தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழில் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு பொது தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பொறியியல் , மருத்துவம் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது.
அதை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, `அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. பொது நுழைவு தேர்வு நடத்தும் உரிமை கவுன்சிலுக்கு உண்டு' என தீர்ப்பளித்தது. நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, நுழைவுத் தேர்வு பணிகளை அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடுக்கி விட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழக அரசின் முடிவு வரவேற்க்கத்தக்க நல்ல முடிவு.
Post a Comment