புதுடெல்லி,ஜன.3:பினாயக் சென்னிற்கு சட்டீஷ்கர் நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை நீதிபீடத்தின் துஷ்பிரயோகம் எனவும், தொந்தரவை தரும் நடவடிக்கை எனவும் நோபல் பரிசுப் பெற்ற டாக்டர்.அமர்த்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார். கடிதங்கள் பரிமாறிக் கொண்டதாக கூறி சென்னின் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பினாயக் சென் எவரையும் கொல்லவில்லை, கலவரம் நடத்தவில்லை. அரசியல் போராட்டங்களின் ஒரு பகுதியான வன்முறைகளுக்கு எதிராகத்தான் பினாயக் சென் எழுதியுள்ளார். இத்தகைய வன்முறைகள் தேவையில்லை என அவர் வாதிட்டார்.
பினாயக் சென்னின் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தியது நிற்காது. தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவரின் குணநலனை கவனத்தில் கொள்ளவேண்டும். பினாயக் சென் ஒரு சமூக சேவகர். டாக்டர் என்ற நிலையில் ஏராளமான பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிரமத்தை மேற்கொள்கிறார் அவர்.
பினாயக் சென்னை சிறையில் அடைப்பதற்கான ஒரு மாநிலத்தின் அசாதாரண முயற்சியாகும் இது. சட்ட நடவடிக்கைகள் இத்துடன் முடிவதில்லை. சட்டீஷ்கர் நீதிமன்றம் நேர்மையாக சிந்தித்து தனது தீர்மானத்தை மாற்றவேண்டும். இல்லையெனில் குஜராத்தில் நிகழ்ந்ததைப்போல் மாநிலத்தில் நீதி கிடைப்பதற்கு சிரமம் ஏற்படும்.பினாயக் சென்னின் பிரச்சனையை அடிப்படை உரிமைக்கு எதிரான நடவடிக்கையாக உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமர்த்தியா சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment