Jul 7, 2010

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் படமெடுத்த ஐரோப்பிய செயற்கைக்கோள்.


லண்டன்: ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர் டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார். விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது

இலங்கை: சிங்கள வெறியர்கள் வன்முறை-ஐ.நா. அலுவலகம் மூடல்.

கொழும்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் விசாரணை தொடங்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் போராட்டங்கள் நடப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்று ஐ.நா. அமைத்துள்ள நிபுணர் குழுவின் தலைவரான மர்சுகி தருஸ்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நிபுணர் குழு தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக இம்மாதம் மூன்றாவது வாரத்தில் கூடவுள்ளது. தேதி இன்னும் இறுதியாகவில்லை. இந்தக் குழுவை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் குறித்து நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் முட்டாள்கள் என்று இலங்கை அமைச்சர் வீரவன்ச குறியுள்ளது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் தருஸ்மான்.

கொழும்பு ஐ.நா. அலுவலகம் மூடல்: இதற்கிடையே சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நேற்று சிங்கள வெறியர்கள் ஐ.நா. அலுவலகத்தை தாக்கி உள்ளே புக முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் கடுமையாகப் போராடி அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட ஊழியர்கள் பத்திரமாக வெளியேற உதவினர். கலகக்காரர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உருவப்படம், ஐ.நா. கொடி ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

இந்தக் குழுவை பான் கி மூன் வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் சிங்கள வெறியர்கள். இந்த வன்முறையைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டுள்ளது. முன்னதாக போராட்டத்தின்போது வீர வன்ச கூறுகையில் இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. 3 நபர் குழுவை நியமித்துள்ளது.

வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழர்களை மீட்க போர் நடந்தது. அதிபர் ராஜபக்சேவின் வழிகாட்டுதலில் நடந்த இந்தப் போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. ஆனால், ஐ.நா. குழு அந்த போர் குறித்து விசாரித்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கை அளிக்க திட்டமிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து ராணுவ முன்னாள் தளபதியும், எதிர்க்கட்சி எம்.பி.யுமான சரத் பொன்சேகா பேசினார். அப்போது அவர் ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே நடந்தது. அதில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. இந்தப் பிரச்னையில் ராணுவத்திற்கு என் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றார்.

அமெரிக்கா கண்டனம்: ஐ.நா.வுக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் கலகங்கள் குறித்து அமெரிக்கா அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விசாரணை நடத்துவதை தடுக்கக் கூடாது. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரினார்

நக்சலைட்களின் செய்தித் தொடர்பாளரான ஆசாத் என்பவர் கொல்லப்பட்டதை அடுத்து 48 மணி நேர பாரத் பந்த் மாவியோஸ்டுகள் அறிவிப்பு.

டெல்லி: மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்திருந்த 48 மணி நேர பாரத் பந்த் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து நக்சல் பாதித்த மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே பாதைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரயில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நக்சலைட்களின் செய்தித் தொடர்பாளரான ஆசாத் என்பவர் ஆந்திர மாநிலத்தில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து 48 மணி நேர பாரத் பந்த் நடத்தப்படும் என மாவியோஸ்டுகள் அறிவித்தனர். இந்த பந்த் இன்றுகாலை தொடங்கியது.

இதையடுத்து நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்து மாநிலங்களிலும் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசாத் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் ரயில் தகர்ப்பு உள்ளிட்டவற்றில் நக்சல்கள் ஈடுபடலாம் என்பதால் ரயில் பாதைகள், ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பந்த் தினத்தின்போது ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை நக்சலைட்கள் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளான அனைத்து மாநிலங்களிலும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஒரிசா, பீகார்,மேற்குவங்கம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கெல்லாம் ரயில் பாதைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்.

நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முஹம்மது ஃபாரூக். இவர் செசல்ஸ் தீவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளராக உள்ளார். இவரின் மகள் சகோதரி சல்மா செசல்ஸ் தீவில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்.

சர்வதேச அளவில் 100 நாடுகளை சேர்ந்த 2,000 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற "இண்டர்நேசனல் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜிகேசன்ஸ்" என்ற தேர்வு கடந்த ஆண்டு (2009) அக்டோபர் மாதம் நடைபெற்றது.இதனுடைய சர்வதேச முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது.இதில் கலந்துக்கொண்ட சகோதரி சல்மா சர்வதேச அளவில் மூன்று பாடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார்.

ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் சல்மா ஃபாரூக் சர்வதேச அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலும் உயிரியல் பாடத்தில் மூன்றாம் இடத்தையும், புவியியல் பாடத்தில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இன்பர்மேசன் கம்யூனிகேசன் மற்றும் புவியியல் பாடங்களில் செசல்ஸ் தீவில் சிறப்பிடத்தையும்,இயற்பியல் பாடத்தில் அதீத சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார்.பத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளதால் இவருக்கு 'ஏ ஸ்டார்'(A-Star) என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
source:நீடூர் சீசன்ஸ், அப்துல் பாசித்

'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெறும் முதல் இந்திய முஸ்லிம் மாணவி.


பாட்னா தனது சமூகத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக பீகாரை சேர்ந்த ஜீஷான் அலி என்ற மாணவி 'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார். அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனமான USIEF இப்பட்டத்தை ஜீஷான் அலிக்கு வழங்கவுள்ளது. இப்பட்டத்தை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி பெறுவது இதுவே முதன் முறையாகும்.

"இச்செய்தியை கேட்டதும் நான் வியப்படைந்தேன், அளவு கடந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன், நான் உண்மையாகவே கவுரவிக்கப்பட்டுள்ளேன்" பாட்னா பல்கலைகழக Ph.D மாணவி ஜீஷான் பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். USIEFன் முழுத்திறன் அந்நிய மொழி கற்பித்தல் உதவியாளர் (FLTA) என்ற திட்டத்தின் மூலம் இவர் இப்பட்டத்தை பெற்றிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 21-29 வயதுள்ள இந்தியர்கள் தற்போது கல்லூரிகளில் ஆங்கில ஆசிரியராகவோ அல்லது ஆங்கில ஆசிரியராக பயிற்சி எடுப்பவராக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அவர்களின் 9 மாத அமெரிக்க கல்லூரி வாழ்க்கையில் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி அல்லது உருது சொல்லித்தர வேண்டும்.
இப்போட்டியில் சுமார் 150 நாடுகளிலிருந்து மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். ஆனால் 60 நாடுகளை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மவ்லானா ஜாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஜீஷான் அலி, இத்திட்டத்தில் ஹிந்தி மற்றும் உருது கற்பிப்பார். இது தவிர, அமெரிக்காவிற்கான கலாச்சார தூதராகவும் பதவி வகிப்பார். இது தொடர்பாக, ஜூலை இறுதியில் இவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

Jul 6, 2010

நக்ஸல்பாரி மக்கள் இயக்கத்தின் மீது விமான தாக்குதல் நடத்த மத்திய அரசு முயற்சி.

நாளுக்கு நாள் பெருகி வரும் நக்சல் மக்கள் இயக்கத்தின் தாக்குதலை தாங்க முடியாத மத்திய அரசு விமான படையை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக நக்சல்கள் அதிகம் மாநில அரசுகள் நடவடிக்கையை துவங்கியுள்ளது. நக்சல் தாக்குதலில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 600 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ரூ. 700 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரை குறி வைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய அரசு, ராணுவ நடவடிக்கையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல் பரவலாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் நக்சல்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆதரவு குரலும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட 27 பேரை கொடூரமாக சுட்டு கொன்றனர். மலைகள் மற்றும் மரங்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மத்திய அரசு உள்துறை அதிகாரிகள் நக்சல் பாதிப்பு மாநிலங்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நக்சல்கள் ஒழிக்க முதல்கட்டமாக விமானப்படையை களம் இறக்கலாம் என தெரிகிறது. விமான படையை பயன்படுத்துவது தொடர்பாக முதலில் எங்கு ஹெலிபேட் தளம் அமைக்க முடியும் என ஆராய ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசு உதவியுடன் இந்த பணிகள் துவங்கியிருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நக்சல்கள் இருக்கும் பகுதிகளை வானத்தில் பறந்தபடி நோட்டமிட்டு வருகின்றனர். இதனால் விமானப் படை விரைவில் தனது பணியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 5, 2010

ஐ.நா. வாகனங்கள் வன்னி செல்ல தடைவிதிக்கும் பயங்கரவாத இலங்கை அரசு.

கொழும்பு: இலங்கையின் வன்னிப் பகுதியில் ஐ.நா. வாகனங்கள் செல்ல அந் நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது. வன்னிப் பகுதிகளில் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஐ.நா. முக்கிய பணியாற்றி வருகிறது. இதற்காக ஐ.நா. பணியாளர்கள் அந்தப் பகுதிகளுக்கு சென்று வர முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த அனுமதி மறுக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஓமந்தை சோதனைச்சாவடியைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஐ.நா. ஊழியர்கள் விண்ணப்பித்த போதும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை அமைத்ததையடுத்து ஐ.நா. ஊழியர்களுக்கு இலங்கை இந்தத் தடையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

இன்று கரும்புலிகள் தினம்: 'விடுதலைப் பயணம் தொடரும்'-புலிகள் அறிக்கை.

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 ஜூலை 5ம் நாள் இலங்கை ராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த ராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும் இது.

அந்தத் தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களை தமிழீழத்தின் புதல்வர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். காலங்காலமாக எதிரியின் குகைக்குள்ளேயே உலவி, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவாமல் தமது கடமையை செய்த அற்புத மனிதர்கள். எத்தனையோ கரும்புலிகள் புகழ் மயக்கம் இல்லாமலே தம்மை வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

''பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனால் விழிக்கப்படுகின்றமையின் அர்த்தத்தின் ஆழம் பற்றி நாம் உணர்வோம்.எனவேதான் இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம்.

இன்று தமிழீழ தேசமெங்கும் தனது கால்களை அகலப்பதித்திருக்கும் இலங்கையின் கொடிய கரங்களினால் எமது மக்கள் படும் துன்பங்களை எல்லாம் எமது கொள்கையில் மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும். ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த சிங்கள தேசத்துக்கு விரைவில் தமிழீழ மக்கள் பதில் கொடுப்பார்கள்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப் பயணம் தொடரும். இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள்.

இதற்கிடையே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ள தொழிலதிபருக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்புக்களை கையகப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு அந்த தொழிலதிபர் நிதியுதவி செய்தார் என்று இலங்கு உளவுப் பிரிவுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந் நிலையில் புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உளவுப் பிரிவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 8,000 பேர் வரை சேர்க்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

நியூயார்க் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

நியூயார்க்: நியூயார்க் நகரின் ஜான்.எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு பெண் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.எப்போதும் மிகப் பரபரப்பாக இயங்கும் இந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.40 மணியளவில் ஒரு மர்மப் பெண் தொலைபேசியில் பேசினார். விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டினார்.

அதே நேரத்தில் விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் ஒரு பை அநாதையாகக் கிடந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பயணிகள் அனைவரையும் விமான நிலையத்தை விட்டு அவசரமாக வெளியேற்றிவிட்டு பையை சோதனையிட்டனர்.ஆனால், அந்தப் பையில் குண்டு ஏதும் இல்லை. இதையடுத்து பயணிகளி்ன் உடமைகள் அனைத்தும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அனைவரும் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களிலும் பரபரப்பு நிலவியது.விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் குறித்து விசாரணை நடக்கிறது.

Jul 4, 2010

பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து SDPI கண்டன ஆர்பாட்டங்கள்.

எதேச்சதிகார மத்திய அரசின் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் SDPI சார்பாஹா கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் 3.7.2010 அன்று மாலை ஐந்து மணியளவில் மணிக்கூண்டு அருகில் வைத்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுசெயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர தலைவர் S.நயினா முஹமது அவர்கள் தொகுத்து வழங்கினார் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பாசுலூர் ரஹ்மான் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கடுமையாக சாடினார்.
முன்பை விட கச்சா எண்ணெய் சர்வதேச விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. அதேபோல் வரியின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும் அதிகரித்துள்ள நிலையில் எல்லா பொருட்களின் விலை வாசி உயர்வுக்கு காரணமாகின்ற பெட்ரோல் டீசல் விலை உயர்வை தனியார் முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்டுதான் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மக்கள் நலனில் அக்கறை இருந்தால் ஈரான் எரிவாயு திட்டம் மற்றும் சேது சமுத்திர திட்டம் போற்றவற்றை விரைந்து செயல்படுத்தி முடித்திருக்கும் என்று கடுமையாக சாடினார்.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது மைதீன், மாவட்ட செயலாளர் பாதுஷா மற்றும்தென்காசி செங்கோட்டை சங்கரன்கோயில் புளியங்குடி வாசுதேவநல்லூர் வடகரை ஆகிய பகுதிகளில் இருந்து செயற்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர். கடையநல்லூர் நகர தலைவர் S. நயினா முஹமது ஆர்பாட்டதிர்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார் இறுதியில் கடையநல்லூர் நகர் தொகுதி கமிட்டி செயலாளர் யாசர்கான் நன்றி கூறினார்.

தீவிரவாதிகளை கடிந்து கொள்ளும் தீவிரவாதிகள்.

பாஜகவுக்கு இது போதாத காலமோ என்னவோ. "உப்பு விற்க போனா மழை பெய்து; மாவு விற்க போனா காத்தடிக்கு' என்ற நிலைதான். பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் பிடிவாதத்தால் கூட்டணி உடைந்து போய்விடுமோ என்ற கலக்கத்திலிருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் இப்போதுதான் மீண்டுள்ளனர். அப்பாடி என்று பெருமூச்சு விடுவதற்குள் ஜஸ்வந்த் சிங் விவகாரம் மீண்டும் கட்சிக்குள் பிரச்னையை கிளப்பி உள்ளது.

ஜஸ்வந்த் சிங்கை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்ததை தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஜஸ்வந்த் சிங்கை மீண்டும் அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு அவசரம்? என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கடிந்து கொண்டார்களாம்.கட்சிக்குள் மீண்டும் வந்த பிறகாவது அந்த மனிதர் வாய்மூடி மெüனம் காக்க வேண்டியதுதானே. இங்கே வந்த பிறகும் ஜின்னா பற்றிய எனது கருத்துகளில் மாற்றம் இல்லை என்று கூறி வருகிறாரே, இது எப்படி? நீங்களாவது சொல்லி வைக்கக்கூடாதா? என்று ஒரு பிடி பிடித்தார்களாம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்.

ஜஸ்வந்த் சிங்கைவிட அமைப்புக்கு நெருக்கமான உமா பாரதி போன்றவர்கள் எல்லாம் கட்சிக்குள் வர காத்திருக்கும்போது, ஜஸ்வந்த் சிங்க்கு மட்டும் ஏன் இந்த அவசரம் என்று கேள்வி மேல் கேள்வியாம். அதோடு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கட்சியின் நிலைபாடு குறித்தும் தாய் அமைப்புக்கு கடும் அதிருப்தியாம். கட்சிக்குள் நடக்கும் எதுவுமே சரியாக இல்லை, தலைவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்று சரமாரியாக குற்றச்சாட்டாம். இவ்வளவுக்கும் புதிய இளம் தலைவர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேர்ந்தெடுத்த ஆள்.

Jul 2, 2010

ஹிந்து தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசு: இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது.

பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றமும், மாநில அரசும் போட்டி போட்டிக் கொண்டு பாதுகாப்பு அளிப்பதை கண்டுள்ளீர்களா? ஆம்! ஆர்.எஸ்.எஸ்ஸை தலைமையாக கொண்டு பல ஹிந்துத்துவ தீவிரவாதிகள் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றதை நாம் அறிவோம். மலேகோன், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மார்கோவா, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் என பல குண்டுவெடிப்புகள் இவ்வமைப்புகளால் நிகழ்த்தப்பட்டு,நீதிவிசாரனைகளில் இவ்வமைப்புகளின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

தொண்டர்கள் கைது செய்யப்பட்டதும், எங்கு நம் வேடம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில், கைது செய்யப்பட்ட அத்தொண்டர்களை கழட்டிவிடும் முயற்சியில் அவ்வமைப்புகள் களமிறங்கின. அதன்படி, இக்குண்டுவெடிப்பில் சிக்கியவர்களுக்கும் தங்கள் இயக்கங்களுக்கும் சம்மந்தமே கிடையாது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, இது அவர்களின் தனிப்பட்ட கொள்கை என்றும் அவ்வமைப்புகள் கைகழுவின. நம் தீவிரவாத இயக்கங்களை தடைசெய்துவிடுவார்கள் என்று பயந்து, அத்தொண்டர்களுக்கு எந்த விதமான ஆதரவோ அல்லது உதவியோ நாங்கள் அளிக்கமாட்டோம் என்றும் இவ்வமைப்புகள் சூளுரைத்தனர்.

இச்செய்தியை அறிந்த தொண்டர் பயங்கரவாதிகள் கொதிப்படைந்தனர். தங்கள் வாழ்கையை சீரழித்த தலைவர்களை கொலைச் செய்யப்போவதாகவும் தொண்டர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகின.தம் சக பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதைக் கண்டு பயந்து போன பயங்கரவாத தலைவன், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகினான்.

மனுவை விசாரித்த நீதிமன்றமோ, மாநில அரசை இது தொடர்பாக கேள்வி கேட்க, நீதிமன்றமும், மும்பை மாநில அரசும் அப்பயங்கரவாதத் தலைவனுக்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். சிறையில் இருக்கும் தன் சக பயங்கரவாதிகளினால் பயங்கரவாத தலைவனுக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஒட்டுமொத்த பயங்கரவாத கும்பல்களின் மூலம் நம் சமுதாயத்திற்கு ஏற்படும் நிலை?

பயங்கரவாதிகள் மனுதாக்கல் செய்தால் ஓரிரு நாட்களில் விசாரித்து தீர்வுகாணும் நீதிமன்றமும், மாநில மத்திய அரசுகளும், சாதாரண மக்களின் குறைகளைத் தீர்க்க காலம் தாழ்த்துவது ஏனோ? ஊழல் கறை படிந்த அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு அழிக்கும் வழக்கம் மாறி, இன்று பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவது! நம் இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு இது தான் காரணமோ என்னவோ? கடைசி வரை அந்த தீவிரவாதியின் பெயரையே சொல்லவே இல்லையே என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. ஆம்! தனக்கு தன் தொண்டர் சகாக்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டது ஆர்.எஸ்.எஸ் தலைவர் 'மோகன் பகவத்' தான்.

Jul 1, 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள்.

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மூத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மீது சந்தேகம் வலுவடைந்துள்ளது. 9 பேர் பலியாக காரணமாயிருந்த இந்த குண்டு வெடிப்பு பற்றிய சதித்திட்டம் இவர்களுக்கு முன்கூட்டியே அறிந்திருக்கூடும் எனவும், தாக்குதலுக்கு பிறகு கொலைகாரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

சிபிஐ 10 லட்சம் சன்மானம் தருவதாக அறிவித்திருந்த இரண்டு ஹிந்துத்துவ தீவிரவாதிகளான ராம்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு 2007, மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கு 2008 ஆகிய வழக்குகளிலும் தேடப்படுகின்றனர். ஒரே அமைப்பை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகளே இந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும் காரணமாயிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

உ.பி யிலிருந்து அஷோக் பெரி, கான்பூரிலிருந்து அஷோக் வர்ஷினி (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) மேலும் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) ஆகியோர் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பெரி, வர்ஷினி கொடுத்த தகவலின்படி குண்டுவெடிப்பு பற்றி இவர்களுக்கு முங்கூட்டியே தெரியும் என்றும் சதிகாரர்களுக்கு அடைக்களம் தந்திருப்பதும் தெரிகிறது.

குப்தா மற்றும் ஷர்மா ஆகியோருக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெஃப்டினண்ட் ப்ரசாத் புரொஹித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை குப்தா, ஷர்மா, கல்சங்கரா, டாங்கே மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஷர்மா 2 மாதங்களுக்கு முன்பே செகந்தராபாத்தில் தங்கி நோட்டமிட்டு ஜோஷி, கல்சங்கரா, டாங்கேவுக்கு தகவல் தந்ததாகவும் இவர்கள் 3 நாட்களுக்கு முன் அங்கு வந்து 18ஆம் தேதியன்று பள்ளிக்குள் சென்று குண்டை வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஜோஷி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.