Dec 19, 2010

அமெரிக்காவில் இதுவரை மூடபட்ட வங்கிகளின் எண்ணிக்கை 157 ஆகும்.


வாஷிங்டன்,டிச.19:பொருளாதார நெருக்கடியின் காரணமாக திக்குமுக்காடும் அமெரிக்காவில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக ஆறு வங்கிகள் இழுத்து மூடப்பட்டன. இத்துடன் இந்த ஆண்டு அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்த வங்கிகளின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
தி யுனைட்டட் அமெரிக்காஸ் வங்கி, அப்பலாச்சியன் வங்கி, ஜார்ஜியாவில் செஸ்டாட்டி வங்கி, அர்கன்ஸாஸில் சதர்ன் வங்கி, மினஸோட்டாவில் கம்யூனிட்டி தேசிய வங்கி, ஃப்ளோரிடாவில் பாங்க் ஆஃப் மயாமி ஆகிய வங்கிகள் மூடப்பட்டுள்ளன.ஃப்ளோரிடாவில்தான் அதிக வங்கிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் 29 வங்கிகள் அங்கு மூடப்பட்டுள்ளன.

No comments: