Jul 16, 2010

ஜார்க்கண்டில் ​ நக்ஸல்கள் தாக்குதல்:​ 5 போலீஸார் சாவு.

லத்திஹார்,​​ ஜூலை 16:​ ஜார்க்கண்டில் வெள்ளிக்கிழமை நக்ஸலைட்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர்.​ 5 பேர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதலில் லத்திஹார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவிவேதி நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.லத்திஹார் மாவட்டத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவிவேதி காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.​ அவரைத் தொடர்ந்து பல போலீஸார் வேனில் வந்துள்ளனர்.

​இவர்கள் வந்த சாலையில் கண்ணிவெடியை வெடிக்கச் செய்து நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர்.​ குல்தீப் திவிவேதியின் கார்,​​ கண்ணிவெடியை புதைத்து வந்திருந்த இடத்தை கடந்து சென்ற ஒரு சில நிமிடத்தில் கண்ணிவெடிகள் வெடித்துள்ளன.ஆனால் கண்ணி வெடிகள் வெடிக்கும் நேரத்தில் போலீஸாரை சுமந்த வேன் வந்துள்ளது.​ இதில் அந்த வேனில் வந்த 5 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.​ 5 பேர் காயமடைந்தனர்.

​இந்தத் தாக்குதலில் போலீஸ் வேன் பலத்த சேதம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.நக்ஸல்களை ஒழிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதல்வர்கள் கூட்டம் நடந்து முடிந்த சில தினங்களில் நக்ஸல்கள் இப்படியொரு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

No comments: