நம் நாடு சுதந்திரமடைந்த ஆகஸ்ட் 15ஆம் நாளை கொண்டாடும் விதமாகவும், சுதந்திர தின விழாவை கவுரவிக்கும் விதமாகவும், நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய தியாகிகளை போற்றும் விதமாகவும், போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பதற்காகவும் “வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக” என்ற முழக்கத்தோடு அனைத்து மக்களுக்கும் சுதந்திர வேட்கையை ஊட்டும் வண்ணம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகிறது. இவ்வருடம் ஆகஸ்ட் 15 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று 1000 வீரர்களை கொண்ட அணிவகுப்பு மாலை 3.00 மணியளவில் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு, தாலுகா அலுவலகம் எதிரில் அமைந்துள்ள “மர்ஹும்” முஹம்மது மீரான் திடலில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளாக சமூக சேவையில் தன்னலமற்று பணியாற்றிய, கோவை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் முஹம்மது மீரான் 27 ஜூலை 2010 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர் தன் இளம் வயதிலேயே சமுதாய மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து பல தியாகங்களை செய்தவர். எனவே அவரது நினைவாக சுதந்திர தின அணிவகுப்பு பொதுக்கூட்ட திடலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்குகிறார். மாநில துணைத்தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வரவேற்புரை வழங்குகிறார். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம், வின் டிவி “நீதியின் குரல்” முனைவர் திரு.சி.ஆர். பாஸ்கரன், மாநில பொதுச் செயலாளர் ஏ.அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பின் (NCHRO) தலைவர், வழக்கறிஞர் பவானி.பா.மோகன் மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) மாநில துணைத் தலைவர் ஏ. அப்துல் ஹமீது (எ) பிலால் ஹாஜியார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுக்கூட்டத்தின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.ஷஃபீக் அஹமது அவர்கள் நன்றியுரை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறும்.தேசத்தின் சுதந்திர தின விழாவை பகிர்ந்து கொள்ள மேற்கு மண்டல மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டோர்:
1. ஏ.எஸ். இஸ்மாயீல், மாநில துணைத் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
2. ஜுல்ஃபிகர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர்.
3. ஏ.எஸ்.ஷஃபீக் அஹமது, வடக்கு மாவட்ட தலைவர், கோவை.
4. ராஜா உசேன், மாவட்ட தலைவர், கோவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment