Jun 29, 2011

ஒட்டுக் கேட்கும் கருவிகளை பயன்படுத்த தடை!

JUNE 30, புதுடில்லி: மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள ஒட்டுக் கேட்கும் கருவிகள் அனைத்தையும், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம், எந்த ஒரு மொபைல் போனையும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. இவை இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., வரை தகவல்களை ஒட்டுக் கேட்கும் திறன் கொண்டவை. இக்கருவிகள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடியவை.

இக்கருவிகளைப் பயன்படுத்தி தொலைபேசிகள், மொபைல் போன்களை ஒட்டுக் கேட்பது சட்டப்படி குற்றம். மீறி அவற்றைப் பயன்படுத்தினால், இந்திய தொலைத் தொடர்பு சட்டத்தின் விதிகளை மீறிய குற்றமாகும். அதனால், அரசு மற்றும் தனியார் உளவு நிறுவனங்கள் அக்கருவிகளை தகவல் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுப் படி, மத்திய அரசின் கீழ் இயங்கும், புலனாய்வுத் துறை (ஐ.பி.,), "ரா', மத்திய பொருளாதார புலனாய்வுத் துறை (சி.இ.ஐ.பி.,) வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் தங்களிடம் உள்ள ஒட்டுக் கேட்புக் கருவிகளை, உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைக்க வேண்டி வரும்.

No comments: