Dec 27, 2010

புத்தாண்டை சீர்குலைக்க சதி!

புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் பெங்களூரு, டில்லி, ஆமதாபாத், மும்பை,கோவா உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் ஊடுருவியதாகவும் உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும், போலீசாரை உஷார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மும்பை, டில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உத்தரவையடுத்து, கர்நாடகாவில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் அதிகாரிகள், அரசு உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருல் நடந்தது. ஆலோசனைக்கு பின், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைத் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாத உள்ளிட்ட அமைப்புகள், மாநிலத்தில் நாசவேலைகளில் ஈடுபடக் கூடும் என்று மத்திய உளவுத் துறை தகவல் கொடுத்துள்ளது. இதன் பின்னணியில், மாநிலம் முழுவதும் பயங்கரவாதிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், "ஹை அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. 550 பேர் அடங்கிய ராணுவப் படையினர், நகரில் முகாமிட்டுள்ளனர். எந்த சூழ்நிலையிலும் தேவையான நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர். மாநிலத்தின் நிலைமை முழு அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது; போலீஸ் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: