Jul 31, 2010

இந்திய அரசு பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்தும் வெறியாட்டம்.

ஸ்ரீநகர் :காஷ்மீரில் தொடர்ந்து பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்திய அரசு பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்க பார்கிறார்கள். காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு அது ஒன்றும் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானது கிடையாது. பொதுமக்களுக்கும் அரசு பயங்கரவாத படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதை அடுத்து, காஷ்மீரில் முக்கிய நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்து நாட்களுக்கு முன்பு, பாரமுல்லா மாவட்டத்தின் ஜீலம் நதியின் கரையில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில், அரசு பயங்கரவாத படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அதையடுத்து மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு பயங்கரவாத படையினர் தங்கள் வெறியாட்டத்தை துவக்கியுள்ளனர். பாரமுல்லா மாவட்டத்தில், நேற்று ஆரம்போரா கிராமத்தில் கலவரம் வெடித்தது.அரசு பயங்கரவாத போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாயினர். இதையடுத்து காஷ்மீரின் முக்கிய நகரங்களில், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படும், பாஸ்'களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நகரின் பல இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது

No comments: