
மாட்ரிட்: விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஜூலியன் அசான்ஜே இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. அங்குள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.மாட்ரிட் தவிர பார்சிலானோ, வெலன்சியா, செவில்லி ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடந்தது.அசான்ஜேவை விடுதலை செய், பேச்சுச் சுதந்திரத்தை நசுக்காதே என்று கோஷங்கள் முழங்கப்பட்டன.
இதேபோன்ற போராட்டங்கள் நெதர்லாந்து, கொலம்பியா, அர்ஜென்டினா, மெக்சிகோ, பெரு, பிரேசில் ஆகிய நாடுகளிலும் நடத்தப்படவுள்ளதாம். ஸ்வீடனில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே தற்போது அசான்ஜே கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் விரைவில் அவரை ஸ்வீடனுக்கு நாடு கடத்தவுள்ளது இங்கிலாந்து. இதுதொடர்பான மனு நாளை விசாரிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment