
நித்யானந்தா தற்போது ஜாமீனில் விடுதலையானார். அவர் மீண்டும் ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை நடத்தி வருகிறார். அவர் மீதான வழக்கு விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில்லாஞ் ஏஞ்சல்ஸ் நகர் அருகில் உள்ள குட்டித் தீவை விலை பேச முயற்சி செய்தது சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நித்யானந்தாவின் சொத்து விவரங்கள் குறித்து சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்த போது அவர் குட்டித்தீவை விலைக்கு வாங்க பேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. யோகா சாமியார் பாபா ராம்தேவ் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ளார். அது போல் நித்யானந்தாவும் தீவை விலைக்கு வாங்கி ஆசிரமம் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே நித்யானந்தாவுக்கு வெளிநாடுகளில் 15 இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 4 இடங்களில் ஆசிரமம் உள்ளது.
1 comment:
தமிழ்மணம் TOP 20 யில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்...
Post a Comment