Jun 6, 2011

தயாநிதி மாறன் விரைவில் கைது செய்யப்படுவார்!!

JUNE 7, புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வசம் , "ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

"ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகீர் வாக்குமூலத்தால், தயாநிதிக்கு நெருக்கடி முற்றுகிறது

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அந்த காலகட்டத்தில், "டிஷ்நெட் வயர்லெசு'க்கு (ஏர்செல்)14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

கடந்த, 2006ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன், தான் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம், 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்துள்ளன. அவர் பலமுறை முயன்றும், லைசென்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நிறுவனங்கள், 74 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று, மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, சிவசங்கரனின் ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த, "மேக்சிஸ்' கம்பெனிக்கு கைமாறியது.

ஏர்செல் நிறுவனமாக இருந்த போது கோரிய லைசென்ஸ், அது மலேசிய நிறுவனத்திற்கு கைமாறிய உடனேயே, 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், முதலீடு செய்தது.

இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டிடிஎச்' நிறுவனம். தயாநிதியின் சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம்.  இதனால் பாதிக்கப்பட்ட சிவசங்கரன், சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்தார்.  கனிமொழி மாதிரி தாயநிதி மாறனும் கூடியவிரைவில் கைதாவார் என்று தெரிகிறது.

No comments: