பனாஜி:கோவா குண்டுவெடிப்பில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சமர்ப்பிக்கும் குற்றப்பத்திரிகையினை ஆராய்ந்த பின்னரே சனாதன் சன்ஸ்தா ஹிந்துத்துவா இயக்கத்தை தடைச் செய்வதுக் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் தெரிவித்தார். குற்றப்பத்திரிகையை ஆய்வுச் செய்ய டி.ஜி.பி. பீம்சென் தாஸிடம் ஒப்படைக்கப்படும். சனாதன் சன்ஸ்தாவை தடைச் செய்வதுக் குறித்து இதுவரை மாநில அரசு ஆலோசிக்கவில்லை. தடைச் செய்யப்படுமா என்பதுக் குறித்து இப்பொழுது கூற இயலாது என அவர் தெரிவித்தார்.
தேசிய புலனாய்வு ஏஜன்சி மட்காவ், வாஸ்கோ நீதிமன்றங்களில் வருகிற மே 17 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கோவா மாநிலம் கோவாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஸான்கோலாவில் வெடிக்காத குண்டுகளை போலீசார் கைப்பற்றி செயலிழக்க வைத்தனர். கோவா மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவைக்க திட்டமிட்ட 4 ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தினரை போலீசார் கைதுச் செய்திருந்தனர். இவர்கள் சனாதன் சன்ஸ்தான் என்ற ஹிந்து பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள். இச்சம்பவம் நிகழ்ந்தப் பிறகு சன்ஸ்தானின் ஆசிரமத்தை போலீசார் பல முறை சோதனையிட்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment