May 29, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சென்னை சைதைப் பேட்டையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
அவர் செய்த போர்க்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment