May 31, நாற்பத்தைந்து நாட்கள் தடைக்காலம் முடிந்ததும் டோக்கன் பெறாமல்,
நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று மாலையே கடலுக்குச் சென்று விட்டனர்.
டோக்கன் பெறாமல் விசைப்படகுகள் கடலுக்குச் சென்றுள்ளது மீன்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் டோக்கன் பெறாமல் சென்ற படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு, மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
அதுபோல் இந்த ஆண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் கூறினர்.
சிந்திக்கவும்: டோக்கன் பெறாமல் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு எச்சரிக்கை கொடு, அல்லது கால அவகாசம் கொடு, அதைவிடுத்து உடனே தண்டனையா?!
ஏழைகளை நோக்கி தண்டனை கொடுக்கும் கைகள் வெகுச்சுலபமாக நீளும் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லலாம்.
பொதுப்பணிதுறை, வருவாய்துறை, காவல் துறை, இவர்களில் 99 சதவீதமானோர் திருடர்கள்தான்.
ஏன் இவர்களை திருடர்கள் என்று சொல்கிறேன் என்று கேட்காதீர்கள். சராசரி திருடனாவது நல்லவன், ஏன் என்றால், அவனுக்கு வருமானம் இல்லாமல் திருடுகிறான்.
ஆனால் மேற்கண்ட துறையை சேர்ந்தவர்களோ மக்கள் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்கி தொந்தி வளர்ப்பவர்கள்.
வாங்கும் சம்பளம் போதாது என்று, லஞ்ச லாவண்யங்களில் மூழ்கி நாட்டைக் குட்டிச்சுவராக மாற்றுபவர்கள்.
இந்தத்திருடர்கள், கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் எப்போது தெரியுமா? ஏழை, எளிய மக்கள் "ஏதாவது சின்ன தவறு செய்தால் போதும்"
அதை பெரும் குற்றமாக சித்தரித்து 'தங்களை யோக்கியமானவர்கள் என்று காட்டி கொள்ள' அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.
'ஏழை ஒருவன் உணவுக்கு வழியில்லாமல் திருடிவிட்டால்' அவனை கடுமையாக அடித்து, உதைத்து அவன் மீது வழக்கு பதிவு செய்வார்கள்.
ஆனால், 'இவர்களிடம் சொல்லிவிட்டே ஒருவன் திருடுவான்' அவனை பற்றி மக்களிடம் இருந்து புகார்கள் வந்தாலும் அதை தூக்கி குப்பையில் போடுவார்கள் இந்த யோக்கியர்கள்.
ஏழை ஒருவன் ஏதாவது ஒரு பிரச்சனை குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் வந்தால், அவர்களை மிரட்டுவது, மரியாதை இல்லாத வார்த்தைகளால் பேசுவது,
ஐயா! இல்லை பிறகு வா! என்று துரத்துவது, காவல் நிலையத்தின் வெளியே கைகளை கட்டி கொண்டு, தோளில் உள்ள துண்டை இடுப்பில் கட்டி கொண்டு நிற்கும் அளவிற்கு அவர்களை மனதளவில் பயமுறுத்துவார்கள்.
ஏழை, எளிய மக்கள் விசயத்தில், இப்படி அடாவடித்தனம் செய்யும் இந்த காவல்கார ஏவல்கள் 'தங்கள் பணக்கார முதலாளிகளை கண்டதும்' விசுவாசமாக வாலை ஆட்டுவதும்,
அவர்களுக்கு நாற்காலிகளை கொடுத்து உட்காரவைப்பதும், சார் என்று பவ்வியமாக அழைப்பதும், அவர்கள் தூக்கி போடும் எச்சில் எலும்புகளை ( காசை) பொறுக்கிக்கொண்டு,
அவர்கள் கொடுக்கும் புகாரின் பெயரில், சம்மந்த பட்டவர்களை தூக்கி வந்து அடித்து, உதைப்பதில் இவர்களின் கடமை உணர்வு நம்மை புல்லரிக்க வைக்கும்.
ஆமாம்! நாய்கள் நன்றி உள்ள பிராணிகள் அல்லவா!

......அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்........
No comments:
Post a Comment