சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு தாங்கள் விரும்பிய வக்கீல்களை
தங்கள் சார்பாக வாதாடக்கூட நியமிக்கப்படவில்லை. விசாரனையிளும்கூட பலவகையான
குழறுபடிகள்.

இப்படியே வல்லான் வகுத்ததுதான் வாழ்கை என்று நடத்தப்படும் இந்திய அரசியலுக்கு ஏற்பட்ட
கசப்பான அனுபவம்தான் பிரதமர் ராஜீவின் கொலை அல்லது பழி தீர்ப்பு.

தலித் மைந்தன்

Anonymous said...

இந்திய ராணுவம் ஈழத்திலே செய்த கொடுமைகளை பற்றி சொன்னதற்கு நன்றி! -- ஈழவேந்தன்.

Anonymous said...

ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பி வைத்தது அமைதி படையில்லை கொலைகாரப்படை. எல்லா அநியாங்களையும் எல்லாம் செய்து விட்டு இப்போது மூன்று தமிழர்களையும் தூக்கில் போடலாம் என்று பார்கிறார்கள்.

by; பொன்னியின் செல்வன்.

Anonymous said...

தேர்தல் நேரத்தில் ஈழத்தமிலர்களுக்கு வேண்டி போராட்டங்களை அறிவித்த பாரதிய ஜனதா தேர்தல் முடிந்ததும் வாய்மூடி மவுனம் காக்கிறதே! ஈழத்தில் கொல்லப்படுபவர்கள் ஹிந்துக்கள் இல்லையா? அங்கே உடைக்கப்படுவது ஹிந்துக்களின் கோவில்கள் இல்லையா? எங்கே போனார்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும்.

######## SELVA RAGAVAN ######

Anonymous said...

Pooligalin unnaaviratham periya alavil vilamparappaduththap padukirathu... Unmaiyaana unnaavirathaththai moodi maraiththu vittaargal paavigal....

Ravathi said...

Sariyaaga sonnaar thalith mainthan // nanri thalith mainthan::::::: vanakkam natpudan - ravathi

கபிலன் said...

இரோம் ஷர்மிளா இவ்வாறு எந்த ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் என்பதை தெரிவிக்கவும். உங்களுக்கு தேவையானவையை மட்டும் வெட்டி ஒட்டக்கூடாது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஷர்மிளா அவர்களின் பேட்டியை நீங்கள் பார்த்தீர்களா?
"Anna Hazare is a seasoned social activist" என்று தான் அவர் சொன்னார்.

ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை பெரிது படுத்தினர் என்ற கருத்துடன் மட்டும் உடன்படுகிறேன்.

சம்பந்தமே இல்லாம இந்துத்வா "பிட் " ஐ எதுக்கு கதையில நுழைச்சி இருக்கீங்க

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

அண்ணாகாசரேவை விமர்சித்தவர் இரோம் சர்மிளா அல்ல! அருந்ததிராய் மேலும் கசாரேவின் ஊழல் எதிர்ப்புக்கும்-காவிக்கும் முடிச்சு போடுவது அபத்தமானது...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

அருள் said...

அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

http://arulgreen.blogspot.com/2011/09/3.html

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவேதான் உங்களை நம்பி உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்துள்ளோம் அதனாலேயே அந்த கருத்துக்கள் எங்கள் பார்வைக்கு வராமலேயே பிரசுரம் ஆகும் வண்ணம் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஒருத்தரை ஒருத்தர் தரக்குறைவாக பேசிக்கொள்ள வேண்டாம். நல்ல கருத்துக்களை பதியுங்கள் ஆரோக்கியமாக கருத்து பரிமாறி கொள்ளுங்கள். தமிழர் பண்பாடு பேணுங்கள். மதமாச்சாரியங்கள் ஒழித்து மனித நேயம் காப்போம்.

எந்த ஒரு மதத்தினர் மீதும் நமக்கு காழ்புணர்ச்சி இல்லை. சிறுபான்மையினர் செய்யும் குற்றங்களை, தவறுகளை, தப்புகளை, வெளிக்கொண்டுவர ஆயிரம் ஊடகங்கள் இருக்கின்றன. அதே நேரம் அவர்கள் செய்யாதவற்றையும், பிறர் செய்தததை அவர்கள் தலையில் போட்டும், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் மறைத்து பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு நிலை பெரும்பான்மையான ஊடகங்கள் செய்து வருகின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே!

இந்நிலையில் எல்லா ஊடகங்களும் செய்யும் அதே வேலையை நாமும் செய்யவேண்டாம் என்று நினைத்தே வெளிவராத சர்ச்சை கூறிய விஷயங்கள் குறித்தும் நாம் நமது பொதுவான கண்ணோட்டங்களை எழுதி வருகிறோம். மற்றபடி நாம் நடுநிலையோடு செயல்படுவதாகவே நம்புகிறோம். ஏதும் குறைகள் இருப்பின் சுட்டி காட்டவும். ஆசிரியருக்கு எழுதுங்கள். நன்றி வணக்கம்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வருகை தந்தமைக்கு நன்றி! வணக்கம்!

Anonymous said...

sari ungal ethanai perukku terium;silapathikarathaium thirukuralaium japan moliyil molipeyarga utaviya selam karuppaiya avarkalai avarkalukku japan arasu tapaltalai veliyitu ulathu anal tamil tamil ena natikkum thiravida katsikalum arasum enna seitatu namea nammai mutali matikkavendum avarai madigatha semmoli manatu sathan vetham othiyarkku sammam ok

Anonymous said...

please read www.tamilhindu.com... jaihind...