JUNE 29, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அடுத்த முதியா நெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (45). விவசாயி. மனைவி லட்சுமி (34). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று தங்கவேல் வெளியில் சென்றிருந்த நேரத்தில், தங்கவேலின் தாய் பொன்னம்மாள், தங்கவேலின் தம்பி மணி(42) ஆகியோர் லட்சுமியோடு சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மூவருக்கும் தகராறு முற்றியது. மணி, லட்சுமியை தாக்கியுள்ளார்.
அவர், லட்சுமியை பிடித்துக் கொள்ள, மாமியார் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்துவந்து ஊற்றி, கொள்ளிக்கட்டையில் தீ வைத்து விட்டார். மளமளவென தீப்பற்றி, லட்சுமியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது, உடலில் நெருப்போடு மாமியாரை கட்டிபிடித்தார். இதில் மாமியாரின் உடலிலும் தீப்பிடித்தது.
ஆபத்தான நிலையில் லட்சுமி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மாமியார் பொன்னம்மாள், காங்கயம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மைத்துனர் மணி தலைமறைவானார். இது குறித்து தகவலறிந்த அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்கு பதிவு செய்து, மணியை கைது செய்தார். பொன்னம்மாள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment