Aug 7, 2010

மாணவர்களிடையே மதவெறியைத் தூண்டும் பா.ஜ.கவைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்.

நாகர்கோவில்,ஆக7:தனது சதவிகிதத்திற்கும் அதிகமாக இந்திய சுதந்திரபோரில் இரத்தம் சிந்திய முஸ்லிம் சமுதாயம் தியாகம் செய்தது உயிரையும், பொருளையும் மட்டுமல்ல, தமது எதிர்கால சந்ததியினரின் கல்வியையும்தான்.கல்வியிலும், பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்பதையும், அவர்களுக்கு உடனடியாக இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சச்சார், மிஷ்ரா உள்ளிட்ட கமிஷன்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே சிறுபான்மையினர் கல்வியில் மேம்படுவதற்காக உதவித்தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியிலிருந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களூம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிவருகின்றன. இந்த நிதியுதவி அவர்களுடைய தேவையை முழுமையாக பூர்த்திச் செய்யாது என்பது வேறு விஷயம்.

இந்நிலையில்,தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் மக்களால் மறக்கடிக்கப்பட்டு செல்வாக்கை இழந்து புறம்போக்கு கட்சியாக மாறியுள்ள பா.ஜ.க குறுகிய வழியில் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு தனது வழக்கமான ஆயுதமான மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் பெறவிரும்புகிறது. வருகிற 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது ஒரு சில இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தற்பொழுது சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கிவரும் கல்வி உதவித்தொகையை ஏதோ தமிழக அரசு வழங்குவதுபோல் ஒரு மாயை ஏற்படுத்தி,கல்வியில் இந்து என்பதால் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தை ஜூலைப் போராட்டம் என்றபெயரில் நடத்தி வருகின்றனர்.

உதவித்தொகையைப் பொறுத்தவரை அதில் ஆதாயம் பெறுவோர் ஏராளமாக உள்ளனர்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உதவித்தொகை, ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர்,தியாகிகள் என பல உதவித்தொகைகளில் ஹிந்துக்களே ஆதாயம் பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித் தொகையில் பார்ப்பணர்களுக்குத்தான் பங்கில்லை.ஆகவே பார்ப்பணர்களுக்கு உதவும் நோக்கிலேயே பார்ப்பணர்களால் உருவாக்கப்பட்ட பா.ஜ.க ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை இல்லை என்ற கோஷத்தை எழுப்பி சிறுபான்மையினருக்கு கிடைக்கும் உதவித்தொகையை தடுக்க விரும்புகிறது. மேலும் மாணவர்களிடையே ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி கல்வி வளாகங்களை கலவர பூமியாக மாற்ற தமிழகத்தில் கல்வி உதவித்தொகை என்ற பெயரில் செயலாற்றி வருகிறது.

பா.ஜ.கவின் மதவெறியைத் தூண்டும் போக்கை கண்டித்து மக்கள் நல்வாழ்வில் நாட்டங்கொண்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(06/08/2010) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐயின் மாவட்டத்தலைவர் எ.செய்யது அலி தலைமைத் தாங்கினார். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர் லீனஸ் ராஜ் கருத்துரை வழங்கினார். எஸ்.டி.பி.ஐயின் மாநிலப்பேச்சாளர் செய்யத் இப்ராஹிம் கலந்துக் கொண்டு பா.ஜ.கவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கலந்துக் கொண்டனர்.

Aug 6, 2010

காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்: ப. சிதம்பரம்.

புதுடில்லி : காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விக்கு ப. சிதம்பரம் நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஹூரியத் தலைவர் கிலானி, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் யாரும் கல்லெறிந்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகின. அவரது கருத்தை வரவேற்கிறேன்.

காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., பொதுச்செயலர் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, வெளியான கருத்து, ஐ.நா., அலுவலகத்தில், பணிபுரியும் பாகிஸ்தான் அதிகாரியின் கருத்தாகும். பாதுகாப்புப் படையினரின் சிறப்பு அதிகாரம் தொடர்பான வாக்குறுதியை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். காஷ்மீர் நிலவரம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடக்க உள்ளது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், அம்மாநில மக்களின் இதயங்களை வெற்றிக்கொள்வோம்.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

பாக். வெள்ளத்தில் 12 மில்லியன் பேர் பாதிப்பு.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 12 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க நிவாரண முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.இது பாகிஸ்தான் சந்திக்கும் பேரழிவு என்று சொன்னால் அது மிகையல்ல. பாகிஸ்தானின் வடமேற்கில் துவங்கிய பேய்மழையும் பெருவெள்ளமும், நாட்டின் மத்திய பகுதிகளை தாண்டி தெற்கிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தத் துவங்கியிருப்பதாக அரசுதரப்பு செய்திகள் கூறுகின்றன. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமாகவும், நாட்டின் தொழில் தலைநகராகவும் வர்ணிக்கப்படும் கராச்சி நகர் அமைந்திருக்கும் சிந்த் பிராந்தியத்தில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால், அங்குள்ள 11 மாவட்டங்களில் இருந்து ஐந்துலட்சம் மக்களை அதிகாரிகள் மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மற்றும் சிந்த் பிராந்தியங்களில் மின்கசிவால் மக்கள் உயிரிழக்காமல் தடுப்பதற்காக மின்விநியோகம் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. சிந்த் நதியை ஒட்டிய பகுதிகளில் இருந்து பத்துலட்சம் மக்களை வெளியேற்ற தாங்கள் முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. நாட்டின் வடமேற்கில் இந்த வெள்ளம் காரணமாக, கடந்த ஒருவாரத்தில் 1600 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருகிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மத்தியில், நாடு வெள்ளத்தில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் போது அதிபர் ஆசிப் அலி சர்தாரி பிரிட்டனில் பயணம் மேற்கொண்டிருப்பது கடும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. உள்நாட்டு பிரச்சனை பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் அரச நிர்வாகத்தால் இந்த திடீர் வெள்ளச்சேதத்துக்கு முகம் கொடுக்க முடியவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாக உள்ளது.

Aug 4, 2010

சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்டுகள் தாக்கி அரசு ஆறு போலீஸார் பலி.

தண்டேவாடா,ஆக4:சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 6 வீரர்கள் இறந்தனர்.
தண்டேவாடாவில் இன்று காலை 11 மணியளவில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரத்துக்கு மேல் சண்டையில் 6 வீரர்கள் பலியாகினர். மொத்தம் 75 வீரர்கள் சென்றனர். அவர்களில் 25 பேர் மட்டும் முகாமுக்கு திரும்பியுள்ளனர். 50 வீரர்களை காணவில்லை. தண்டேவாடாவில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக எஞ்சியிருக்கும் வீரர்கள் திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கும் என்று கருத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளிடம் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Aug 3, 2010

8 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்: இந்தியா, சீனாவுக்கு இனி வெளிப்பணி ஒப்படைப்பு இல்லை: ஒபாமா.

வாஷிங்டன், ஆக.3: அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் புதிய பொருளாதார கொள்கையை செயல்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு பணிகள் இனி அளிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார். அட்லாண்டா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். இந்த மாகாணத்தில் இன்னும் சில மாதங்களில் மிகவும் முக்கியமான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும் என கருதப்படுகிறது. இந்த சூழலில் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில் அவர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இருந்தது. இதனால் அரசின் வரி வருவாயில் பற்றாக்குறை நிலவியது. இந்த காலகட்டத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பொருளாதார தேக்க நிலை காரணமாக 80 லட்சம் பேர் வேலையிழந்தனர். 2009-ம் ஆண்டு ஜனவரியில் அதிபராக பொறுப்பேற்றபோது 7.5 லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்தனர். பின்னர் அடுத்த ஒரு மாதத்தில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 6 லட்சமாகும்.

வரிச் சலுகை அளிப்பதை விட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச் சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளித்தது. இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள் கிடைக்கும். மேலும் சிறப்பு வட்டிச் சலுகை அளிப்பதை விட பங்குச் சந்தை முதல் வெள்ளை மாளிகை வரை அனைத்துக்கும் புதிய கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் மாற சிலகாலம் பிடிக்கும்.

பல லட்சம் பேர் வேலையிழக்கக் காரணமான கொள்கைக்கு மாற்றாக புதிய வேலை வாய்ப்பை தனியார் துறைகளில் உருவாக்க அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும். அப்போதுதான் புதிய கொள்கைகளை மிகவும் உறுதியுடன் செயல்படுத்த முடியும்.

எதிர்வரும் தேர்தலில் மக்களுக்கு உள்ள சந்தர்ப்பங்கள் இரண்டுதான். அதாவது பொருளாதார சீர்திருத்தமும், வேலை வாய்ப்பும் தேவையா? அல்லது பின்னோக்கி சென்று பழைய பொருளாதார கொள்கையில் சிக்குவதா? என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு உரிய கொள்கைகள் அரசிடம் உள்ளது. இதற்கு மக்கள் ஆதரவு தேவை. ஜனநாயகக் கட்சியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது ஆதரவை வெளிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பதைவிட அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். அதற்கேற்ப அவற்றுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியா, சீனாவுக்கு வெளிப்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்றார்.

எதிர்க்கட்சியினர் அடுத்த தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் அரசோ அடுத்த தலைமுறைக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதற்காகத்தான் கடந்த 20 மாதங்களாக புதிய கொள்கை வகுக்கப்பட்டு செயல்படுத்தி வருவதாக ஒபாமா கூறினார்.சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களைத்தான் அமெரிக்கா வரவேற்கிறது. அதற்காக பிற நாடுகளில் உள்ளதைப் போன்று சூரிய பலகை மின்சாரம், காற்றாலை மின்சாரம், பயோடீசல் என அனைத்தும் சேர்த்து உருவாக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

இதற்காக சீனா, ஜெர்மனி, பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் தொழில் தொடங்க வேண்டும் என்பதல்ல. எதிர்காலத்தில் அமெரிக்க நிறுவனங்கள்தான் இங்கு தொழில் தொடங்கி நடத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். இதற்காக இதுவரை செய்துள்ள முதலீடுகள் மூலம் 2012-ம் ஆண்டிற்குள் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் ஒபாமா.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை- 20 ஆண்டுகள் இன்னும் மாறாத ரணம்.

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜம்மா பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள் இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந்நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் சுகதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.

துப்பாக்கி குண்டுகள் பள்ளிவாசலில் ஏற்படுத்திய தாக்கம்:
சம்பவ தினம் இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையினால் ஜெனரேற்றர் வெளிச்சத்தில் தொழுகை நடந்ததாக சம்பவததை நினைவு படுத்திக் கூறும் 40 வயதான அப்துல் கரீம் மொகமது லாபீர்.தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டுடன் கைக்குண்டு தாக்குதலையும் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் முழங்காலிலும், இரண்டு கைகளிலும் தான் காயமடைந்ததாகவும் கூறுகின்றார்

விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று ஏற்பட்ட பாதிப்பு 20 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்கின்றார் மட்டக்களப்பு பல்சமய சமாதான ஒன்றியத்தின் துணைச் செயலாளரான ஐ.எம்.இலியாஸ் மெளலவி.

முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்கள் கவலைக்குரியது எனக் கூறும் மனித உரிமைகள் சட்டத்தரணியும், சமூக ஆய்வாளருமான பேரின்பம் பிரேம்நாத் அந்த வடு அவர்கள் மத்தியில் இன்னும் மாறவில்லை என்கின்றார் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக் கிடையிலான இன உறவை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாட்டிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்

இந்த சம்பவங்கள் நடந்து 20 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.முஸ்லிம்களை நியாயமாக கொன்றதன் பலனை விடுதலை புலிகள் தங்கள் கடைசி காலத்தில் இலங்கை அரசு படைகளிடம் இருந்து அனுபவித்தார்கள்.

ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும்: யெச்சூரி.

வளர்ந்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாத குழுக்களைப் பற்றி எச்சரிக்கை தேவை என்றும் அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று யெச்சூரி கூறியுள்ளார்.கம்யூனிஸ்ட் கட்சியான மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதா ராம் யெச்சூரி "இவர்களுக்கு எதிராக அரசு மற்றும் பாதுகாப்புத் துறைகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹிந்துத்துவ தீவிரவாத குழுக்கள் பற்றி சவ்தார் காஸ்மி நினைவு அமைப்பு ஏற்ப்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கூறினார்."ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களுடன் ஆர்.எஸ்.எஸ்க்கு உண்டான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் பேசுகையில் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்று அவர் வலியுறுத்தினார்.

Aug 2, 2010

வன்னியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற இலங்கை முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பு புகார்.

கொழும்பு, ஆக.2: இலங்கையின் வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற அந்நாட்டு அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரமேச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: முறையான அரசியல் தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு திட்டமிட வேண்டும்.

ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் செயல்பட்டால் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது தொடர்பாக வலியுறுத்தவில்லை.

மேலும் அதுதொடர்பாக தீர்மானம் எதையாவது கொண்டு வந்தார்களா? இலங்கை அதிபரிடம் பேசினார்களா? ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதாவது மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.மீள் குடியமர்வு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.

வன்னியில் மீள் குடியமர்வு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. வன்னியின் பெரும் பகுதிகள் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியத் தூதர்: இந்தியாவின் சார்பில் இலங்கை வரவுள்ள சிறப்புத்தூதர், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளை இலங்கை அரசின் வழிகாட்டுதலின்றி, இந்தியத் தூதரின் துணையோடு பார்வையிட வேண்டும். அவ்வாறு செய்தால் அதை வரேவற்போம்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் ராணுவத்தினரோடு சுமார் 4 லட்சம் சிங்களர்களையும் இலங்கை அரசு குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அரசுக்கும்,தமிழ் கூட்டமைப்புக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறி வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள்: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள்.

மும்பை,ஆக2:'ஹிந்துத்துவ பயங்கரவாதம்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.மராத்தி மொழி பத்திரிகை ஒன்றில் வைத்யா எழுதியுள்ள கட்டுரையில் இதனை வலியுறுத்தியுள்ளார். ஹிந்துத்துவ பயங்கரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி இந்து மதத்தின் மீது கறையை ஏற்படுத்தியுள்ளனர்.இந்தக் கறையைப் போக்க இந்து மதத் தலைவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குண்டுவெடிப்புகளில் தலைவர்களின் பங்கு: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கம் ஒப்புதல்.

புதுடெல்லி,ஆக2:தங்களுடைய மூத்தத் தலைவர்கள் பலர் தேசத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் பங்கேற்றிருப்பதுக் குறித்து தாங்கள் கவலையில் உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல் அளித்துள்ளது. குண்டுவெடிப்பு விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், குண்டு வெடிப்புகளில் சிக்கியவர்களை இயக்கத்திலிருந்து வெளியேற்றப் போவதாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் மத்திய கமிட்டி உறுப்பினர் ராம் மாதவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தலைவர்கள் குண்டுவெடிப்புகளில் பங்கேற்றுள்ளார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ் முதன்முதலாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மலேகான்,அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் தொடர்புக் குறித்து தகவல்கள் சமீபத்தில் வெளியாயின.குற்றஞ்சாட்டப்பட்டோரில் தேவேந்திர குப்தா மட்டுமே ஆர்.எஸ்.எஸ்ஸில் ஏதேனும் பொறுப்புவகிப்பதாக ராம் மாதவ் தெரிவிக்கிறார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இதரத் தலைவர்களுக்கு அமைப்புடன் தொடர்பில்லை எனக்கூறி தலைத்தப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது.2010 ஆம் ஆண்டு தேவேந்திர குப்தா கைதுச் செய்யப்பட்ட பொழுது அவர் விபாக் பிரச்சாரக்காக செயல்பட்டதாக ராம் மாதவ் கூறுகிறார். மற்றவர்கள் குற்றத்தில் ஈடுபடும் பொழுதோ, கைதுச் செய்யப்படும் பொழுதோ ஆர்.எஸ்.எஸ்ஸில் பொறுப்பு வகிக்கவில்லை என்பது ராம் மாதவின் வாதம்.

சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா ஆகியோருக்கு ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பிருந்தது. 2003 ஆம் ஆண்டு வரை மாவட்ட பிரச்சாரக்காக பணியாற்றியவர் சுனில் ஜோஷி. ஜார்க்கண்டில் தியோகரில் எட்டுமாதம் பிரதேச காரியவாஹ் பணியாற்றியவர் சர்மா. இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து பிரிந்துச் சென்றதாக ராம் மாதவ் தெரிவிக்கிறார்.

தற்பொழுது தலைமறைவாகவிருக்கும் சந்தீப் டாங்கேக்கு 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பில்லையாம் ராம் மாதவ் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான அசோக் பேரி,அசோக் வர்ஷணேயி ஆகியோரை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மட்டுமே செய்ததாக ராம் மாதவ் தெரிவிக்கிறார். இந்த்ரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்புகளுக்கான சதித்திட்டத்தில் பங்கில்லையாம்.

கோவா குண்டுவெடிப்பை நடத்திய சனாதன் சன்ஸ்தானுடன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பங்கில்லையாம். அபினவ் பாரத்தின் செயல்பாடுகளில் மர்மம் உள்ளதாம். புரோகித்தையும், தயானந்த் பாண்டேயையும் தெரியாதாம். பிரக்யாசிங் ஏ.பி.வி.பியில் உறுப்பினராகயிருந்தது மட்டும் தெரியுமாம், இவ்வாறு தங்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க நேர்முகத்தில் ராம் மாதவ் முயல்கிறார். ஆனால்,குற்றவாளிகளுக்கு சட்டரீதியான உதவி அளிக்கமாட்டோம் என்றுக்கூற ராம் மாதவ் தயாரில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Aug 1, 2010

பயங்கரவாத ஹிந்துதுவாவாக மாறிவரும் கேரளா கம்யூனிஸ்ட் கட்சி.

புதுடெல்லி,ஆக1:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான்,பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரிப் மற்றும் செயற்குழு உறுப்பினர் கோயா ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற பத்திக்கையாளர் சந்திப்பின் போது, கேரள முதல் மந்திரி அச்சுதானந்தன் முஸ்லிம்களை பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் பணத்தின் மூலமும் காதல் திருமணங்களின் மூலமும் 20 வருடங்களில் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று கூறிய கேரள முதல்வர் அச்சுதானந்தன் தனது தவறான குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். முதலமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு மாநிலத்தில் மத துவேசத்தை உண்டாக்கும்" என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான் கூறினார்.

பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீப் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா ஆகியோர் "PFI க்கு எதிரான இந்த குற்றச்சாட்டை முதலமைச்சரால் நிரூபிக்க முடியுமா" என்று சவாலாக கூறினர்."முதலமைச்சர் PFI க்கு எதிரான தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் மேலும் கேரள மக்களுக்கு முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.

"முதலமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு பாசிச சங்க் பரிவார கும்பல்கள் பரப்பி வரும் தவறான ஒரு கூற்றை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் அப்படியே எடுத்துக் கூறுவது எதிர் பாராத ஒன்று.நாட்டில் லவ் ஜிஹாத் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதன் மூலம் பெண்கள், இளைஞர்கள் முஸ்லிம்களாக மாற்றப்படுகிறார்கள் எனக் கூறி வருகிறார்.

மேலும் கேரள உயர்நீதிமன்றம் லவ் ஜிஹாத் என்பது ஒரு பொய்யான வதந்தி லவ் ஜிஹாத் என்று எதும் இல்லை என முன்னரே கூறிவிட்டது. இருப்பினும் முதலமைச்சரின் இத்தகைய பேச்சு நீதித்துறையையே நிராகரிப்பதாக உள்ளது.ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவர் ஒரு சில அரசியல் ஆதாயங்களுக்காக எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றக் கூடாது.

மேலும் பணம்,கட்டாய மத மாற்றம், மற்றும் லவ் ஜிஹாத் மூலம் மதம் மாற்றுகிறார்கள் எனக் குற்றம் சாட்டுவது ஒரு சமுதாயத்தவரின் இளைஞர்களை அவமானப்படுத்தி அவர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்." என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் "அச்சுதானந்தன் ஒரு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர். அவர் மக்கள் இஸ்லாமிய மதத்தின் பக்கம் ஆர்வமாக வருவதைப் பற்றி அவர் ஏன் கவலைப்படுகிறார் என விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மாநிலத்தின் பெரும்பான்மையனவராகவோ அல்லது சிறும்பான்மையினராகவோ இருப்பதை பற்றி அவர் ஏன் கவலைப்படுகிறார் என்பதையும் விளக்க வேண்டும். மேலும் நாட்டின் சட்ட வரம்புகள் எதுவும் PFI ன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கு வரையறை கூறவில்லை. இத்தகைய பாய்ச்சல்களால் அச்சுதானந்தன் நாட்டின் ஜனநாயக வரையறைக்கு உட்பட்டு செயல்லாற்ற தகுதியற்றவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

PFI ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை முதலமைச்சரால் நிரூபிக்க முடியுமா. இது போன்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM) நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானதாக உள்ளது.
கேரள மாநிலத்தின் தலைமை இதைப் போல் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான விசம பிரச்சாரத்தைச் செய்து தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற இவ்வாறு கூறியுள்ளது." என்றனர்

"பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல. அது பின்தங்கிய முஸ்லிம் சமுதாயத்தையும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் தேசிய மைய நீரோட்டத்தின் வளர்ச்சியில் எடுத்துச் செல்ல சேவை செய்யும் ஒரு அமைப்பாகும். இது 18 வருடங்களாக இந்தியாவில் பணிகள் செய்து வருகிறது மேலும் நாடு முழுவதும் இதன் தொண்டர்கள் செயல்படுகிறார்கள்." என்றும் கூறினர்.

தமுமுக ஆம்புலன்ஸ் உடைப்பு : பாஜக ஹிந்து பயங்கரவாதிகள் அராஜகம்.


ஆக1:தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது. கடந்த ஜுலை-24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தகுடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி திருப்பினார். வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால்,அவர் வண்டியை மெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.

அப்போது காவல்துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது தொண்டர்களிடம்
ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார். எந்த விதி மீறலும் யாருக்கும் இடையூறு இல்லாமலும் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.

மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்றுவிட்டார். அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில், ஆம்புலன்ஸை கட்டைகளால் உடைத்து, டிரைவரை கொலைவெறியுடன் தேடி உள்ளனர். டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்தபொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீதுதடியடி நடத்தியதும், வன்முறைகும்பல் ஓடத் தொடங்கியது.

அதற்குள் பாஜகவினர் தங்களின் அயோக்கியத்தனத்தை மறைக்க, ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர். ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர். போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளை போட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.

கேரளாவை ஆளும் மாபியா கும்பல் திடுக்கிடும் தகவல்: உயர்நீதிமன்றம் நீதிபதி அறிவிப்பு.

திருவனந்தபுரம்,ஆக,1:மாஃபியா கும்பலின் பிடியில் கேரள மாநில அரசு உள்ளது என, உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், மலையாற்றூர் பகுதியில் கல் குவாரி தொடர்பான வழக்கு வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி சிரிஜகன் முன்னிலையில் நடந்து வந்த விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: அரசியல்வாதிகளும், மாபியா கும்பலும் தான் அரசை பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர்.

அரசை யாராவது பின்னால் இருந்து இயக்குகின்றனரா என்பது குறித்து விளக்க வேண்டும்.சாதாரண பொது மக்களுக்கும், நீதிபதிகளுக்கும் மட்டும்தான் தற்போது சட் டத்தை பயன்படுத்தி வரு கின்றனர்.மாநில காவல்துறையினரால் சட்டப்படி செயல்பட முடியாவிடில், ராணுவத்தை வரவழைக்க உயார்நீதிமன்றம் உத்தரவிட முடியும். பணம் இருந்தால், எந்த நீதிமன்ற உத்தரவையும் தாண்டி செயல்பட முடியும் என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார். உயர்நீதிமன்ற நீதிபதியின் கடும் விமர்சனம்.