பெங்களூர்,ஜன.4:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களை மிரட்டியதாக கூறி கர்நாடகா அரசு டெஹல்கா நிருபர் ஷாஹினாவின் மீது வழக்கு பதிவுச் செய்துள்ளது. இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஷாஹினா மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுத்தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் வருகிற 7-ஆம் தேதி வெளியிடும்.
ஷாஹினாவின் ஜாமீன் மனுவில் வாதத்தை கேட்ட மடிக்கரை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பை 7ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. ஷாஹினாவின் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு இட்டுக் கட்டப்பட்டது என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார். பிரபலமான பத்திரிகையாளரான ஷாஹினா ஜாமீன் கிடைத்தால் தலைமறைவாகமாட்டார் எனவும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் ஆஜராக அவர் தயார் எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வெடிக்குண்டு வழக்கில் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்த கே.கே.யோகானந்த், கெ.ரஃபீக் ஆகியோருடன் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஷாஹினா நேர்முகம் நடத்தியிருந்தார்.
நன்றி :தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment