May 29, 16 வயதினிலே படத்தில் குருவம்மா என்ற ஒரு வாயாடி, எல்லாரையும் அடக்கியாளும் ஒரு கதாபாத்திரம் வரும்.
குருவம்மா என்பது அந்த படத்தின் நாயகி மயிலுவின் தாயாக வரும் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் முதல்வர் ஜெயலலிதாவோடு மிகவும் பொருந்திவரும்.
செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடனே முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆரம்பித்து வைத்த எல்லா செயல்பாடுகளையும் முடக்க வேண்டும்,
அல்லது தொடரக்கூடாது என்ற முடிவில் வரிந்து கட்டிக்கொண்டு பழையபடியே "தான்" என்ற இறுமாப்பு, முருங்கை மரத்தில் மீண்டும் ஏறும் வேதாளத்தை நினைவு படுத்துகிறது.
சமச்சீர் கல்வி என்பது மு. கருணாநிதியின் தனி கற்பனையில் விளைந்த திட்டம் அல்ல. அதுபற்றி பல அமர்வுகள் வைத்து பல படித்த பண்டிதர்களும் அனுபவம் வாய்ந்த கல்வி அலுவலர்களையும் கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட திட்டமாகத்தான் இருக்கும்.
மு. கருணாநிதி கொண்டு வந்த திட்டமாக இருப்பதால் அதைக்களைந்து தான் விரும்பும் திட்டத்தை கொண்டுவர விரும்பினால் ஜெயலலிதா நிச்சயமாக பழைய சாக்கடையிலே கால் பதித்து அரசியலை ஆரம்பிக்கிறார் என்றுதான் அர்த்தம்.
200 கோடிகளை கொட்டி ஆரம்பித்த புதிய சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ சில்லறை காசுகளாக இருக்கலாம். ஆனால் எங்களைப்போன்ற பொது மக்களுக்கு அது ஒரு பிரம்மாண்டம்.
புதிய கட்டிடத்திலிருந்து எந்த ஜோசியரின் வழி காட்டுதலின் அடிப்படையில் மீண்டும் அவசர, அவசரமாக பழைய ஜார்ஜ் கோட்டைக்கே சட்டசபை மாற்றம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மீண்டும் முந்தய நூலகத்துக்கே மாற்றம் செய்யப்படுவது, இதனால் எத்தனை புத்தகங்கள் சிதிலமடைந்து போகும்?
அதைபற்றியெல்லாம் யாருக்குக் கவலை? என் பொருளாதாரமா விரயமாகுது? ஆறு கோடி மக்களுடையதுதானே யார் கேட்பது? என்ற அகம்பாவம்.
இங்கு மக்களே அரசு. நீங்கள் 4 வருடங்களுக்குத்தான்... அடக்கி வாசியுங்கள். முன்னாள் முதல்வர் வாங்கிய அடி இந்நாள் முதல்வரான நீங்கள் கொடுத்ததல்ல.
அது முதலாவதாக இறைவனும் பின்னர் மக்களும் சேர்ந்து கொடுத்தது. அதே அடியை நீங்களும் வாங்கலாம். உங்களின் தனிப்பட்ட அரசியல் வக்கிர புத்தியை விளக்கி வைத்துவிட்டு நேர்மையான எல்லா மக்களுக்கும் ஏற்ற அரசியல் குணத்தை கையாளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ammaval mudinthaal karnadakavil muthal amaicha ragi kattatum mudiyathu ange chinima paiththiyangal kidayathu thrachai thottathileye irukka vendiyathu thaan,
சரியான ஒப்பீட்டுப் பார்வை. ஆனால் குருவம்மாவிற்கு அந்த அளவுக்கு வாய் இல்லாவிட்டால், மயில் போல் மகளை பெற்று பயமில்லாமல் வளர்க முடியுமா? குருவம்மாவுக்கு அசிங்கமான வாயை காட்டிலும் அன்பான மனம் இருந்தது. திமிர், அகந்தை, நீ ஆரம்பித்ததை நான் தொடர வேண்டுமா என்ற பல மோசமான கெட்ட குணங்கள் இருந்தாலும் நல்ல நிர்வாக திறமையும் இருக்கின்றன.
சரியான ஒப்பீட்டுப் பார்வை. ஆனால் குருவம்மாவிற்கு அந்த அளவுக்கு வாய் இல்லாவிட்டால், மயில் போல் மகளை பெற்று பயமில்லாமல் வளர்க முடியுமா? குருவம்மாவுக்கு அசிங்கமான வாயை காட்டிலும் அன்பான மனம் இருந்தது.செல்வி ஜெயலலிதாவுக்கு திமிர், அகந்தை, நீ ஆரம்பித்ததை நான் தொடர வேண்டுமா என்ற பல மோசமான கெட்ட குணங்கள் இருந்தாலும் நல்ல நிர்வாக திறமையும் இருக்கின்றன.
Post a Comment