இந்தியாவின் விவசாயத்துறை கடுமையான ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும் சிறு விவசாயிகள் தங்களது தொழிலை மேற்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், நாட்டில் 50 சதவீதமானவர்கள் தங்களது தொழிலை கைவிடும் நிலையில் உள்ளனர் என்றும் இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாயக் குடும்பங்களிலிருந்து படித்து முன்னுக்கு வரும் இளைஞர்கள் மீண்டும் விவசாய செயற்பாடுகளுக்கு வருவதில்லை என்பதும் சிறு விவசாயிகளுக்கு தமது விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும் இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன எனவும் தெரிகிறது.
இந்தியாவிலிருக்கும் விவசாய நிலங்களில் 40 சதவீதமான நிலங்களுக்கே பயிர் செய்வதற்கு போதிய நீர் வசதிகள் கிடைக்கின்றன என்றும், பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொழிவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றன எனவும், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமான ஊதியத்துக்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத வரையில் இப்பிரச்சினை தொடரவே செய்யும் எனவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விவசாயத்துறை தற்போது நெருக்கடியான நிலையிலேயே உள்ளது எனவும் விவசாயம் செய்வதை விட தமது நிலங்களை விற்றுவிட்டால் அந்தப் பணத்துக்கு கிடைக்கும் வட்டி விவசாய வருமானத்தை விட கூடுதலாக இருக்கும் என்கிற எண்ணம் தற்போது சிறு விவசாயிகளிடம் மேலோங்கி வருகிறது எனவும் ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து எவ்வளவு விவசாயம் செய்ய முடியும் என்பதை விட அந்நிலத்திலிருந்து எவ்வளவு வருமானம் வரும் எனும் நோக்கில் மீண்டும் ஒரு விவசாயப் புரட்சி தேவை எனவும் தெயரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment